கேள்வி பதில்
கேள்வி பதில்

நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள்

ஒருவர் நோய் வாய்ப்பட்டால் வைத்தியர் (மருத்துவர்) அவரை பரிசோதித்து, அவரின் உபாதைகளை அறிந்து, உடல் காட்டும் அறிகுறிகளைக் கொண்டு நோயாளியின் உண்மையான நோயை கண்டறிய வேண்டும். அந்த நோய் உடல் சம்பந்தப்பட்டதா? மனம் சம்பந்தப்பட்டதா? என்பதை கண்டறிய வேண்டும். நோயின் மூலத்தை அறிந்த பின்பு தான் மருத்துவம் செய்ய வேண்டும்.

மன நிம்மதி 
உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மன நிம்மதியும் மன அமைதியும் மிகவும் அவசியமானது. மனிதர்களின் பெரும்பாலான நோய்கள் மனதில் உண்டாகும் மாறுபாட்டாலேயே உருவாகின்றன.

உதாரணம் 1: ஒரு குழந்தையை மிரட்டினால் அல்லது பயமுறுத்தினால் அந்த குழந்தை பயத்தில் சிறுநீர் கழித்துவிடுகிறது. அந்த குழந்தையின் உடலில் என்ன நடந்தது? ஏன் அந்த குழந்தை சிறுநீர் கழித்தது?

உண்மையில் என்ன நடந்தது என்றால். அந்த குழந்தையின் மனதில் உண்டான அதிகபடியான பயம் மனதின் சமநிலையை கெடுத்தது. அந்த பாதிப்பு சிறுநீர் பையை பாதித்து சிறுநீர் சுயமாக வெளியேற தொடங்கியது. மனதில் உண்டாகும் பயமானது சிறுநீரகங்கள், சிறுநீர் பை, கர்ப்பப்பை, ஆண்மை மற்றும் உடலின் பல உறுப்புகளை பாதிக்கக் கூடியது. அதிகபடியான பய உணர்வு உள்ளவர்களுக்கு மேலே குறிப்பிட்ட உறுப்புகளில் சில தொந்தரவுகள் உருவாகக் கூடும். அச்ச உணர்வுகளை நீக்கி விட்டால் அந்த பாதிப்புகள் நீங்கிவிடும்.

உதாரணம் 2: ஒரு வீட்டில் துக்ககரமான நிகழ்வுகள் நடக்கும் போது அந்த வீட்டை சார்ந்தவர்களுக்கு பசி உண்டாவதில்லை. மரணம் நடந்த வீட்டில் இதை கண்கூடாக அனைவரும் காணலாம். நாள் முழுதும் சாப்பிடாவிட்டாலும் அதன் குடும்ப உறுப்பினர்களுக்கு பசி என்ற உணர்வு உண்டாவதில்லை. கவலையுடன் இருக்கும் மனிதர்கள் கூட எனக்கு பசியில்லை உணவு வேண்டாம் என்பார்கள்.

இந்த சூழ்நிலையில் என்ன நடக்கிறது என்றால் துக்கம், சோகம், கவலை போன்ற உணர்வுகள் வயிற்றை பாதிக்கின்றன. வயிறு பாதிப்புக்கு உள்ளானதால் அது உணவை சீரணிக்கும் தன்மையில் இருக்காது. அதனால் அவர்களுக்கு பசி உண்டாகாது.

மனதின் அமைதியும் சம தன்மையும் உடலின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானது. அதனால் யாருக்காவது உடல் நலம் பாதிப்படைந்தால் உடலை மட்டும் சோதிக்காமல் நோயாளியுடன் உரையாடி அவருக்கு மனம் தொடர்பான பாதிப்புகள் ஏதாவது இருக்கின்றனவா என்பதையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.
« PREV
NEXT »

No comments