ரெய்கி ஆற்றல்

ரெய்கி ஆற்றல் என்பது ரெய்கி மாஸ்டரால் உருவாக்கப்படும் ஆற்றல் அல்ல. அது இயற்கையில் உருவான பிரபஞ்சத்தின் ஆற்றல் தான். இயற்கையின் ஆற்றல், ரெய்கி மாஸ்டருக்கும் அவரின் நோக்கத்துக்கும் ஏற்ப செயல்வடிவம் அடைகிறது. ரெய்கி மாஸ்டர்கள் அந்த இயற்கை ஆற்றலை இரவல் வாங்கி அதை குறிப்பிட்ட நபர் மீதோ, பொருள் மீதோ, இடத்தின் மீதோ செலுத்துகிறார்கள். உதாரணத்துக்கு கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீரை அள்ளி நம் தேவைக்கு பயன்படுத்துவதைப் போன்ற செயல்தான் இது.

“ஒரு மனிதருக்கும் இன்னொரு மனிதருக்கும் இருக்கின்ற வேற்றுமை என்பது திறமையினால் அல்ல. அது ஆற்றலினால் உருவானது”. - தோமஸ் அர்னால்டு

ஆற்றல்களின் வித்தியாசங்கள் 
இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி இருப்பது ஒரே ஆற்றல்தான். ஆனால் அதன் முழு ஆற்றலையும் உபயோகத்தையும் சாதாரண மனிதனின் அறிவைக் கொண்டு புரிந்துக் கொள்ள முடியாது. இந்த ஆற்றல் நன்மையானதாகவும் தீமையானதாகவும் இரு வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கலாம். இந்த பிரிவினை அதன் தன்மைகளை கொண்டு மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளது. அதன் இயல்புகளை கொண்டு அல்ல.


இந்த பிரிவினையானது ஒரு மனி
தனின் வலது கையையும் இடது கையையும் போன்றது. வேற்றுமைகள் இருந்தாலும் ஒரே உடலின் அங்கம்தான் அவை. ஒரே நெருப்பை சிலர் வீட்டில் சமைப்பதற்கும், சிலர் வீட்டையே கொளுத்துவதற்கும் பயன்படுத்துவதைப் போல. அது நெருப்பின் தவறல்ல, அதை தவறாக பயன்படுத்தும் மனிதர்களின் தவறு. இந்த ஆற்றல் இடத்துக்கும், சூழ்நிலைக்கும், தேவைக்கும், நோக்கத்துக்கும், ஏற்ப தனது தன்மையை மாற்றிக் கொள்ளக் கூடியது.

இந்த ஆற்றலை நல்ல நோக்கத்துடன் பயன்படுத்தும் போது நல்ல விளைவுகளையும், தீய நோக்கத்துடன் பயன்படுத்தும் போது தீய விளைவுகளையும் உண்டாக்குகிறது. மனிதர்களுக்கு வறுமை, நோய், துன்பம் போன்றவை உருவாக காரணமாக இருப்பதும். அவை நீங்கி செல்வ செழிப்பு, ஆரோக்கியம், மகிழ்ச்சி போன்றவை உருவாக காரணமாக இருப்பதும் இதே ஆற்றல்தான். மனிதர்களை பேயாக ஆட்டிப்படைப்பதும், அந்த பேயை விரட்டுவதும் ஒரே ஆற்றல் தான். அதனால்தான் பெரியவர்கள் நடப்பது நல்லதோ கெட்டதோ எல்லாம் அவன் செயல் என்று கூறுகிறார்கள்.

நல்ல ஆற்றல்களை கிரகித்துக்கொள்ளும் மேலும் அதை தக்கவைத்துக் கொள்ளும் மனிதருக்கு உடலில் ஆரோக்கியமும், சுறுசுறுப்பும், மன அமைதியும், மகிழ்ச்சியும், புத்திக் கூர்மையும், நல்ல உறவுகளும், நல்ல நட்பும், சிறப்பான திருப்திகரமான வாழ்க்கையும், வாழ்க்கையில் மேன்மையும், அமையும்.

தீய ஆற்றல்களை உடலில் கிரகித்தால் அல்லது அவை உடலில் தேங்கினால் உடலில் நோய்களும், வலிகளும், உடல் உபாதைகளும், குறைபாடுகளும், மனதில் கவலையும், பதட்டமும், புத்தி மந்தமும், வாழ்க்கையில் துன்பங்களும், வறுமையும், தவறான உறவுகளும் நட்பும் உருவாக வாய்ப்பிருக்கிறது.

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.