வீட்டில் செல்வம் சேர, சேர்த்த செல்வம் நிலைக்க

வீட்டில் செல்வம் சேர, சேர்த்த செல்வம் நிலைக்க சரி பார்க்க வேண்டிய விசயங்கள்.
 1.  காசு பணத்தை மதிக்க வேண்டும்.
 2. பணத்தை மரியாதையுடனும் மதிப்புடனும் கையாள வேண்டும்.
 3. பணத்தை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும்.
 4. பணத்தை கணக்கு வைத்து செலவு செய்ய வேண்டும்.
 5. பணத்தை கையில் வைத்துக் கொள்ளாமல் வங்கியில் போட்டு, தேவைக்கு ஏற்ப எடுத்து செலவு செய்வது நல்லது.
 6. நமது சேமிப்புக்கு அதிகமாக உள்ள பணத்தை மட்டுமே செலவு செய்ய வேண்டும்.
 7. வரும் பணத்திலிருந்து சிறிய அளவையாவது சேமித்து வைக்க வேண்டும்.
 8. வீன் விரயம் மற்றும் கஞ்சத்தனம் இருக்கக் கூடாது.
 9. உரிமை உள்ளவர்களுக்கும் ஏழைகளுக்கும் இருப்பதில் கொடுக்க வேண்டும்.
 10. பணத்தை வாங்கும் போது இரண்டு கைகளால் வாங்குவது நல்லது.
 11. வீடு தரையை விடவும், சாலையை விடவும் பள்ளமாக இருக்கக் கூடாது.
 12. வீடு முச்சந்தி வீடாக இருக்கக் கூடாது.
 13. வீடு எந்த நேரத்திலும் இருட்டாக இருக்கக் கூடாது.
 14. பொழுது சாயும் நேரங்களில் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். காலை வரையில் அணைக்கக் கூடாது.
 15. முடியாதவர்கள் மஞ்சள் அல்லது சிகப்பு வர்ண விளக்கை ஏற்ற வேண்டும்.
 16. காற்றும் மற்றும் வெயிலும் வீட்டின் உள்ளே வந்து போகும் அளவில் ஜன்னல் திறந்து இருக்க வேண்டும்.
 17. வீட்டின் நுழை வாயிலில் செருப்பை கழட்டிப் போட கூடாது.
 18. வியாள கிழமை மாலை ஊதுவத்தி ஏற்றுவது நல்லது.
 19. தற்போது உங்களிடம் இருக்கும் அனைத்துக்காகவும் இறைவனுக்கு தினம் நன்றி கூறுங்கள்.
 20. முந்தைய ஜென்மங்களிலிருந்து இன்று வரையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த அனைத்து பாவங்களுக்கு இறைவனிடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்.

To Top