மனிதர்களுக்கு உண்டாகும் நோய்கள்

மனிதர்களுக்கு நோய்கள் உண்டாவது ஒரு நல்ல அறிகுறியாகும், காரணம்  நோய்கள் என்று நாம் கூறுபவை பெரும்பாலும் உடலில் உண்டாகும் தொந்தரவுகளை தான்.  உண்மையைச் சொல்வதானால் நோய்கள் எப்போதுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. உதாரணத்திற்கு ஒருவருக்கு வலி உண்டாகும் வரையில் அவர் உடலில் இருக்கும் கேன்சர் வெளியில் தெரிவதில்லை. அதற்காக அவருக்கு உடலில் கேன்சர் இல்லை என்றும் அர்த்தமில்லை. கேன்சர் என்ற நோய் உண்டாகி அது வலியாக தன்னை வெளிக்காட்டிக்கொள்ள ஐந்து வருடங்கள் கூட ஆகலாம்.

அந்த ஐந்து வருடங்களாக உடலில் கேன்சர் இருந்த பொழுதும் எந்த தொந்தரவும் இருக்காது.  அதனால் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் உடலின் தொந்தரவுகள் என்பவை நோயின் அறிகுறிகள் அல்ல நோய்கள் குணமாகின்றன என்பதின் அறிகுறிகள்  அதனால்தான் நான் கூறுகிறேன் நோய்களை என்பவை நாம் மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயம்.

நோய்கள் உருவானால் உடலின் கட்டளைகளைப் புரிந்து கொண்டு, உணவைக் குறைத்து, ஓய்வில் இருக்க வேண்டும். உடலும், மனமும், புத்தியும், இணைந்து ஒரே பாதையில் பயணித்தால் மிகவும் விரைவாகவும் எளிதாகவும் நோய்கள் குணமாகி ஆரோக்கியம் திரும்பிவிடும்.To Top