புதியவை
latest

ஏன் கண்ட நேரங்களில் தூக்கம் வருகிறது

தூக்கம் குறைவாக இருப்பது நோயல்ல
தூங்க கஷ்டம், தூக்கம் குறைவாக உள்ளது என்பதெல்லாம் நோய்கள் அல்ல, அவை அனைத்தும் வெறும் கற்பனைகளே என்பதை முந்தைய கட்டுரைகளில் அறிந்து கொண்டோம். இந்தப் பதிவில் ஏன் அதிகமாக தூக்கம் வருகிறது என்பதையும், ஏன் கண்ட நேரங்களில் தூக்கம் வருகிறது என்பதையும் பார்ப்போம்.

அலுவலகத்தில் அல்லது பகலில் தூக்கம் உண்டாவது
அலுவலகத்தில் இருக்கும் பொழுதோ, வேலை செய்து கொண்டு இருக்கும் பொழுதோ அசதி, தூக்கம் ஏற்பட்டால். உடலில் சக்தியின் உற்பத்தி குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ப உடலால் சக்தியை மீண்டும் உற்பத்தி செய்ய முடியவில்லை என்று அர்த்தம். அல்லது மனம் கலைந்துவிட்டது என்று அர்த்தம்.

உணவு உட்கொண்ட  பின்பு தூக்கம்
உணவு உண்பது உடலின் தெம்புக்காக, உடலின் சக்திக்காக என்றால்; உணவு உண்ட பின்பு உடலுக்குத் தெம்பும், அதிக சக்தியும் தானே இருக்க வேண்டும். ஏன் அசதியும் தூக்கமும் உண்டாகிறது?.

உணவு உண்ட பின்பு அசதியோ தூக்கமோ உண்டானால்; உடலில் செரிமான மண்டலம் சீர்கெட்டு இருக்கிறது என்று அர்த்தம். உண்ட உணவை ஜீரணிக்கும் தன்மையும் சக்தியும் உடலுக்கு போதவில்லை என்று அர்த்தம். நன்றாக பசி உண்டான பிறகு, பசியின் அளவை அறிந்து உணவை உட்கொண்டால்; செரிமான மண்டலம் சீர் அடைந்து, உணவு முழுமையாக ஜீரணமாகும். உணவு உட்கொண்ட பின்பு அசதியோ தூக்கமோ உண்டாகாது.

உடலுறவுக்குப் பின் தூக்கம்
இன்று பல கணவன் மனைவிகள் உடலுறவுக்குப் பின்பு, அசதி உண்டாகி தூங்கி விடுகிறார்கள். உடலுறவுக்குப் பின்பு அசதியோ தூக்கமோ ஏற்பட்டால். உடலில் சக்தி உற்பத்தி குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ப உடலால் சக்தியை மீண்டும் உற்பத்தி செய்ய முடியவில்லை என்று அர்த்தம்.

காலையில் எழும்போது எப்படி இருக்க வேண்டும்
காலையில் எழும்போது தனது அபிமான நடிகையை நேரில் பார்த்த இளைஞர்களைப் போன்று உற்சாகமாக இருக்க வேண்டும். காலையிலேயே ஏன் எழுந்திருக்க வேண்டும் என்ற எண்ணமோ, மீண்டும் உறங்க வேண்டும் என்ற எண்ணமோ இருக்கக் கூடாது.

காலையில் எழும்போது உற்சாகமில்லாமல் உடல் சோர்வாக காணப்பட்டால். உடலில் சக்தி உற்பத்தியும், சக்தி சேமிப்பும் முறையாக நடக்கவில்லை என்று அர்த்தம். காலையில் சூரிய உதயத்துக்கு பின்பு எவ்வளவு தாமதமாக எழுகிறீர்களோ, உங்கள் உடல் அவ்வளவு பலகீனமாக இருக்கிறது என்று அர்த்தம். காலை சூரிய உதயத்துக்கு பின்பு எவ்வளவு விரைவாக எழுகிறீர்களோ அவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

வாழ்க்கை முறையை மாற்றுங்கள் ஆரோக்கியமாக இருங்கள். வாழ்க்கையை வாழுங்கள்.


« PREV
NEXT »

No comments