மனம் குணப்படுத்தும் நோய்கள் (Placebo effect)

சிலருக்கு நோய்கள் உருவானால், ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் நோய்கள் குறையத் தொடங்கிவிடும். சிலருக்கு சில குறிப்பிட்ட மருத்துவர்களை சென்று சந்தித்தாலே உடலில் தொந்தரவுகள் குறையத் தொடங்கிவிடும். சிலருக்கு உடலில் தொந்தரவுகள் உருவானால் மருந்து மாத்திரைகள் உட்கொண்டால் மட்டுமே அந்த தொந்தரவுகள் குறையும். சிலருக்கு சில செயல்களை செய்தாலும், சில மனிதர்களை சந்தித்தாலும், சில இடங்களுக்கு சென்றாலும், உடலில் தொந்தரவுகள் குறைந்துவிடும். ஒரு சிலருக்கு இவை எதையுமே செய்யாமலேயே மருந்து மாத்திரைகள் இல்லாமலேயே தூங்கி எழுந்தாலே அனைத்து தொந்தரவுகளும் குறையத் தொடங்கிவிடும்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் பலர் தங்களின் நோய்கள் குணமாகி வீடு திரும்புவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இரசாயனங்கள் நோய் தீர்க்கும் மருந்துகள் அல்ல, இரசாயனங்களால் நோய்களை குணப்படுத்த முடியாது என்று பலர் கூறுகிறார்கள். இது உண்மை என்றால் இவர்களின் நோய்கள் எவ்வாறு குணமாகின?

இங்குதான் மனம் தனது ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. இந்த மருந்தை உட்கொண்டால் நோய்கள் குணமாகும், இந்த மருத்துவரை சந்தித்தால் நோய்கள் குணமாகும், அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் நோய்கள் குணமாகும் என்பவைப் போன்ற நம்பிக்கைகள் உள்ளவர்களுக்கு அந்த செயலை செய்த உடனேயே தங்களின் நோய்கள் குணமாகத் தொடங்கிவிடும்.

இரசாயனங்கள் மருந்துகள் அல்ல என்பதும் இரசாயனங்கள் நோய்களை குணப்படுத்தாது என்பது நூற்றுக்கு நூறு விழுக்காடு உண்மை. ஆனால் அவற்றை உட்கொள்பவர்களின் மனமானது இந்த மாத்திரை தான் என் உயிரை காப்பாற்றக்கூடிய மருந்து என்று நம்பிக்கை கொண்டுவிட்டால், அவரின் நம்பிக்கையின் பெயரிலேயே நிச்சயமாக அவரின் நோய்கள் குணமாக தொடங்கிவிடும். அதே நேரத்தில் அவர் உட்கொண்ட இரசாயனங்களினால் உண்டாகும் பக்கவிளைவுகளும் நிச்சயமாக இருக்கும்.

இதை ஆங்கிலத்தில் (Placebo effect) என்று அழைப்பார்கள். மனம் மட்டும் என் நோய்கள் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருந்தால் அனைத்து நோய்களும் குணமாகிவிடும். அது எவ்வளவு கொடுமையான நோய்களாக இருந்தாலும் சரியே. உடல் உறுப்பு பாதிப்பு உள்ளவர்கள் கூட இந்த நிலைமை மாறும் என் உடல் உறுப்புகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் நிச்சயமாக அவர்களின் தொந்தரவுகள் நீங்கி அவர்களின் உடல் உறுப்புகள் மீண்டும் செயல்படத் தொடங்கிவிடும்.


To Top