வருடப் பிறப்பு நல் வாழ்த்துக்கள்


2020-ஆம் புதிய ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் நமக்கு இந்த ஆண்டும், வருகிற ஆண்டுகளும் நிம்மதியும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும், செல்வமும், நிறைந்த ஒரு அருமையான வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஒவ்வொரு நொடியும் புதிதாக பிறந்து கொண்டிருக்கும் நமக்கு ஒவ்வொரு நாளும் புதிய நாள்தான். நேற்று என்ற குப்பைகளையும், நாளை என்ற மாயையையும், சுமந்து கொண்டிருக்காமல், மனச்  சுமைகளை இறக்கிவிட்டு சுதந்திரப் பறவைகளாக சிறகடித்து பறந்து நமக்கு வழங்கப்பட்ட மேன்மையான இந்த மனிதப் பிறப்பை புரிந்துக் கொண்டு, உணர்ந்துக் கொண்டு திருப்தியுடன் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து, அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்வோம்.

நிரந்தரமான வாழ்க்கையைத்  தேடி ஓடிக்கொண்டிருக்கும் ஆன்மாக்கள், நிரந்தரமில்லாத இந்த உலகத்திற்கு அடிமையாகாமல் என்றும் விழிப்புணர்வுடன் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும். ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, தனது ஓட்டத்தை நிறுத்தித் தேங்கிவிடும்போது சாக்கடையாக மாறி விடுகிறது. மனிதர்களாகிய நாமும்  வாழ்க்கை ஓட்டத்தில் தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி ஆறுகளாக ஓடி, கடலில் கலந்துவிட வேண்டும். எந்த ஒரு உலக ஆசையிலும், உலக மாயையிலும் சிக்கி சாக்கடையாக இந்த உலகிலேயே தேங்கிவிடக் கூடாது.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் நிம்மதியும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும், செல்வமும், வாழ்க்கைக்கு அவசியமான அனைத்தும் நிறைந்த நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ எனது பிரார்த்தனைகள், வாழ்த்துக்கள்.

ராஜா முகமது காசிம்Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.