புயல் கடந்த பாதை

தென்னமர தோப்புக்குள்ளே
நீ வந்து போனதுதான்
புயல்வீசக் காரணமோ
மரம்சாயக் காரணமோ

தென்னை மரங்கள்
சாயக்கண்டு
கஜா மீது
பலி சொன்னோம்

உன் பாதம் தீண்டிவிட
ஆசையாய் பணிந்திருக்கும்
முறிந்ததையும் மறந்துவிட்டு
நீ நடந்த பாதைகளின்
வாசனையை நுகர்ந்திருக்கும்

உன்னழகை கண்டுவிட்டால்
உன் பாதம் பட்டுவிட்டால்
ஆலமும் சாய்ந்துவிடும்
பாவம் தென்னை என்ன செய்யும்

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.