ரெய்கி தீட்சை - Attunement

ரெய்கியில் தீட்சை (Attunement) என்பது ஒரு மாஸ்டர் தனது மாணவருக்கு அவரின் குண்டலினி ஆற்றலையும், சக்ராக்களையும் சீர்படுத்தி. பின் தனது ஆற்றலை அவருடன் பகிர்ந்துக் கொள்வதாகும். பிரபஞ்ச ஆற்றலான “கி”யின் உதவியுடன் “கி”யை மாணவரின் உடலுக்கு திருப்பிவிடுவார். அந்த ஆற்றல் மாணவரின் உடலுக்குள் முழுமையாக நுழைந்து செயல்பட தொடங்கும். தீட்சை பெற்ற மாணவரின் ஆற்றல் அந்த மாணவரின் சக்தி, சக்ராக்கள், ஆரா, மனம் மற்றும் உடலை சீர்படுத்த தொடங்கும். பிரபஞ்ச ஆற்றல்களை பயன்படுத்தும் திறனும் அதிகரிக்கும்.

ரெய்கியில் தீட்சை (Attunement) பெற்ற மாணவரை ஒரு தொலைக்காட்சி பெட்டியுடன் ஒப்பிடலாம். தொலைக்காட்சியை அதற்குரிய அலைவரிசையுடன் சரியாக இணைக்கும் போது நமக்கு தேவையான ஒளிபரப்பை அது வழங்குவதைப் போன்று, முறையாக தீட்சை பெற்றவுடன் மாணவரின் ஆற்றல் பிரபஞ்சத்துடன் இணைந்து அந்த மாணவருக்கு தேவையான விசயங்களை தனக்குள் கிரகித்துக் கொள்ளும்.

ரெய்கி தீட்சைக்கு முன் ஏற்பாடுகள் 
ரெய்கி தீட்சை வழங்குவது என்பது ஒரு முக்கியமான மற்றும் புனிதமான காரியமாகும். தீட்சை வழங்கப்படும் இடம் சுத்தமாகவும், அமைதியாகவும், பிற மனிதர்கள் மற்றும் பிற விசயங்களின் இடையூறுகள் இல்லாமலும் இருப்பது முக்கியம். முடிந்தால் தீட்சை வழங்கும் செயலை கடற்கரை ஓரம், நதிக்கரை, தோட்டம், புல்வெளி, காடு, மலை போன்ற அமைதியான இடங்களில் செய்ய வேண்டும்.

மாஸ்டரும் மாணவரும் அமைதியாகவும் மன ஓர்மையுடனும் இருக்க வேண்டும். உடலாலும், மனதாலும், சக்தி நிலையிலும் சம தன்மை ஏற்பட வேண்டும். அப்போதுதான் சக்தி மாற்றம் முழுமையாகவும் நிறைவாகவும் ஏற்படும். அதன் மூலம் அந்த மாணவர் பல நன்மைகளை அடைவார். 

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.