கேள்வி பதில்
கேள்வி பதில்

நீரின்றி அமையாது உலகு

உலக உயிர்களின் தோற்றம்
நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம், என் அனைத்தும் உருவான பின்பும், இந்த பூமியில் உயிர்கள் தோன்றவில்லை. இந்த பூமியின் நிலத்திலிருந்து தோன்றிய வாயுக்கள் வானத்தில் மேகமாகத் திரண்டு, மழையாக பெய்து பின்புதான் நுண்ணுயிர்கள், புற்கள், செடி கொடிகள், உருவாகத் தொடங்கின.

படைப்புகளின் தொடர்ச்சியாக உயிரினங்களும் உருவாகத் தொடங்கின. முதன் முதலில் நிலத்தில் குளம், குட்டைகள், ஆறுகள், கடல்கள் உருவாகி. அந்தக் கடலில் தோன்றிய சிறு சிறு உயிரினங்களின் பரிமாண வளர்ச்சியாக மீன்களும், கடல் வாழ் உயிரினங்களும் உருவாகின.

கடலில் தோன்றிய உயிர்கள் அதன் பரிமாண வளர்ச்சியாக, நீர், நிலம் இரண்டிலும் வாழக்கூடிய உயிர்கள் தோன்றின. அடுத்ததாக நிலத்தில் மட்டுமே வாழக்கூடிய உயிர்கள் தோன்றின. நிலத்தில் தோன்றிய உயிர்களின் பரிமாண வளர்ச்சியின் உச்சமாக மனிதர்கள் தோன்றினார்கள்.

இந்த பரிமாண வளர்ச்சி ஆறாவது அறிவான மனித பிறப்போடு முடிவதாக எனக்குத் தோன்றவில்லை. மனிதர்கள் அனைவரும் ஏழாவது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். முதல் ஆறு அறிவின் வளர்ச்சிகள், உடல் மூலமாகவும் ஆறாவது அறிவுக்கு மேலான வளர்ச்சிகள், உயிர் மற்றும் புத்தியின் மூலமாகவும் நடைபெறுகின்றன.

அனைத்தும் இருந்தும் தோன்றாத உயிர் நீர் உருவான பின்பு தோன்றியதால், “நீரின்றி அமையாது உலகு”.


« PREV
NEXT »

No comments