கேள்வி பதில்
கேள்வி பதில்

சர்க்கரை நோய் என்பது உண்மையில் என்ன?

இந்த கட்டுரையை வாசித்து புரிந்துக் கொண்டால் என்னது இதுதான் சர்க்கரை நோயா? இதைக் காட்டியாடா எங்களை இத்தனை நாளா பயமுறுத்தினிங்க? என்று நிச்சயமாக உங்களுக்கு தோன்றும்.

இனிப்பு நீர், சர்க்கரை நோய், நீரிழிவு நோய், ஆங்கிலத்தில் டைபெடிக் என்று அழைக்கப்படும் இந்த நோயை. மிகக் கொடியது மிகவும் ஆபத்தானது, அது உங்களை கொன்றுவிடும் என்று ஆங்கில படத்துக்கு தமிழில் டப்பிங் பேசுவதைப் போன்று கொடூரமாக சொல்வார்கள். இது மிகவும் ஆபத்தான கொடிய மிருகம் ஓடுங்கள், உங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்பதைப் போன்று விலக்குவார்கள். உண்மையில் எல்லாமே பொய்யும் அறியாமையும் மட்டுமே!

உண்மையில் கொடிய மிருகம் எது?
உண்மையிலேயே கொடிய மிருகம் மருந்து கம்பெனிகாரர்கள் தான். இரசாயனங்களை கொண்டு மனித உடலுக்கு ஒவ்வாத மிகவும் கேடான பக்கவிளைவுகளை உருவாக்கக் கூடிய மருந்துகளை உருவாக்கும் மருந்து கம்பனி முதலைகள், அந்த மருந்துகளை விற்பனை செய்வதற்காக திட்டமிட்டு நோயாளிகளை உருவாக்குகிறார்கள். ஒன்றும் அறியாத ஆங்கில மருத்துவர்கள் அவர்களுக்கு துணை போகிறார்கள்.

என்னது ஐந்து வருடங்கள் ஆங்கில மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் ஒன்றும் அறியாதவர்களா? என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆம் அவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் தான். இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது? அவர்களுக்கு தெரியாது. மனித உடல் எவ்வாறு செயல்படுகிறது? அவர்களுக்கு தெரியாது. நோய்க்கும், கழிவு நீக்கத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன?. அவர்களுக்கு தெரியாது. நோய்கள் எதனால் உருவாகின்றன? அவர்களுக்கு தெரியாது. நோய்களை எவ்வாறு  குணப்படுத்துவது? அவர்களுக்கு தெரியாது. உண்மையில், பல ஆங்கில மருத்துவர்களுக்கு மருத்துவமே தெரியாது.

அவர்களுக்கு தெரிந்தது எல்லாம், இந்த தொந்தரவு என்றால் இந்த மருந்தை கொடுக்க வேண்டும். அந்த தொந்தரவு என்றால் அந்த மருந்தை கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். முதலில் நோய் ஏன்? எவ்வாறு? உருவாகிறது என்று அறிந்துக் கொண்டால் மட்டுமே அந்த நோயை குணபடுத்த முடியும். வெறும் இயந்திரங்கள் சொல்வதை நம்பிக்கொண்டு மருத்துவம் பார்த்தால் நோய்கள் எவ்வாறு குணமாகும்?

சர்க்கரை என்பது நோயா?
ஒரு மனிதனுக்கு சர்க்கரை நோயினால் காலில் புண்கள் உருவாகி, பின்பு அழுகி, காலை வெட்ட வேண்டும் என்று ஆங்கில மருத்துவர் பரிந்துரைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக எதை நோயாளியின் உடலில் ஏற்றுவார்கள் தெரியுமா?. குளுகோஸ்! குளுகோஸ் என்பது சர்க்கரை. சர்க்கரை அதிகரித்து தான் கால் அழுகிவிட்டது என்று கூறினீர்களே பின்பு என்ன மைத்துக்கு இப்போது மீண்டும் சர்க்கரையை என் உடம்பில் ஏற்றுகிறீர்கள் என்று எந்த நோயாளியும் கேட்பதில்லை.

சர்க்கரையினால் தான் கால் அழுகியது என்று கூறிய மருத்துவரே மீண்டும் சர்க்கரையை உடலில் செலுத்துவார், அறுவை சிகிச்சை செய்யும்போது. இயற்கையாக உடல் சர்க்கரையை உருவாகினால் நோயாம். இவர்கள் செயற்கையாக செய்து உடலில் செலுத்தினால் அது வைத்தியமாம். என்ன ஒரு பித்தலாட்டம்.

பிரசவம், விபத்து, எலும்பு முறிவு, அறுவை சிகிச்சை என எந்த அவசர சிகிச்சையாக இருந்தாலும் குளுகோஸ் என்ற சர்க்கரையை தானே மனித உடலில் முதலில் செலுத்துகிறார்கள்? ஆங்கில மருத்துவர்கள். அப்படி என்றால் மனித உடலின் அவசரகாலத்தில் சர்க்கரை அதிகமாக தேவைப்படும், மனிதனின் நோய்களைக் குணப்படுத்த சர்க்கரை அதிகமாக தேவைப்படும் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் தானே?

அப்படியானால் எதனால் உடல் சுயமாக சர்க்கரையை அதிகரித்தால் நோய் என்றும் வாழ்நாள் முழுதும் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்கள் இதே ஆங்கில மருத்துவர்கள்? அவர்கள் செயற்கையாக உருவாக்கிய குளுகோஸ் மருந்தாம் உயிரைக் காப்பாற்றுமாம், மனித உடல் இயற்கையாக உருவாக்கிய சர்க்கரை (குளுகோஸ்) கெடுதியாம் உயிரைக் கொல்லுமாம். ஏண்டா உனக்கு வந்தால் இரத்தம் எனக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்று யாரும் கேட்பதில்லை! இனிமேல் கேளுங்கள்.

சர்க்கரை கெடுதி என்றால், சர்க்கரை நோயாளிகளின் உடலில் சர்க்கரையின் அளவு குறையும்போது ஏன் மயக்கம் அடைகிறார்கள்? சர்க்கரை அதிகரிப்பது நோய் என்றால் குறைவது நல்லது தானே, பின்பு எதனால் மயக்கம் உண்டாகிறது?. சர்க்கரை கெடுதி என்றால் மருத்துவர்கள் எதனால் நோயாளிகளுக்கு குளுகோஸ் என்ற சர்க்கரையை உடலில் செலுத்துகிறார்கள்?

இனிப்பு நல்லது
மனித உடலுக்கு இனிப்பு மிக அவசியமானது. இனிப்பு இல்லாமல் எந்த மனிதனும் செயல்பட முடியாது. எந்த நோயையும் குணபடுத்த முடியாது. உடலில் சர்க்கரை போதிய அளவு இருந்தால் மட்டுமே உடலால் ஆரோக்கியமாக செயல்பட முடியும். அவசர காலங்களில் சர்க்கரை அதிகரித்தால் மட்டுமே நோய்களை குணபடுத்த முடியும்.

விபத்துகளில் சிக்கியவர்கள், கர்ப்பம் தரித்த தாய்மார்கள், எழும்பு முறிவுக்கு ஆளானவர்கள், முதியவர்கள், நோய்வாய் கண்டவர்கள் என் பலகீனமாக இருப்பவர்களுக்கு உடலில் சர்க்கரை அதிகரிப்பது, அவர்களின் நோய்களையும் அவர்களின் தொந்தரவுகளையும் குணப்படுத்தவே ஒழிய அவை நோய்களல்ல.

உடலின் இயல்பான நோய் தீர்க்கும் முறையான சர்க்கரை அதிகரிப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு. ஆங்கில மருத்துவர்களிடம் வருகின்ற அனைவரையும் நோயாளிகளாக மாற்றுகின்றனர். வேலியில் போகிற ஓணானை, வேட்டிக்குள் பிடித்து விட்ட கதையாக. இலவச இரத்தப் பரிசோதனைகளுக்கு ஆசைப்பட்டு ஆங்கில மருத்துவர்களிடம் சென்று மாட்டிக் கொள்ளாதீர்கள்.


« PREV
NEXT »

No comments