மனதினால் உருவாகும் நோய்கள்

ஏழையை செல்வந்தனாகவும், செல்வந்தனை ஏழையாகவும், முட்டாளை அறிவாளியாகவும், அறிவாளியை முட்டாளாகவும், நல்லவனைக் கெட்டவனாகவும், கெட்டவனை நல்லவனாகவும் மனம் முயன்றால் மாற்ற முடியும். அதைப் போலவே ஆரோக்கியமான மனிதனை நோயாளியாகவும், நோயாளியை ஆரோக்கியமாகவும் மனம் முயன்றால் மாற்றமுடியும்.

அதை சாப்பிட்டால் அந்த நோய் உருவாகும், இதை சாப்பிட்டால் இந்த நோய் உருவாகும், இந்த உணவுகளை சாப்பிட்டால் வாயு பிடிப்பு உருவாகும், ஆட்டிறைச்சி சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு உண்டாகும், கடல் உணவுகளை சாப்பிட்டால் அரிப்புகள் உண்டாகும், இனிப்பு சாப்பிட்டால் நோய்கள் உண்டாகும், பழங்களை சாப்பிட்டால் சளி உண்டாகும், போன்ற செய்திகளை வாசித்து. அதனை மனமும் நம்பிக்கை கொண்டுவிட்டால். அந்த குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடும் போதெல்லாம் உடலில் அந்த குறிப்பிட்ட நோய்களை உருவாக வாய்ப்புகள் உள்ளன.

இந்த பருவத்தில் இந்த நோய்கள் உருவாகும், அந்த வயதில் அந்த நோய்கள் உருவாகும் என்ற தகவல்களை வாசித்தாலோ அல்லது யாராவது கூறினாலோ அவற்றை நம்பாதீர்கள். வயது அதிகரிக்கும் போது நோய்கள் உண்டாகும் என்பதும், உடல் உறுப்புகளின் செயல் திறன் குறையும் என்பதும், உடல் உறுப்புகள் செயல் இழக்கும் என்பதும் வெறும் கற்பனைகள் மட்டுமே. ஆனால் இது போன்ற செய்திகளை நம்புவோருக்கு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்றினாலும் நோய்கள் உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

மழையில் நனைந்தால் நோய்கள் உருவாகும், குளத்தில், ஆற்றில், கடலில் குளித்தால் நோய்கள் உருவாகும் போன்ற வதந்திகளை நம்பிக்கைக் கொண்டோருக்கும். ஒரு நோய் உண்டானால், அதை தொடர்ந்து மற்ற புதிய நோய்களும் உருவாகும் என்று நம்புவோருக்கும், பல நோய்கள் எளிதாக உருவாக வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறான நோய்கள் உருவாவதற்கு மனம்தான் காரணம். மனம் ஒன்றை நம்பிக்கை கொண்டுவிட்டால். உடல் அதனை ஏற்றுக் கொண்டு செயல்படுத்திவிடும். அதனால் மருத்துவ குறிப்புகள் என்ற பெயரில் Facebook, Whatsappகளில் உலாவரும் தேவையற்ற தகவல்களை வாசிக்காதீர்கள், நம்பாதீர்கள், பரப்பாதீர்கள். நீங்கள் ஒரு தவறான செய்தியை வாசித்து, அதை உங்கள் மனமும் நம்பிக்கை கொண்டுவிட்டால், அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

எந்த விசயம் எதில் வந்தாலும், யார் சொன்னாலும், அப்படியே நம்பிவிடாதீர்கள். சிந்தித்து ஆராய்ந்து பின்புதான் நம்பிக்கை கொள்ள வேண்டும்.


To Top