புதியவை
latest

திருச்சியில் நான் பார்த்த மனிதர்கள்

இறைவன் இந்த உலகை எவ்வாறு படைத்திருக்கிறான் என்பதை அறிந்துகொள்ள எனக்கு ஆர்வம் அதிகம். அதனால் நான் எங்குச் சென்றாலும், அங்கு இருக்கும் தாவரங்கள்,விலங்குகள் மற்றும் மனிதர்களை கூர்ந்து கவனிப்பது வழக்கம். நான் மதுரைக்கும் திருச்சிக்கும் சென்றிருந்தேன். அங்கு நான் பார்த்த சில மனிதர்களைப் பற்றித்தான் இந்த கட்டுரையில் பேசப் போகிறேன்.

நான் பார்த்த வெளி நோயாளிகள்
மதுரையில் ஒரு பிரபலமான மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அங்கு நான் பார்த்த நோயாளிகளில் பெரும்பாலானோர், தவறான வாழ்க்கை முறைகளினால் உருவான தொந்தரவுகளால் அங்கு வந்திருந்தனர். உண்மையில் அவர்கள் நோயாளிகளே அல்ல ஆனால் தன்னைதானே நோயாளிகள் என்று தவறான நம்பிக்கை கொண்டவர்கள்.

அந்த மருத்துவமனையில் நான் பார்த்த வெளி நோயாளிகளின் தொந்தரவுகளுக்கு மிக முக்கிய காரணங்களாக இருக்கக் கூடியவை:
1. குடிப் பழக்கம்
2. புகையிலை பழக்கம்
3. தூக்கம் இன்மை
4. தாமதமாக உறங்குவது
5. இரவில் விழித்திருப்பது
6. அதிகமாக உண்பது
7. பசி இன்றி உண்பது
8. மனம் நிம்மதி அற்று இருப்பது
9. இரசாயனம் கலந்த உணவுகள்
10. இரசாயன மருந்து மாத்திரைகள்

மிகச் சுலபமாக மாற்றிக்கொள்ளக் கூடிய இந்த சில விசயங்கள்தான் அங்கு இருந்த 80% மக்களின் தொந்தரவுகளுக்கு காரணமாக இருக்கக் கூடும். இந்த பழக்கங்களை மாற்றிக் கொண்டால் அனைத்து தொந்தரவுகளும் சுயமாக நீங்கிவிடும். அதை விடுத்து இலட்சக் கணக்கில் பணம் செலவழித்து உடலின் சிறிய தொந்தரவுகளைப் பெரிய நோய்களாக மாற்றிக் கொள்கிறார்கள்.

குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின்.

திருவள்ளுவர் மிக அழகாகக் கூறி சென்றுள்ளார். இதற்கு முந்தைய வேளையில் உண்ட உணவு முழுதாக செரித்து விட்டதா என்பதை அறிந்து. இப்போது இருக்கும் பசியின் அளவையும் அறிந்து, பசியின் அளவுக்கு தக்க உணவு உட்கொண்டால். இந்த உடலை பாதுகாக்க எந்த மருந்தும் தேவைப்படாது.

நான் பார்த்த குழந்தை நோயாளிகள்
குழந்தைகளுக்கான பிரிவிலிருந்த குழந்தைகள் பெரும்பாலானோர் தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் போதே நோயுடன், அல்லது உடல் குறையுடன் வந்தவர்கள்.

இந்தக் குழந்தைகள் நோயாளிகளாகப் பிறப்பதற்கும் உடல் ஊனத்துடன் பிறப்பதற்கும் அந்த தாய் உட்கொண்ட இரசாயன மருந்துகள் தான் மிக முக்கிய காரணமாக இருந்திருக்கும். இந்த உண்மையை மறைப்பதற்கு, சொந்தத்தில் திருமணம், சத்து போதவில்லை என்று ஏதாவது பொய்யைச் சொல்வார்கள்.

மருத்துவர் சொல்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக கண்ட விட்டமின், கல்சியம், சத்து மாத்திரைகளைத் தின்று, ஊசிகளைப் போட்டுக்கொண்டு. பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு கெடுதல் செய்கிறார்கள்.

ஆங்கில மருத்துவத்தின் பணம் பண்ணும் ஆசைக்கு இந்தத் தாய்மார்கள் பலியாகிறார்கள். தாய்மார்களே தயவு செய்து கொஞ்சம் சிந்தித்துச் செயல்படுங்கள். மருத்துவர் என்றாலும் அவரும் ஒரு வியாபாரிதான், நீங்களும் உங்கள் குழந்தைகளும் நோயாளிகளாக இருக்கும் வறைதான் அவனுக்கு வியாபாரம், வருமானம் எல்லாம்.

நான் பார்த்த பெண்கள்
திருச்சியில் சாரதாஸ் துணிக்கடை வாசலில் நின்று கொண்டு அங்கு சாலையில் நடக்கும் மனிதர்களைக் கவனிக்கத் தொடங்கினேன்.

முன்பெல்லாம் அந்தப் பெண்ணிடம் கேட்டு அல்லது தாலி, மெட்டி இருக்கிறதா என்று பார்த்துத்தான் ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகி விட்டதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். அந்த சிரமம் நமக்கு வேண்டாம் என்று ஆங்கில மருத்துவர்கள், பிள்ளை பெற்ற பெண்கள் அனைவரையும் டன்கர் லாரிகளை போன்று மாற்றிவிட்டார்கள். பார்த்த உடனே தெரிந்து விடுகிறது, இவர்கள் குழந்தை பெற்ற பெண்கள் என்பது.

கிராமப்புற பெண்களும், ஏழைப் பெண்களும், ஆங்கில மருத்துவம் செய்யாத பெண்களும், நம் தாயும், பாட்டியும் 10 பிள்ளைகள் பெற்றும் கூட உடலை ஒள்ளியாகவும், உடல் கச்சிதமாக வைத்திருக்கும் போது.

நகரத்து பெண்களுக்கு மட்டும் ஏன் உடல் பெருக்கிறது என்று சிந்திக்காமல். பிள்ளை பெற்றாலே உடல் பெருத்துவிடும், இடுப்பு, பிட்டம் எல்லாம் பெருத்துவிடும் என்று தவறாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள் இன்றைய நவீன பெண்கள்.

ஏழைப் பெண்கள் எல்லாம் ஆரோக்கியமாக, சுயமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் போது, நடுத்தர வற்கத்தின் பெண்களும், பணக்கார வீட்டுப் பெண்களும் மட்டும் அறுவைசிகிச்சை செய்து குழந்தை பெறுவது ஏன்?. பிள்ளை பெற்ற பின்பு உடல் பெருப்பது ஏன்?. பிள்ளை பெற்ற பின்பு, பால் சுரக்காமல் இருப்பது ஏன்?. அந்தத் தாய்க்கு பல வகையான ஆரோக்கிய சீர்கேடுகள் உண்டாவது ஏன்? என்று சிந்திப்பதில்லை.

பிறந்த குழந்தைக்கும், பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு வரும் அனைத்து ஆரோக்கிய தொந்தரவுகளுக்கும் ஒரே மூல காரணம் அவர்கள் உட்கொள்ளும் சத்து மாத்திரைகளும், அவர்கள் கர்ப்பமான பிறகு போட்டுக்கொள்ளும் ஊசிகளும் தான்.

தயவு செய்து இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பயன்படுத்தாதீர்கள். ஸ்கேன் எடுக்காதீர்கள். முடிந்தால் கர்ப்பம் தரித்த பின்பு ஆங்கில மருத்துவர்கள் முகத்திலேயே விழிக்காதீர்கள் ஆரோக்கியமான குழந்தைகளை ஈன்றெடுங்கள்.

நான் பார்த்த முதியவர்கள்
அங்கு நான் பார்த்த முதியவர்கள் பலர் எலும்பு தொடர்புடைய நோய்களாலும், உடல் பலம் இல்லாமலும் காணப்பட்டார்கள்.

இதற்குக் காரணம் அவர்களின் செரிமான கோளாறும் மலச்சிக்கலும்தான். உணவைக் குறைத்து, காரம் மற்றும் புளிப்புச் சுவைகளை குறைத்து. பசித்தால் மட்டும் அளவோடு உணவை உட்கொண்டு. இரவு உணவைச் சமைக்காத உணவாக அல்லது வெறும் பழங்களாக மாற்றிக் கொண்டாலே அவர்களின் அனைத்து தொந்தரவுகளும் குணமாகும். ஆரோக்கியம் மேன்படும்.

ஆரோக்கியமாக வாழ
இரசாயனங்களை அறவே தவிர்த்துவிடுங்கள். ஆங்கில மருத்துவம் வேண்டாம். பசித்தால் மட்டும் அளவோடு உண்ணுங்கள். பழங்கள், காய்கறிகள் அதிகமாக உண்ணுங்கள். இரவு விரைவாக படுக்கைக்குச் செல்லுங்கள்.

ஆரோக்கியமாக வாழ்வோம், ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்



« PREV
NEXT »

No comments