மன திருப்தி அடையுங்கள்

 பிரபஞ்சத்திடமிருந்து உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் பெறுவதற்கு அடிப்படை தகுதியானது இதுவரையில் நீங்கள் பெற்ற அனைத்து உதவிகளுக்கும் முதலில் நன்றி செலுத்த வேண்டும். இதுவரையில் உங்களுக்கு கிடைத்த அனைத்துக்கும் நன்றி செலுத்தி, உங்களிடம் இருப்பதை கொண்டும் திருப்தி அடைய வேண்டும். இதுவரையில் கிடைத்த வற்றுக்கு நன்றி செலுத்தாத வரையிலும், கிடைத்ததை கொண்டு திருப்தி அடையாத வரையிலும் புதிதாக எதையும் அடைவதற்கும் கேட்பதற்கும் உங்களுக்கு தகுதி இல்லாமல் போகிறது. திருப்தியும் நன்றியுணர்வும் இல்லாமல் எதை கேட்டாலும் கிடைக்காது.

சிறியதாகவோ பெரியதாகவோ எது கிடைத்தாலும், எது உங்களிடம் இருந்தாலும், அதை கொடுத்ததற்காக இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்துங்கள். நன்றி உணர்வோடு இருங்கள். வாழ்க்கையில் எது கிடைத்தாலும் செல்வமோ, பணமோ, சொத்தோ, நகையோ, ஆரோக்கியமோ, மகிழ்ச்சியோ, அன்போ, காதலோ, நிம்மதியோ, அனுபவமோ, அனைத்துக்கும் நன்றி செலுத்துங்கள். நன்றி உணர்வோடு இருங்கள்.

இதுவரையிலும், இப்போதும், இதற்கு பிறகும் உங்களிடம் இருக்கும் கிடைக்கும் அனைத்துக்கும் நன்றி செலுத்துங்கள். இருப்பதை கொண்டு முழு திருப்தி அடையுங்கள். நன்றி உணர்வோடு இருங்கள். அதற்கு பிறகு உங்களின் தேவைகள் அனைத்தும் நீங்கள் கேட்காமலேயே பூர்த்தி செய்யப்படும்.


Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.