கேள்வி பதில்
கேள்வி பதில்

ஆற்றலை பயன்படுத்தும் காலம்


ஒரு மாணவர் தீட்சை பெற்றுவிட்டால் அவர் பெற்ற தீட்சையும் ஆற்றலும் கடைசி வரையில் அவருடன் இருக்கும். தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் இருந்தாலோ, பயிற்சிகள் செய்யாமல் இருந்தாலோ ஆற்றல் சற்று குறையலாம் அல்லது அதன் பலன்கள் தாமதமாகலாம். மற்றபடி ஒருமுறை முழுமையாகவும் முறையாகவும் தீட்சை பெற்றுவிட்டால் இறுதிவரையில் அது நம்முடன் இருக்கும்.

தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்தாலோ, பயிற்சிகள் செய்யாமல் இருந்தாலோ பெட்ரோல் தீர்ந்து போன வாகனத்தைப் போல் உடலும், மனமும், ஆராவும், சக்ராக்களும் ஆற்றலை இழக்கலாம். மீண்டும் பயிற்சிகளை தொடங்கும் போது அனைத்தும் மீண்டும் முறையாக செயல்பட தொடங்கும். ஒருவேளை ஒரு மாணவர் முறையாக அல்லது முழுமையாக தீட்சை பெறவில்லை என்று கருதினால் வேறு ஒரு மாஸ்டரிடம் மீண்டும் தீட்சை பெற்றுக் கொள்வது சிறப்பாகும்.


« PREV
NEXT »

No comments