புதியவை
latest

இயற்கை வாழ்வியல் என்றால் என்ன? ஏன் இயற்கையைச் சார்ந்து வாழ வேண்டும்?.

இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவம், இயற்கையைச் சார்ந்து வாழ்தல், என்றெல்லாம் குறிப்பிடுகிறார்களே அவை என்ன?. இயற்கை வாழ்வியல் என்றால் என்ன? ஏன் இயற்கையைச் சார்ந்து வாழ வேண்டும்?.

இயற்கை மருத்துவம் பார்ப்பவர்களுக்கும், இயற்கையான வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், செயற்கையாக ஆங்கில மருத்துவம் பார்ப்பவர்களுக்கும், இரசாயனங்களை பயன்படுத்துபவர்களுக்கும், வாழும் நாட்கள் ஏறக்குறைய ஒன்றாகத்தானே இருக்கிறது. பிறகு ஏன் இயற்கையை சார்ந்து வாழ வேண்டும்?.

இயற்கையாக வாழ்பவர்கள் மட்டும் 150 ஆண்டுகள் வாழ்வார்கள் என்றால் பரவாயில்லை. இயற்கை வாழ்வியலுக்கும், செயற்கை வாழ்வுக்கும், பெரிதாக ஒரு வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லையே, இருவருடைய ஆயுட்காலமும் ஏறக்குறைய ஒன்றாகத்தானே இருக்கிறது. என்று கேட்பவர்களுக்கு பதில்.

இயற்கையாக வாழ்பவர்களுக்கும், செயற்கையாக வாழ்பவர்களுக்கும், ஆயுள் காலம் ஏறக்குறைய ஒரே அளவு இருக்கலாம் ஆனால் அவர்களின் வாழ்க்கைத் தரம், மிகவும் மாறுபட்டதாக இருக்கும்.

இயற்கையை சார்ந்து வாழ்பவர்கள் நோய் நொடிகள் எதுவுமின்றி, நிம்மதியாக வாழலாம், சந்தோஷமும், மகிழ்ச்சியும், அவர்களின் வாழ்க்கையில் இருந்து கொண்டே இருக்கும். ஒருவேளை நோய் நொடிகள் உருவானால் வந்தது கூட தெரியாமல், நோய் நொடிகள் விரைவாக குணமாகிவிடும்.

செயற்கையாக வாழ்பவர்களுக்கு, ஆரோக்கியமாக இருப்பது போல் தோன்றினாலும். நிற்க முடியவில்லை, நடக்க முடியவில்லை, சாப்பிட முடியவில்லை, சாப்பிட்டால் ஜீரணிக்க முடியவில்லை, மலம் கழிக்க முடியவில்லை, உறங்க முடியவில்லை, இல்லறத்தில் சந்தோஷங்களை அனுபவிக்க முடியவில்லை, மன நிம்மதியில்லை, இடுப்பு வலிக்கிறது, கை கால் வலிக்கின்றன, தலை வலிக்கிறது, உடல் உறுப்புகளின் பலம் குறைகிறது, உடல் உறுப்புக்களின் செயல் திறன் குறைகிறது, என்று ஏதாவது ஒரு உபாதையுடன் அவர்களின் வாழ்நாட்களை கழிக்க வேண்டிவரும்.

செயற்கையாக வாழ்பவர்கள், மன நிம்மதியின்றி எதையாவது ஒன்றைப் பார்த்து பயந்து தங்களின் வாழ்நாட்களை அச்சத்துடன் கழிக்க நேரிடும்.

இயற்கையாக வாழ்தல் என்பது ஒன்றும் பெரிய கடினமான காரியமில்லை. உங்களுடைய உடலும், மனம், என்ன சொல்கிறது என்பதை மட்டும் பின்பற்றி வாழ்தல்தான், இயற்கையை சார்ந்து வாழ்தல். இந்த உலகத்துக்கும், இயற்கைக்கும், அதன் உயிர்களுக்கும், உங்களுக்கும் எந்த வகையான தீங்கும் செய்யாமல் வாழ்வதுதான் இயற்கை வாழ்வு.

இயற்கையாக வாழ்பவர்கள் சில ஆண்டுகள் வாழ்ந்தாலும், நிம்மதியாக, மகிழ்ச்சியாக, தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து விட்டு செல்வார்கள். நோய்நொடி, வலிகள், குறைபாடுகளுடன் நூறு ஆண்டுகள் வாழ்வதை விடவும், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், 50 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டுச் செல்வது சிறப்பல்லவா?.

அடுத்ததாக பொருளாதார தாக்குதல். செயற்கையாக வாழ்பவர்கள் தங்களின் வாழ்நாட்களில் சம்பாதிப்பவற்றில் பாதிக்கு மேல் ஏதாவது ஒரு வகையில் பெரும் காப்ரேட் நிறுவனங்களிடம் இழந்துவிடுவார்கள். மருத்துவம், அழகு, ஆரோக்கியம், நாகரீகம், கல்வி, நவீனமயமாக்கல், முன்னேற்றம், சந்தோசம், குதுகலம், என்று ஏதாவது ஒரு வழியில் அவர்கள் சம்பாத்தியம் பணத்தை பெரும் நிறுவனங்களிடம் இழப்பதை அவர்கள் உணர மாட்டார்கள்.

நவீனமயமாக்கலும், நவீன மருத்துவமும் மக்களை முட்டலாகுகிறது. பெரும் நிறுவனங்களுக்கு அடிமைகளாக வைத்திருக்கிறது.

சிந்தியுங்கள்..


« PREV
NEXT »

No comments