மனதாலும் நம்பிக்கைகளாலும் உருவாகும் நோய்கள்


1. ஒருவர் மழையில் நனைந்தால் காய்ச்சல் உருவாகும் என்று நம்புவாரேயானால், ஆரோக்கியமான உடலாக இருந்தாலும் அவர் நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்தினால், மழையில் நனைந்ததும் காய்ச்சல் உருவாகும்.

2. இதே கதைதான் குளத்தில் குளித்தால் சலி பிடிக்கும், மண்ணில் விளையாடினால் புண்கள் உருவாகும் என்பதெல்லாம், நம்பிக்கை கொண்டுவிட்டால் அவ்வாறு நடக்க வாய்ப்புகள் உள்ளன.

3. அதைப்போலவே வயதானால் கண்பார்வை குறையும், கேற்கும் திறன் குறையும், மூட்டு வலிகள் உருவாகும், முதுகில் கூன் விழுகும், நீரிழிவு நோய் உருவாகும், இரத்த கொதிப்பு உருவாகும், அது வரும், இது வரும் என்று அடுத்தவர்கள் கூறுவதை யாரெல்லாம் நம்பிக்கைக் கொண்டார்களோ, அவர்களுக்கெல்லாம் அவர்கள் நம்பிக்கை கொண்ட நோய்கள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளன.

4. என் குடும்பத்தில் பலருக்கு இந்த நோய் உள்ளது அதனால் எனக்கும் உருவாக வாய்ப்புகள் உள்ளது என்று நம்புவோருக்கு, அந்த நோய் உருவாக வாய்ப்புள்ளது.

5. இது பரம்பரை நோய் என் தாத்தா பாட்டிக்கு இருந்தது, என் பெற்றோருக்கு இருந்தது அதனால் எனக்கும் உருவாக வாய்ப்புக்கள் உள்ளன என்று நம்பிக்கை கொண்டோருக்கும், அந்த குறிப்பிட்ட நோய்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.

யாருக்கும் மனதில் அவநம்பிக்கைகள் இருக்கக் கூடாது. என்னால் முடியாது, என் நோய்கள் குணமாகாது, நான் இறுதி வரையில் மருந்து மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். டாக்டர் சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பிக்கை கொண்டவர்களுக்கு நோய்கள் குணமாவதும், மிகக் கடினம்.நோய்கள் என்பவை மனிதர்களின் கற்பனைகள் மட்டுமே என்று உணர்ந்தவர்களுக்கு அனைத்து நோய்களும் மருந்துகளின்றியே சுயமாக குணமாகிவிடும்.


To Top