புதியவை
latest

ஆண்மை குறைபாடுகள் ஏன் உண்டாகின்றன?

மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அத்தனை உடல் உறுப்புகளும் அவன் வாழ்நாள் முழுமைக்கும் பயன்படுத்தவே கொடுக்கப்பட்டிருக்கிறது. மனிதன் பிறந்தது முதலாக அவனது இறப்பு வரையில் அவனது உடலில் இருக்கும் அத்தனை உறுப்புகளும் செயல்பட வேண்டும், அவன் பயன்பாட்டுக்கு இருக்க வேண்டும். இது இயற்கையின் நியதியாகும். அதனால் வயது அதிகரித்தால், உடலில் சக்திகள் குறையும், உடல் உறுப்புகள் பாதிக்கும், உள்ளுறுப்புகள் செயலிழக்கும் என்பதெல்லாம் வெறும் தவறான கருத்துக்களும், மூட நம்பிக்கைகளும் மட்டுமே.

இந்த கருத்து உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஏன் சில ஆண்களுக்கு ஆண்மை வீரிய குறைபாடுகள் உண்டாகின்றன என்பதை விளக்க வேண்டும் அல்லவா? அதற்கான காரணங்களை பார்ப்போம். ஆண்களின் ஆண்மை குறைபாடுகள் உண்டாக காரணங்கள்.

மனம் சமமின்மை
மன சமமின்மையே மிக அதிகமான ஆண்களுக்கு ஆண்மை வீரிய குறைபாடுகளை உண்டாக்குகிறது. குடும்பத்திலும், வேலையிடங்களிலும், சமுதாயத்திலும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மனதில் பதிவாகி, ஆண்மையின் வீரியத்தை குறைக்கின்றன.

மனதின் பதிவுகளில் இருக்கும் கவலை, பயம், எரிச்சல் போன்ற தீய எண்ணங்கள் மிக கேடான ஆண்மை கோளாறுகளை உண்டாக்குகின்றன. ஒருவரின் மனதினுள் பதிவான பயம் கவலை போன்ற எண்ணங்கள் சம்பந்தப்பட்டவருக்கே தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால் அந்தப் பதிவுகள் மனதின் உள்ளேயே இருந்துக் கொண்டு சம்பந்தப்பட்டவரின் உடலின் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், கெடுத்துக் கொண்டிருக்கும்.

மனதில் கவலையோ பயமோ இருக்கும் போது மனைவியுடன் கூட வேண்டும் என்ற இச்சை உருவானாலும், மனமும் உடலும் அதற்கு ஒத்துழைக்காது. அதையும் மீறி முயற்சித்தாலும் முழுமையாக ஈடுபடவும் முடியாது. விந்து முந்துதல், பாதியில் சுருங்குதல், மனதில் மற்ற எண்ணங்கள் உருவாக்குதல், பயம், கவலைகள் தோன்றுதல். உடல் வலிகள், சோர்வு போன்றவை ஏற்படலாம்.

எந்தக் கவலையும், பயமும் இல்லாமல், மனதை அமைதியாக வைத்திருப்பதே இதற்கு ஒரே தீர்வு. மனதைப் பற்றிய ஒரு இரகசியம் சொல்கிறேன். இந்த உலகத்திலும் உங்கள் வாழ்க்கையிலும் எல்லாவற்றையும், உங்களால் மாற்றிவிட முடியாது என்ற தெளிவும். இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனி தனியான மனமும் குணமும் இருப்பதனால் அவர்கள் ஒவ்வொருவரும் மாறுபட்ட குணாதிசியங்களுடன் தான் இருப்பார்கள் என்ற தெளிவும் இருந்தால். உங்களுக்கு எந்தக் கவலையும் பயமும் உண்டாக வாய்ப்பு கிடையாது. அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிடும்.

மருந்து மாத்திரைகள்
தலைவலிக்கு உட்கொள்ளும் மாத்திரைகளில் இருந்து, உடலின் எந்த நோய்க்கு எந்த வகையான இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளை உட்கொண்டாலும் அது கண்டிப்பாக ஆண்மையை பாதிக்கும். நீங்கள் உட்கொள்ளும் மாத்திரையின் அளவு சிறிதாக இருந்தாலும் அது விளைவிக்கும் பக்கவிளைவுகளின் அளவு பெரிதாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

இரசாயனம் கலந்த உணவுகள், பானங்கள், பொருட்கள் மற்றும் மருந்து மாத்திரைகளை பயன்படுத்துபவர்களின் உடல். உடலின் சேரும் இரசாயனங்களை வெளியேற்றுவதிலேயே அதிக உடலின் சக்தியை செலவழித்துவிடுவதால் . உடல் உறவு கொள்ளும் அளவுக்கு உடல் பலமும் மன பலமும் இருப்பதில்லை. அதையும் மீறி முயற்சிக்கும் போது முழுமையாக ஈடுபட பெரும்பாலும் முடிவதில்லை.

உடல் உறுப்புகளின் பலகீனம்
உடலின் உள் உறுப்புகளில் எதாவது ஒரு உறுப்பில் பலகீனம் அல்லது நோய்கள் உருவாகும் போது. அந்த பலகீனத்தை சரி செய்ய உடலின் பெரும்பாலான சக்திகள் செலவழிக்கப்படுகின்றன. இது போன்ற நேரங்களில் இயல்பாகவே ஆண்களுக்கு உடலுறவில் நாட்டம் இருக்காது. உடலின் அறிவை பொறுத்தவரையில் உடலுறவு என்பது மூன்றாம் பட்ச தேவைதான். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால் மற்றும் ஆரோக்கியமாக இருக்கும் வரையில் மட்டுமே உடலுறவில் நாட்டம் உண்டாகும்.

ஆண்மை குறைபாடுகள் ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. இதைக் குணப்படுத்த எந்த வகையான மருந்து மாத்திரைகளும் தேவையில்லை. உடல் தானாகவே நோய்களையும் பலம் இழந்த உறுப்புகளையும் சரிசெய்த பின்னர், ஆண்மையும் உடலுறவில் நாட்டமும் சுயமாக திரும்பிவிடும்.

மருந்துகள் பயன் தராது
ஆண்மை வீரிய குறைவுகள் ஏற்பட்டால் அல்லது உடலுறவில் ஈடுபடும் போது ஏதாவது குறைபாடுகள் ஏற்பட்டால் சிலர், ஆங்கில மற்றும் சித்த மருந்துகளை நோக்கி ஓடுகிறார்கள். ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்; ஆண்மை வீரியத்துக்கு பயன்படுத்தும் அனைத்து மருந்துகளும், மிக கேடான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும், மற்றும் ஆண்மையை இன்னும் பலவீனப்படுத்தும். தற்காலிகமாக உங்களுக்கு பலன் தெரியலாம் ஆனால் காலப்போக்கில் பல பக்கவிளைவுகள் உண்டாகக் கூடும்.

உண்மை காரணத்தை கண்டுபிடித்து அதை சரிசெய்தால் ஒழிய எந்தப் பலவீனத்தையும், உடல் உபாதையையும் குணப்படுத்த எவராலும் முடியாது.


« PREV
NEXT »

No comments