புதியவை
latest

மனக்குழப்பங்கள், வேதனைகள், கவலைகள் உருவாக காரணங்கள்

மனக்குழப்பங்கள்
இந்த சமுதாய அமைப்பு பெரும்பாலும் ஒரு மனிதன் சுயமாக வாழ்வதற்கு கற்றுக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் யாரோ ஒருவரை எதிர்பார்த்தோ, சார்ந்தோ, வாழ பழக்கப் பட்டிருக்கிறார்கள்.

பெற்றோர்களோ, உடன் பிறந்தவர்களோ, நண்பர்களோ, முதலாளிகளோ, கல்வியோ, செல்வமோ, வேலையோ, தொழிலோ, ஜாதியோ, மதமோ, கடவுளோ எதையோ ஒன்றை சார்ந்தே மனிதர்கள் வாழ பழகிக் கொண்டார்கள்.

அவர்கள் சார்ந்திருந்த மனிதர்களோ விசயங்களோ அவர்களுக்கு தக்க நேரத்தில் உதவவில்லை என்றாலோ அல்லது தக்க நேரத்தில் தக்க உதவி கிடைக்காது என்ற எண்ணம் தோன்றினாலோ, அவர்கள் மனதில் சமமின்மையும், குழப்பமும் உருவாகிறது.

மன வேதனைகள்
மன வேதனைகள் உருவாவதற்கு காரணங்களாக இருப்பவை ஏமாற்றம், அவநம்பிக்கை, நம்பிக்கை துரோகம், உறவுகளின் பிரிவு, மரணங்கள், இழப்புகள், என பல காரணங்கள் இருக்கலாம்.

குடும்பத்திலும் தொழிலிலும் சமுதாயத்திலும், தனக்கு கிடைக்க வேண்டிய அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்காது போது அதையே சிந்தித்துப்  வேதனைகள் உருவாகலாம். எனக்கு அது கிடைக்கவில்லை என்ற ஏக்கமும், என்னால் எப்போதுமே ஆசைப்பட்டதை அடைய முடியாது, அல்லது மறக்க முடியாது என்ற எண்ணங்களும் சேர்ந்து மனதில் வேதனைகளை உருவாக்குகின்றன.

யாரோ ஒரு மனிதர் செய்த தவறுகளை நினைத்து, சிலர் தங்களது மனதை வேதனைக்கு ஆளாக்குகிறார்கள். தவறு செய்தவன் கூட நிம்மதியாக வாழும்போது, இவரோ நிம்மதி இல்லாமல் வாழ்ந்துக் கொண்டிருப்பார்.

மனக்கவலைகள்
மனக்கவலைகள் பெரும்பாலும் ஒருவர் இழந்த மனிதரையோ, பொருளையோ, வாய்ப்பையோ நினைத்து வருந்தும் போது உருவாகிறது. இந்த உலகில் யாரும், எதுவும், யாருக்கும் நிரந்தரமில்லை, என்ற அடிப்படை உண்மையைக் கூட புரிந்துக் கொள்ளாமல். என்னிடம் அது இல்லை அல்லது அது என்னை விட்டு தொலைந்துவிட்டது, என்று கவலையில் மூழ்குகிறார்கள்.

இந்த உலக வாழ்க்கை நமது கட்டுப்பாட்டில் இல்லை. நாம் நினைப்பது போல் எல்லாம் இந்த வாழ்க்கை அமையாது. நாம் ஆசைப்பட்ட அனைத்தையுமே அடைந்துவிட முடியாது என்ற உண்மைகளை உணர்ந்து கொண்டால். வாழ்க்கையில் உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொண்டால் குழப்பங்களும் கவலைகளும் வேதனைகளும் நம்மை அண்டாது.

« PREV
NEXT »

No comments