அச்சத்தை விடுங்கள், ஆசைப்பட்டதை சாப்பிடுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்.

அச்சத்தை விடுங்கள், ஆசைப்பட்டதை சாப்பிடுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள். அளவோடு இருக்கும் வரையில் எதுவுமே கெடுதல் இல்லை, தைரியமாக இருங்கள். எந்த உணவையாவது சாப்பிட  வேண்டும் என்று ஆசை உண்டானால், ஆசைப்பட்டதை சாப்பிடுங்கள், எந்தத் தவறுமில்லை. அளவை மட்டும் மீறாதீர்கள். எது அளவு என்றால்?. உங்கள் வயிறு சொல்வதுதான் அளவு. வயிறு நிறைந்து, பசி மாறிவிட்டால், சாப்பிடுவதை உடனே நிறுத்திவிட வேண்டும். 

வெள்ளை சீனி அந்த கெடுதலை செய்யும், அஜினாமோட்டோ இந்த கெடுதலை செய்யும், கோக்க கோலா அந்த உறுப்பைக் கெடுக்கும், பெப்சி கோலா இந்த உறுப்பைக் கெடுக்கும் என்று எதற்காகவும் அஞ்சாதீர்கள். அவற்றில் பல அபாயகரமான இரசாயனங்கள் கலந்திருப்பது உண்மைதான். ஆனாலும், உங்கள் உடலும் அதன் எதிர்ப்பு சக்தியும் அதனிலும் வலிமையானது.

மைதாவில் அது இருக்கும், உப்பில் இது இருக்கும் என்று எதற்கும் அஞ்சாதீர்கள். ஆசைப்பட்டதை அளவோடு உண்ணும் போது உடல் அதில் உள்ள ஆபத்தான விசயங்களை சுயமாகவே வெளியேற்றிவிடும், அச்சப்பட தேவையில்லை. ஆனால் பயத்துடன் ஒரு உணவைச் உட்கொண்டால், உங்கள் பயத்துக்கும், நம்பிக்கைக்கும் தக்கவாறு பக்கவிளைவுகள் உருவாக வாய்ப்புகள் உண்டு. இன்றைய உலகில் பக்கவிளைவுகள் இல்லாத உணவுகள், இரசாயனம், பூச்சிகொல்லிகள் இல்லாத உணவுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அத்தனை உணவு வகைகளிலும்  ஏதாவது ஒரு வேதிப்பொருள் கலக்கப்படுகிறது.

அவர் சொன்னார், இவர் சொன்னார், அதில் படித்தேன், இதில் கேட்டேன் என்று அனைத்துக்கும் பயந்துக் கொண்டிருந்தால், எதைத்தான் சாப்பிடுவது?. இன்று விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்திருக்கிறார்கள், தாய்ப் பாலில் கூட சில இரசாயனங்கள் கலந்து குழந்தைக்கு செல்கிறது என்று. அதற்காக தாய்ப் பால் கொடுப்பதை நிறுத்திவிட  முடியுமா?.

ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன் மைதாவில் பென்சொயில், க்ளோரின், பொட்டாசியம் ப்ரொமட், என்சைம், அசெடொன் பெரொசைட், இவ்வாறான பல ஆபத்தான இரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. அவை உடலுக்கு மிகவும் ஆபத்தானவை. சரி இப்போது கொஞ்சம் வித்தியாசமாக சிந்திப்போம், இந்த இரசாயனங்கள் சமைத்த பின் அப்படியே இருக்குமா அல்லது அதன் தன்மைகள் மாற்றமடையுமா? கண்டிப்பாக மாறிவிடும்

என்னதான் ஆபத்தான இரசாயனமாக இருந்தாலும் அதை சமைக்கும் போது, அந்த இரசாயனம் மற்ற உணவுப் பொருட்களுடன் சேரும் போது அதன் தன்மை கண்டிப்பாக மாறிவிடும், அப்படியே இருக்காது. அதனால் எதற்காகவும் பயப்படாதீர்கள். பசித்தால் அல்லது அதிக ஆசை உண்டானால், ஆசைப்பட்டதை சாப்பிடுங்கள். அதில் உள்ள கழிவுகளை, ஆபத்தான விசயங்களை உங்கள் உடலே வெளியேற்றிவிடும்.

எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று நான் சொன்னேன் என்பதனால், வேண்டுமென்றே இரசாயனம் கலந்த உணவுகளையும், தீங்கு செய்யக் கூடிய உணவு வகைகளையும் தேடி சாப்பிடாதீர்கள். பசியின் அளவுக்கு, அளவோடு நன்றாக மென்று விழுங்குங்கள் மற்றதை உங்கள் உடல் பார்த்துக் கொள்ளும்.

எதையும் அளவோடு வைத்துக்கொள்வது மிகவும் நன்மையானது.

Image by stokpic from Pixabay

To Top