கேள்வி பதில்
கேள்வி பதில்

நெடுந்தூர சிகிச்சை அளிக்கும் வழிமுறைகள்


1. சிகிச்சையை தொடங்கும் முன் மாஸ்டர் 20 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும்.

2. சிகிச்சைக்கு முன்பு இறைவன், இயற்கை மற்றும் பிரபஞ்ச ஆற்றலின் உதவியை கோர வேண்டும்.

3. நோயாளியை அவர் வீட்டிலேயே சாயாமல் நாற்காலியில் அமர சொல்ல வேண்டும். முடியாதவர்களை கட்டிலில் படுத்துக்கொள்ள சொல்ல வேண்டும்.

4. தனக்கு பாதுகாப்பு கவசம் போட்டுக்கொள்ள வேண்டும்.

5. நோயாளியை நினைத்து அல்லது அவரது புகைப்படத்தை பயன்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.

6. நோயாளியின் பெயரையும் அவரது தாயின் பெயரையும் கூறி ஆற்றலை அனுப்ப வேண்டும். உதாரணத்துக்கு இன்னாரின் மகனான இன்னாருக்கு இன்ன உபாதைகளில் இருந்து விடுபட ரெய்கி சிகிச்சை அளிக்கிறேன்.

7. சிகிச்சைக்கு முன்பாக அவர் உடலில் இருக்கும் தீய ஆற்றல்களை முதலில் சுத்தம் செய்து விட வேண்டும்.

8. இந்த தொலை தூர சிகிச்சையை 15 முதல் 40 நிமிடங்கள் வரையில் செய்ய வேண்டும்.
9. சிகிச்சையின் போது சிகிச்சை அளிப்பவரின் உடலில் இருந்து ஆற்றல் வெளியாகும் அளவை வைத்து எவ்வளவு நேரம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.

10. சிகிச்சைக்கு பிறகு நோயாளிக்கு மன தைரியத்தை உருவாக்க வேண்டும்.

11. சிகிச்சைக்கு பிறகு இறைவனுக்கும், இயற்கைக்கும், ரெய்கிக்கும் நன்றி கூற வேண்டும்.

« PREV
NEXT »

No comments