குழந்தைகளுக்கு உதட்டுப் பிளவு ஏன் ஏற்படுகிறது?

Cleft lips, Cleft palate என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உதட்டுப் பிளவுகள் மற்றும் வாயின் அண்ணத்தில் உண்டாகும் பிளவுகளும் குழந்தைகளுக்கு ஏன் உருவாகின்றன? இந்தியாவில் என் உறவுக்கார பெண் ஒருவரின் மகனுக்கு உதட்டில் பிளவு பிறக்கும் போதே இருந்தது. நான் மலேசியாவில் இருப்பதனால் இந்த வகையான குறைகளுடைய குழந்தைகளை நான் பார்த்ததில்லை.

அந்த பெண்ணின் மகனுக்கு இலவசமாக அறுவைசிகிச்சை செய்து உதட்டுப் பிளவுகளை சரி செய்கிறார்கள் என்று ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்த்தார்கள். அறுவை சிகிச்சை முடிந்த மறுநாள் நான் அந்த குழந்தையை பார்க்கச் சென்றேன். அந்த மருத்துவமனையில் இந்த வகையான குறைகளுடைய குழந்தைகளுக்கென தனிப் பிரிவே இருந்தது. அங்குச் சென்று அங்கு இருந்த குழந்தைகளையும் அங்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களையும் பார்த்த பொழுது எனக்குள் கோபமும் சந்தேகமும் அதிகரித்தது.

அங்கு இருந்த ஒரு தாதியிடம் "nurse" நான் இந்த அறுவை சிகிச்சைகளை செய்த மருத்துவரை காணவேண்டும் என்றேன். அதற்கு அவர் அந்த டாக்டர் இன்று வரமாட்டார் என்றார். அவர் அனுபவமுள்ள முதிர்ந்த தாதியாக இருந்ததால் நான் அவரிடம் கேட்டேன். "குழந்தைகள் ஏன் வாய் பிளவு நோய்களுடன் பிறக்கிறார்கள் என்று" அவர் என்னை யார் என்று விசாரித்து விட்டு சொன்னார் "கர்ப்பமுற்ற தாய்மார்கள், கர்ப்பமாக இருக்கும் போது உட்கொண்ட மருந்து மாத்திரைகளின் பக்கவிளைவாகத் தான் குழந்தைகள் ஊனங்களுடன் பிறக்கிறார்கள் என்று". நான் அவருக்கு நன்றி கூறி விடைபெற்றேன்.

அந்த நர்சுக்கு தெரிந்த இந்த விஷயம் ஒரு டாக்டருக்கு தெரியாதா?. குழந்தைகள் ஊனமாக பிறக்க வாய்ப்புகள் உண்டு என்று தெரிந்தும், ஏன் ஆங்கில மருத்துவர்கள் இரசாயன மருந்துகளை கர்ப்பமுற்ற பெண்களுக்கு பரிந்துரைக்கிறார்கள்?

அமெரிக்காவில் இருந்து இலவசம்
சற்று சிந்தனை செய்யுங்கள். ஏன் அமெரிக்காவில் இருந்து ஏதோ ஒரு அமைப்பு இந்தியாவில் உள்ள பிள்ளைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சைகள் செய்கிறார்கள்?. இந்த கேள்வியை நான் கேட்டதுக்காக உங்களுக்கு கோவம் உண்டாகலாம். ஆனாலும் முதலில் சிந்தியுங்கள். எங்கோ உள்ள குழந்தைகளுக்கு ஏன் எவனோ வந்து உதவ வேண்டும்?. நல்ல மனதை நான் குறை சொல்கிறேன் என்று நினைகிறீர்களா? தொடர்ந்து வாசியுங்கள்.

எது மருத்துவம்?
உதடு மற்றும் அண்ணத்தில் வெடிப்புகளுடன் குழந்தைகள் பிறக்காமல் தடுப்பது சிறந்ததா? அல்லது உடல் குறைகளுடன் குழந்தைகள் பிறக்க காரணமாக இருந்துவிட்டு, இலவச அறுவை சிகிச்சை செய்வது சிறந்ததா?. எது சிறந்தது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

மருத்துவத்தின் அரசியல்
மீண்டும் சற்று சிந்தனை செய்யுங்கள். உங்களுக்கு தெரிந்த ஒருவர் நொண்டிக் கொண்டு நடந்தால், இரத்தம் சிந்தினால் அல்லது அடிபட்டு கிடந்தால், ஏன்? என்ன? என்று விசாரிப்பீர்கள் தானே?. அதற்கு காரணமும், தீர்வும் தேடுவீர்கள் தானே?. ஆனால் அப்படி நடந்ததை நீங்கள் கண்களால் காணவில்லை என்றால். அப்படி நடந்ததே உங்களுக்கு தெரியாது என்றால், அதன் தொடர்பாக சிந்திக்கவோ, விசாரிக்கவோ மாட்டீர்கள் அல்லவா?.

அதுதான் மருத்துவ அரசியல். வெளி உலக மக்கள் யாரும் வாய் அல்லது அண்ணப் பிளவு உள்ள குழந்தைகளை பார்க்கக்கூடாது என்று திட்டமிட்டு இலவசமாக அறுவை சிகிச்சைகள் செய்கிறார்கள் என்பது எனது கருத்து. ஒருவேளை மக்கள் உதடு மற்றும் வாய் அண்ணப் பிளவுகள் உள்ள குழந்தைகளை அதிகமாக காணத் தொடங்கினால், அந்த குறைகள் உருவாக காரணம் என்ன என்று சிந்திக்கத் தொடங்குவார்கள். அதற்கு நிரந்தர தீர்வு தேடுவார்கள். தங்களின் குழந்தைகளுக்கு இந்த குறைகள் வராமல் தடுக்க முயற்சி செய்வார்கள். இது நடந்தால் ஆண்டுக்கு 11000 கோடி ரூபாய்கள் வரையில் வருமான இழப்பு ஏற்பட வாய்புள்ளது, மருத்து, இரசாயனம் மற்றும் மருத்துவ தொழில் துறைகளுக்கு. இதை நடக்க விடுவார்களா?. அந்த வருமானத்தை தக்கவைத்துக்கொள்ள தான் இந்த இலவச அறுவை சிகிச்சைகளை செய்கிறார்கள்.

பெற்றோர்களின் மனோதத்துவம்
குறைகளுடைய குழந்தைகளை பெற்றவர்கள், முதலில் வேதனைப்படுகிறார்கள். சிறிது நாட்களில் இறைவன் சோதனை, சாமி, முன்னோர்கள் சாபம், செய்வினை, ஆவி, பூதம் என எதையாவது சொல்லி தன்னை தானே ஏமாற்றிக்கொள்கிறார்கள். ஒரு குழந்தைக்கு ஏதாவது குறை ஏற்படும் போது இந்த குறை ஏன் உருவானது என்று யோசித்து, அதற்கான உண்மை காரணத்தை கண்டறிந்தால் அதன் பின்னர் பிறக்கும் எந்த குழந்தைக்கும் இது போன்ற குறைகள் உண்டாகாமல் பாதுகாக்கலாம் அல்லவா?.

ஆனால், தமிழகத்தின் பரம்பரை நோயான மறதியும், அலட்சிய போக்கும், சுயநலத்துடன் கலக்கும்போது, அடுத்தவன் எப்படி போனால் நமக்கு என்ன, நாம் நன்றாக இருந்தால் போதும் என்று முடிவுக்கு வருகிறார்கள். சென்ற தலைமுறையின் அலட்சிய போக்கும் சுயநலமும் இன்றைய தலைமுறையின் நோய்கள். இன்று நமது சுயநலமும் அலட்சியமும் நமக்கு அடுத்த தலைமுறையின் நோய்களாக மாறும்.

உதடு பிளவுக்கு காரணம்
ஆங்கில மருத்துவர்கள் கர்ப்பமுற்ற தாய்மார்களுக்கு பரிந்துரைக்கும், இரசாயன மருந்துகளே குழந்தைகள் ஊனமாக பிறப்பதற்கு மூல காரணமாக இருக்கின்றன. ஆங்கில மருத்துவர்கள் இரும்பு சத்து, கால்சியம் போன்ற சத்து மாத்திரைகள் என்ற பெயரில் கொடுக்கும் இரசாயனங்களே, தாய்மார்களின் உடலையும் கர்ப்பப்பையையும் பாதித்து, அந்த கர்ப்பப்பையில் உருவாகும் குழந்தையையும் ஊனமாக்குகிறது.

தவறான வாழ்க்கை முறைகளும், தூக்கமின்மையும், தவறான உணவு முறைகளும், இரசாயன பயன்பாடுகளும், மன சிதைவும், சில குழந்தைகளை ஊனமாக்குகின்றன. எப்படி பார்த்தாலும் 90% குழந்தைகளின் ஊனத்துக்கு இரசாயன மருந்துகளே முக்கிய காரணமாக இருக்கின்றன.

உதட்டு வெடிப்பு குறைகளுக்கு தீர்வு
ஆங்கில மருத்துவத்தையும், இரசாயனங்களையும், முழுமையாக ஒதுக்குவது மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வாகும். மருத்துவர்களை நம்பாமல் உங்கள் உடலை நம்புங்கள், உங்களை படைத்த இறைவனை நம்புங்கள், உங்களை பாதுகாக்கும் இயற்கையை நம்புங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். ஆங்கில மருத்துவம் தோன்றுவதற்கு முன்பும் குழந்தைகள் பிறந்து கொண்டு தான் இருக்கின்றன.

To Top