புதியவை
latest

முழுமையான ஆண்மையின் நலம்

இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான ஆண்கள், ஆண்மை குறைந்து பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். ஆண்மைக் குறைவு என்றவுடன் உடல் உறவு கொள்ள இயலாமை என்று மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. ஆண்மை என்றால் ஒரு ஆண் மகனின் ஒட்டு மொத்த உடலின் திறனையும் பற்றித்தான் சிந்திக்க வேண்டும். ஆண்மையை வெறும் உடலுறவு தொடர்பான விசயமாக எண்ணக்கூடாது. முதலில் ஆண்களின் ஆரோக்கியம் என்றால் என்னவென்று பார்ப்போம்.

ஆரோக்கியமான ஆணின் அடையாளங்கள்
ஆரோக்கியமான ஆண், உடலளவிலும் மனதளவிலும் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அவருக்கு தன் தினசரி வேலைகளை செய்வதில் எந்த ஒரு சிக்கலும் உண்டாகக் கூடாது. தன்னுடைய அலுவலக வேலைகளையும், தனது சொந்த வேலைகளையும் செய்யும் போது; எந்த தொந்தரவையும், வலியையும், சிக்கல்களையும் அனுபவம் செய்யக் கூடாது. யாரெல்லாம் தனது சொந்த வேலைகளை செய்யவே கஷ்டப்படுகிறார்களோ அவர்களெல்லாம் ஆரோக்கியம் குறைந்தவர்கள்.

ஒரு கூலி தொழிலாளி பத்து கனமான மூட்டைகளை தூக்கிவிட்டு, இடுப்பு வலிக்கிறது என்றால் பரவாயில்லை. ஒரு விவசாயிக்கு உழைப்புக்குப் பின் உடல் வலிகள் உண்டானால் பரவாயில்லை. ஒரு வாகன ஓட்டுநர் பல மணி நேரம் வாகனம் ஓட்டுவதால் அசதி, வலி உண்டானால் பரவாயில்லை. ஆனால் வெறும் ஏசி அறையில் வேலை செய்பவர், சும்மா இருப்பவர், சுலபமான வேலைகளை செய்பவர், எந்த உடல் உழைப்புமே செய்யாத சூழ்நிலையில், உடல் உபாதைகளுக்கு ஆளானால், தன் அன்றாட கடமைகள் செய்யவே கஷ்டப்படுகிறார் என்றால், அவர் ஆரோக்கியம் குன்றியவர் என்று பொருளாகும்.

பெரும்பாலான ஆண்கள் எதிர்நோக்கும் ஆண்மை கோளாறுகள்.
1. உடலுறவு கொள்ள இயலாமை.
2.விறைப்பு தன்மை குறைவு.
3. விந்து முந்துதல்.
4. உடலுறவில் நாட்டம் இன்மை.
5. உடலுறவு கொள்ளும்போது வலிகள்.
6. உடலுறவு கொண்டபின், இடுப்பு, கால், முதுகு பகுதிகளில் வலிகள்.
7. உடலுறவு கொள்ளும் போது மூச்சுத் திணறல் / இளைப்பு.
8. பாதியில் உறுப்பு சுருங்குதல்.
9. உடலுறவு கொள்ள அச்சம்.
10. ஆண்குறி சிறியதாக இருத்தல்.
11. குழந்தையின்மை.
12. உடலுறவில் திருப்தி இன்மை.
13. மனைவியின் மீது நாட்டமின்மை.
இன்னும் பல....

ஆண்மை கோளாறுகளுக்கு காரணம் என்ன?
அவர் சொன்னார், இவர் சொன்னார், அதில் படித்தேன், இதில் படித்தேன் என்று, நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், எதை வேண்டுமானாலும் நம்பலாம். ஆனால் உண்மை என்னவென்றால். ஆண்மை கோளாறு என்ற ஒன்றே கிடையாது. ஆண்மை இல்லாத ஆண் என்றும் யாருமே கிடையாது. நம்புங்கள்.

ஆனால் என்னால் முழுமையாக உடலுறவில் ஈடுபட முடியவில்லை, எனக்கு விரைப்பு தன்மை ஏற்படவில்லை, என் ஆண்குறி சிறியதாக இருக்கிறது, என நீங்கள் எதையாவது சொல்லலாம். பல ஆண்கள் மேலே குறிப்பிட்ட தொந்தரவுகளால் அவதிபடுவது உண்மைதான். ஆனால் இவை ஒரு தற்காலிக தொந்தரவே ஒழிய, இந்த தொந்தரவுகள் நீடிக்காது. உங்களின் ஆண்மை மீண்டுவிடும், நீங்கள் உங்கள் மனைவியுடன் உடலுறவில் இன்பமாக  இருப்பீர்கள். நம்புங்கள்.

ஆண்மை கோளாறுகள் உருவாக காரணங்கள்
ஆண்மை கோளாறுகள் எப்போது உருவானது என்று கேட்டால் பலர், சர்க்கரை, இரத்த அழுத்தம், இருதயம் தொடர்பான நோய்கள் உருவான பின்பு என்று சொல்வார்கள் அல்லது. புது வேலைக்கு சென்ற பிறகு, கடன் தொல்லைகள் உருவான பிறகு, குடும்ப தகராறுகள், மனைவியுடன் மன கசப்பு, என பல காரணங்கள் சொல்வார்கள். இப்போது நாம் ஆண்மை கோளாறுகள் உருவாக உண்மையான காரணங்களை பார்ப்போம்.

ஆண்மை கோளாறுகள் உருவாக உண்மையான காரணங்கள்
1. மேலே கூறப்பட்ட 13 வகையான கோளாறுகளுக்கும் சொல்லப்படாத மற்ற கோளாறுகளுக்கும், முதன்மை காரணமாக இருப்பது மனம். மனதில் ஏற்படும் பயம், கவலை, துக்கம், ஏக்கம், கர்வம், காமம் போன்றவை ஆண்கள் உடலுறவுக் கொள்ள இயலாமல் தடையாக உள்ளன.

ஆண்மை கோளாறு மட்டுமல்ல, மனிதனுக்கு ஏற்படும் அனைத்து வகையான தொந்தரவுகளும் மனதில் இருந்துதான் தொடங்குகின்றன. மனதில் தோன்றும் நல்ல எண்ணங்கள் ஆரோக்கியத்தையும் கெட்ட எண்ணங்கள் ஆரோக்கிய சீர்கேடுகளையும் உருவாக்குகின்றன “மனம்தான் மனிதன்”.

உங்கள் மனதை முதலில் ஆரோக்கியமாகவும், தெளிவாகவும், நடுநிலையாகவும், அமைதியாகவும் வைத்துக்கொள்ளுங்கள். எல்லா நோய்களும் தானாக குணமாகிவிடும். ஆண்மை நிச்சயமாக திரும்பிவிடும் இது உண்மை.

2. நோய்களால் உண்டாகும் ஆண்மை குறைபாடுகள். ஒரு ஆணுக்கு ஏதாவது ஒரு நோய் உருவானாலோ அல்லது உடல் உறுப்புகள் நோய்வாய் பட்டாலோ ஆண்மை குறைய வாய்ப்புண்டு. சில ஆண்கள் தங்களுக்கு நோய்கள் உள்ளதை உணராமல் கூட இருக்கலாம். இந்தக் காரணத்தினால் உருவான ஆண்மைக் குறைபாடுகள், நோய்கள் குணமாகும் போது படிப்படியாக சீராகிவிடும்.

3. மருந்துகளால் உருவாகும் ஆண்மைக் குறைபாடுகள். பலருக்கு மருந்து மாத்திரைகளின் பக்கவிளைவுகளால் ஆண்மை குறைபாடுகள் உருவாகின்றன. ஆனால் அவர்கள் அந்த ஆண்மை குறைபாடுகள் நோய்களால் உருவானவை என தவறாக எண்ணுகிறார்கள்.

நோய்வாய்ப் பட்டவர்களுக்கு, உதாரணத்துக்கு நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதயக் கோளாறு, இளைப்பு, உடல் உறுப்புகளில் பாதிப்பு உள்ளவர்களுக்கு. இயற்கையாகவே உடலின் இயக்கச் சக்தியும், ஆற்றலும் குறைவாக இருக்கும். இந்தச் சூழ்நிலையில் இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளை உட்கொள்ளும் போது, உடலில் இருக்கும் குறைவான சக்திகள் அந்த மருந்து மாத்திரைகளில் உள்ள உடலுக்கு ஒவ்வாத இரசாயனங்களை பிரித்து உடலில் இருந்து வெளியேற்ற வீணாய் செலவு செய்யப்படுகின்றன. அதனால் அவர்களுக்கு உடலுறவு கொள்ள போதிய சக்தி இருப்பதில்லை.

இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளை உட்கொள்ளும் வறையில் இந்த நிலை தொடரும். இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளை நிறுத்தினால் ஆண்மை திரும்பும்.

4. உடலின் சக்தி குறைவினால் உருவாகும் ஆண்மைக் குறைபாடுகள், நாம் உண்ணும் உணவு முறையாக ஜீரணித்து சக்தியாக மாறாமல். உடலில் சக்திக் குறைபாடுகள் உருவாகி அதனால் உண்டாகும் ஆண்மைக் கோளாறுகள். சில இறைச்சி வகைகள், சில கடலை வகைகள், சில காய்கறிகள், சில பழங்கள், சில மூலிகைகள் ஆண்மையை கூட்டும் என்று சிலர் நம்புகிறார்கள். ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் எதை உட்கொண்டாலும் அதை சக்தியாக மாற்றி உடலுக்கு வழங்குவது உடலின் செரிமான மண்டலம் தான்.

சீரணம் முறையாக நடைபெறாவிட்டால், நீங்கள் அமிர்தத்தை உட்கொண்டாலும் எந்தப் பயனும் இல்லை. எல்லாம் வீண், அவை கழிவாக உடலைவிட்டு வெளியேறிவிடும்.

இன்று பெரும்பாலான ஆண்கள் ஜீரணம் சரியாக நடக்காததால் சக்தி குறைந்து ஆண்மையை இழக்கிறார்கள். உங்கள் செரிமான மண்டலம் முறையாகச் செயல்பட்டால், நீங்கள் எதை உட்கொண்டாலும் உங்கள் உடலுக்குத் தேவையான சக்திகளை உடலால் அந்த உணவிலிருந்து உருவாக்கிக் கொள்ள முடியும் நம்புங்கள். மூன்று வேலையும் வெறும் கஞ்சியை குடிப்பவருக்கும் உடலில் அனைத்து சத்துக்களும் இருக்கும். அவரும் ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றார்.

5. ஆண்மை வீரிய மருந்துகளால் உருவாகும் ஆண்மை கோளாறுகள். சில ஆண்கள், ஆண்மையில் சிறு தொய்வு ஏற்பட்டாலும், ஆண்மை வீரியத்தை கூட்டக்கூடிய இரசாயனம் கலந்த மருந்துகளையோ, நாட்டு மருந்துகளையோ நாடி ஓடுகிறார்கள். இது ஒரு கேடான செயலாகும், உடலில் ஏன் ஆண்மைக் குறைவு ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து அதை சரி செய்யாமல், மருந்துகளை நாடுவது, ஆண்மையை இன்னும் குறைத்து அதை ஒரு நிரந்தர குறையாக மாற்றிவிடும்.

6. மன திருப்தி இன்மையினால் உருவாகும் ஆண்மை கோளாறுகள். சிலருக்கு தன் மனைவியை பிடிக்காமல், அவரின் அழகு போதவில்லை, நிறம் போதவில்லை, உயரம் போதவில்லை, உடல் வாகு பிடிக்கவில்லை, செயல் பிடிக்கவில்லை, குணம் பிடிக்கவில்லை என்று ஏதாவது காரணம் கூறி மனைவியை ஒதுக்குவதாக நினைத்து தன் ஆண்மையைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

இவ்வாறான எண்ணங்கள் மாறும்போது, ஆண்மை தானே திரும்பிவிடும்.

7. மனைவியினால் ஏற்படும் ஆண்மை கோளாறுகள், இது ஒரு மனோவியல் தொடர்பான கோளாறு. மனைவி கணவனை மதிக்காமல் அலட்சியம் செய்யும் போதும். கணவனின் குறைகளை, இயலாமையை சுட்டிக்காட்டும் போதும் ஆண்மைக் கோளாறுகள் உருவாக வாய்ப்புகளுண்டு. மனைவி மீது நாட்டமின்மையும் வெறுப்பும் ஏற்படவும் வாய்ப்புகளுண்டு.

மனைவியை நெருங்கும் போது மனைவியின் மீது கெட்ட வாடை ஏற்பட்டாலும், கணவனின் நாட்டம் குறைய வாய்ப்புண்டு. உடலுறவு கொள்ளும் போது மனைவி நாட்டம் காட்டாமல் இருந்தாலும் கணவனின் நாட்டம் குறைய வாய்ப்புண்டு. இந்தக் காரணங்களால் ஏற்படும் ஆண்மைக் குறைவுகள் மனைவி தன்னை மாற்றிக்கொள்ளும் போது சரியாகிவிடும்.

கணவனின் உடலுறவு கொள்ளும் திரணை, குறைத்துப் பேசினால். திருப்தி இன்மையை வெளிப்படையாகக் கூறினால், கணவனுக்கு நாட்டம் குறைய வாய்ப்புகளுண்டு. அதனால் மனைவியானவள் உடலுறவில் திருப்தி இல்லாத நிலை ஏற்பட்டாலும் கணவனின் ஆற்றலைப் புகழ்ந்து பேசவேண்டும், திருப்தி ஏற்பட்டதாக பாசாங்கு செய்ய வேண்டும், மனைவி கொடுக்கும் இந்த நம்பிக்கை கணவனின் ஆண்மையை மீட்டுத்தரும் மேலும் அதிகரிக்கும்.

8. கெட்ட பழக்கங்களால் உருவாகும் ஆண்மை கோளாறுகள், குடிப்பழக்கம், புகையிலை பழக்கம், போதைப் பொருள் உபயோகித்தல், விபச்சாரிகளை நாடுதல், பல பெண்களுடன் உடல் உறவு கொள்ளுதல் போன்ற ஒழுக்க கேடுகள் ஆண்மை கோளாறுகளை உண்டாக்கும். இந்தக் காரணங்களால் உருவாகும் ஆண்மை கோளாறுகள், இந்தத் தீய பழக்கங்களை விட்டவுடன் மெல்லச் சரியாகும், ஆண்மை திரும்பும்.

9. நீலப் படம் பார்ப்பது, காம கதைகளை வாசிப்பது, காமம் தொடர்பான ஆடியோக்களை கேட்பது, காமம் தொடர்பான கற்பனைகளில் மூழ்குவது, சிந்திப்பது, காமம் தொடர்பாக தேவையில்லாமல் பேசுவது போன்றவை மிக கேடான ஆண்மை கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. ஆண்மை கோளாறுகள் மட்டும் இல்லாமல், பல உடல் உறுப்புகள் தொடர்பான தொந்தரவுகளையும் உருவாக்க வாய்ப்புகள் உள்ளன.

இவைப் போன்ற வீணான விசயங்களை பார்த்துவிட்டு, சுய இன்பத்தில் ஈடுபடுவது, மிக கேடான விளைவுகளை ஏற்படுத்தும். ஆண்மை கோளாறுகள் மட்டுமில்லாமல் சில உள் உறுப்புகளையும் சிதைத்துவிடும்.

10. சிறுவயதில் தவறாக வளர்ப்பு. சிறு வயதில் பெற்றோர்களால், கண்ட நேரத்தில் பசியின்றி, தேவையின்றி உணவு கொடுக்கப்பட்டு, தேவையில்லாமல் தண்ணீர் கொடுக்கப்பட்டு, மன அழுத்தம் வரும் அளவுக்குப் படிப்பு படிப்பு என வளர்க்கப்பட்ட பிள்ளைகள், பிற்காலங்களில் ஆண்மை கோளாறுகள் மற்றும் உடல் உறவில் நாட்டமின்மையால் அவதியுற வாய்ப்புகள் உள்ளன.

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் ஜாக்கிரதை, அவர்களின் உடல் நலம் உங்கள் கையில் தான் உள்ளது.

ஆண்மை கோளாறு பிரச்சனைகளுக்கு தீர்வு
ஆண்மை கோளாறு பிரச்சனைகள் குணமாக. முதலில் உங்களுக்கு எந்த வகையான பிரச்சனை உள்ளது, அது ஏன் உருவானது என்று புரிந்து கொள்ள வேண்டும். பின்பு மேலே கூறப்பட்ட தீர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் உடலை பாதிப்புகளிலிருந்து மாற்றி மகிழ்ச்சியாக வாழுங்கள்.

மேலே குறிப்பிடாத புதிய தொந்தரவுகள் ஏதேனும் இருந்தால் கீழே பதிவிடவும்.


« PREV
NEXT »

No comments