சத்து மாத்திரைகள் உடலுக்கு நன்மைகளை தருகின்றனவா?

உடலின் ஆரோக்கியத்திற்காக, பலத்திற்காக, அல்லது அழகுக்காக என்று பலர் சத்து மாத்திரைகள், சத்துமாவுகள், விட்டமின், மினரல் போன்றவற்றை உட்கொள்கிறார்கள். இவை உடலுக்குத் தேவையானதா? உடலுக்கு அவசியமானதா? இவற்றினால் மனிதர்களுக்கு நன்மைகள் விளையுமா?

மழை பெய்யும் போது மிகுதியாக எவ்வளவு மழை பெய்தாலும், மழை நீருடன் ஆற்று நீர் வந்து சேர்ந்தாலும் கடல் அவற்றை ஏற்றுக்கொள்ளும். எவ்வளவு நீர் சேர்ந்தாலும் அவற்றை தாங்கிக் கொள்ளும், சேர்த்து வைக்கும் தன்மை கடலுக்கு இருக்கிறது.  ஆனால் அதே மழைநீர் ஒரு வாலியில் பெய்தால், அந்த வாலி நிரம்பியதும் மிகுதியாக உள்ள நீர் வழிந்து வெளியே ஓடிவிடும்.

வாலியைப் போலத்தான் நம் உடலும் உடலில் தேவைக்கு அதிகமாக நாம் உட்கொள்ளும் விட்டமின், மினரல் போன்ற சத்துக்கள் அனைத்தும் சிறுநீர் அல்லது மலம் மூலமாக உடலைவிட்டு வெளியேறிவிடும். தினமும் விட்டமின் மாத்திரைகள் அல்லது சத்து மாத்திரைகள் உட்கொள்வது ஒரு தேவையற்ற வேலை மட்டுமே.

உடல் தனக்குத் தேவையான அத்தனை சத்துக்களையும், நாம் உண்ணும் உணவின் மூலமாக தானே உற்பத்தி செய்து கொள்ளும் ஆற்றலுடன் படைக்கப்பட்டிருக்கிறது. அதனால் உடலுக்கு சத்துக்கள் தேவைப்படும் என்பதற்காக மருந்து மாத்திரைகள், சத்துப் பொருட்கள், சத்துமாவுகள் போன்றவை உட்கொள்ள தேவையில்லை. இவற்றை உட்கொள்வது பண விரயம் மட்டுமே. அதுமட்டுமின்றி இரசாயனம் மூலமாக தயாரிக்கப்படும் விட்டமின் மினரல் போன்ற சத்துக்கள் உடலுக்கு கெடுதல்களையும் நோய்களையும் உருவாக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

நீங்கள் வாங்கும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும், அந்த உணவுப் பொருள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, என்னென்ன கலக்கப்பட்டிருக்கின்றன என்ற விவரங்கள் இருக்கும். நீங்கள் வாங்கும் எந்த சத்து அல்லது விட்டமின் மாத்திரைகளிலாவது, அந்த மாத்திரைகள் எவற்றிலிருந்து  தயாரிக்கப்பட்டவை என்ற விவரங்கள் போட்டிருக்கிறதா?

இனிமேல் மருந்து மாத்திரைகள், சத்து மாத்திரைகள் வாங்கும்போது அவற்றை பரிந்துரைக்கும் மருத்துவரிடமோ மருந்து கடையிலோ கேளுங்கள் இந்த மாத்திரைகள் எவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டவை என்பதை. சத்துக்களே இல்லாத, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மாத்திரைக்கு சத்து மாத்திரை என்று பெயர் அதை நாமும் வாங்கி உட்கொண்டு கொண்டிருக்கிறோம்.

ஒரு மனிதனுக்கு கண், காது, மூக்கு, கை, கால் என உடல் உறுப்புகள் முழுமையாக இருக்கும்; அதைப்போல் இறந்து போன ஒரு சடலத்திலும் கண், காது, மூக்கு, கை, கால், என்று அனைத்தும் இருக்கும் அதற்காக சடலத்தை யாரும் மனிதன் என்று அழைப்பதில்லை. மற்றும் அந்த சடலம் மனிதனும் அல்ல.

அதைப் போன்றே சத்து மாத்திரைகளின் இரசாயன கட்டமைப்பும் உண்மையான சத்துக்களைப்  போன்றே இருக்கலாம். இரசாயன (chemical) கட்டமைப்பு ஒன்றாக இருக்குமே ஒழிய அதன் உயிர் சக்தி இருக்காது. உயிர் சக்தி இல்லாத இந்த மாத்திரைகள் இறந்து போன சடலத்துக்கு சமமானவையே. இவற்றை உட்கொள்ளும் மனிதர்களுக்கு நோய்களை உருவாக்குமே ஒழிய எந்த வகையான நன்மைகளும் உருவாக வாய்ப்பே கிடையாது.

சத்து மாத்திரைகளை உட்கொண்டாலும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் அவற்றை முதலில் நிறுத்துங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் அவற்றை கொடுக்காதீர்கள். இயற்கையாக கிடைக்கக்கூடிய சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்ளுங்கள்.

பழங்கள் காய்கறிகள் போன்ற உணவு வகைகளில் மட்டுமே உண்மையான முழுமையான சத்துக்களும் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும். பழங்களை அதிகமாக உண்ணும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். காய்கறிகளை அரைவேக்காட்டில் சமைத்து சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். அதிகமாக பழங்கள் காய்கறிகளை சாப்பிடுங்கள். எந்த மருந்தும் மாத்திரையும் தேவையில்லை, இதுவரையில் ஆரோக்கியமாக வாழலாம்.


To Top