ரெய்கி தீட்சையை பெற்ற மாணவர் தான் பெற்ற தீட்சையை உணர வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. ரெய்கி ஆற்றல் உடலில் இருந்தாலும் அதை தொடவோ, பார்க்கவோ, உணரவோ முடியாது. தொடவோ, பார்க்கவோ அல்லது உணரவோ முடியவில்லை என்பதனால் உடலில் அந்த ஆற்றல் இல்லை என்று அர்த்தமும் கிடையாது. தொடர்ந்து பயிற்சிகளை செய்துவரும் போது உடலிலும் தன்னை சுற்றியும் இருக்கும் ரெய்கி ஆற்றலை மாணவரால் உணர முடியும்.