Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

404

Sorry, the page you were looking for in this blog does not exist. Back Home

அண்மைய பதிவுகள்

தியான நிலை என்பது என்ன?

தியானத்தில் இருக்கும் போது, பல வகையான உணர்வுகளை தியானம் செய்பவர்கள் அனுபவிப்பார்கள். அந்த அனுபவங்களைத்தான் தியான நிலை என்று பலர் எண்ணுகிறார்கள். நானும் தியானத்தின் போது பலவகையான அனுபவங்களை அனுபவித்திருக்கிறேன். அந்த அனுபவங்களை கொண்டு நான் எதையோ சாதித்து விட்டேன், நான் எதையோ அடைந்து விட்டேன் என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். பின்புதான் உணர்ந்து கொண்டேன் என் அனுபவங்கள் அனைத்தும் என் மனதினால் உருவாக்கப்பட்ட கற்பனைகள் என்று.

தியானத்தை பற்றி பேசுபவர்களுக்கு கூட உண்மையான தியான நிலை என்பது எப்படி இருக்கும் என்று தெரியுமா என்பது சந்தேகமே. தியான நிலையை விளக்கும் அளவுக்கு எனக்கு தெளிவு கிடையாது ஆனாலும் நான் உணர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

தியானத்தின் போது தியானம் செய்பவர்கள் அனுபவிக்கும், எண்ணங்கள், உணர்வுகள், அவர்கள் செவிமடுக்கும் ஓசைகள், காணும் காட்சிகள் அனைத்தும் அவர்களின் கற்பனைகள் மட்டுமே. அவை எதுவும் உண்மை கிடையாது. அதனால் தியானத்தில் கிடைக்கும் உணர்வுகள், எண்ணங்கள், மற்றும் காட்சிகளை கண்டு மகிழ்ச்சி அடையவும் தேவையில்லை, பயப்படவும் தேவையில்லை. தியானத்தின் போது தெய்வத்தைத் கண்டாலும் பேயைக் கண்டாலும் இரண்டுமே கற்பனைதான், அதனால் மகிழ்ச்சியோ பயமோ இரண்டுமே தேவையில்லை.

தியானம் என்பதே எண்ணங்கள் அற்ற நிலைக்கு செல்லும் ஒரு வழிமுறைதான். எண்ணங்களின் குவியலான மனமானது செயல்படாமல், புதிய எண்ணங்கள் உருவாகாமல், நாம் நம்மோடு தனித்திருக்கும் நிலைதான் தியானம். அந்த தியான நிலையில் நாம் மட்டுமே இருக்க வேண்டும், நம்மை தவிர நம்முடன் எது இருந்தாலும் அது நமது கற்பனைகள் மட்டுமே.

சரி உண்மையான தியான நிலை எப்படி இருக்கும்?. சில எடுத்துக்காட்டுகள் சொல்கிறேன். இரயில் தண்டவாளத்தின் அருகில் இருக்கும் போது ஒரு இரயில் நம்மை கடந்து சென்றால், இரயில் செல்லும் ஓசை ஒரே இரைச்சலாக இருக்கும். அந்த இரயில் கடந்து சென்ற பிறகு ஒரு அமைதி உருவாகுமே அதுதான் தியானத்தின் நிலை. சினிமாவிலோ, கூட்டத்திலோ, சாலைகளிலோ இருக்கும் போது, ஒரு இரைச்சலான சத்தம் உருவாகி, பின்னர் அந்த சத்தங்கள் ஓயும்போது ஒரு அமைதி நிலவுமே அதுதான் தியான நிலை.

அந்த அமைதிதான், அந்த சூழ்நிலைதான் மனிதனின் உண்மையான சுயநிலை. அந்த அமைதியை அடைவதுதான் தியானத்தின் நோக்கம். அந்த அமைதியை அடைவதுதான் தியான நிலை. அந்த அமைதியில் நிலைத்திருப்பதுதான் சமாதி நிலை. சம + ஆதி, அதாவது ஆதி பரம்பொருளுடன் நிலைத்திருக்கும் நிலை.

தியானம் செய்பவர்கள் தொடக்கத்தில் மணி கணக்காக தியானம் செய்ய தேவையில்லை, ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் இந்த நிலையை அடைந்து விடுங்கள் அது போதும். தியானம் செய்ய தொடங்கிய உடனே இந்த அமைதி நிலையை அடைந்து விட முடியாது, பல வருடங்கள் ஆகலாம். ஆனால் இந்த அமைதி நிலையை, தியான நிலையை அடைய எந்த முயற்சியும் செய்யாதீர்கள், செய்யவும் தேவையில்லை. அமைதியாக அமர்ந்து மூச்சை கவனிக்க தொடங்குங்கள். மற்றவை அனைத்தும் சுயமாகவே நடக்கும்.

No comments:

Post a Comment

மனித வாழ்க்கைக்கான அர்த்தம் தேடி தொடங்கிய பயணத்தில் நான் கண்டுகொண்ட விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கட்டுரைகளை வாசித்தபின் உங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும். நமது இணையதளங்கள்: holisticrays.com, Reiki Tamil, பதில்

"மின்னஞ்சல் மூலமாகா புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுவதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும்"