புதியவை
latest

மன அழுத்தங்களுக்கு தீர்வுகள்

மனிதர்களின் மனங்களில் உருவாகும் அழுத்தம், சோர்வு, கவலை, வேதனை, அனைத்துமே வெளியில் இருந்து வருபவை தான். மனதில் உருவாகும் இந்த மாற்றங்களுக்கும், தொந்தரவுகளுக்கும், அவற்றை அனுபவிக்கும் மனிதர்களுக்கும், எந்த ஒரு சம்பந்தமும் இருப்பதில்லை. பிற மனிதர் செய்த தவறுகளையும் பேசிய வார்த்தைகளையும் நினைத்து, இவர்கள் வேதனைகளை அனுபவம் செய்கிறார்.

யாரோ செய்த தவறுகளுக்கு நான் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்? என்று சிந்திக்காமல். மற்றவர்கள் செய்த செயல்களை நினைத்து-நினைத்து தன்னை வருத்திக் கொண்டு. தன் மனதை கெடுத்து, தனது ஆரோக்கியத்தையும் சீர்கெடுத்துக் கொள்கிறார்கள்.

மன அழுத்தங்களில் இருந்து மீண்டுவர,

1. முதலில் தனக்கு என்ன பிரச்சினை என்பதையும், அது உருவாக காரணம் என்ன என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

2. நமக்கு என்ன முடியுமோ அதை மட்டுமே செய்ய முயற்சிக்க வேண்டும்.

3. எப்போதும் தன்னை பிறருடன் ஒப்பிடக் கூடாது.

4. செய்ய முடியாத விசயங்களை, முடியாது என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.

5. என்னால் அது முடியாது என்பது அவமானமல்ல. அது உங்களது தனித்தன்மை என்பதை உணர வேண்டும்.

6. எல்லோராலும் எல்லா விசயங்களையும் செய்ய முடியாது என்பதை உணர வேண்டும்.

7. தினமும் புதிய விசயங்களை படித்து கற்றுக் கொள்ளுங்கள்

8. மற்றவர்களுடன் மனம் விட்டுப் பேசி தெரியாத விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள்

9. எத்தனை வயதானாலும் புதிய விசயங்களை கற்றுக் கொள்வதற்கு எந்த தடைகளும் கிடையாது

10. இந்த உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.

11. கனவிலும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவோ நினைக்கவோ கூடாது.

12. உங்களிடம் உள்ளவற்றை உள்ளது உள்ளபடி மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

13. உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அத்தனை விசயங்களையும் உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ளுங்கள்

14. அது ஏன் அப்படி நடக்கிறது? ஏன் இப்படி நடக்கிறது?, ஏன் அவ்வாறு நடக்கவில்லை?. என்று மனதை குழப்பிக் கொள்ளாதீர்கள்.

15. நீங்கள் ஒரு தனித்தன்மையுடைய படைப்பு என்பதையும், உங்களைப் போல் இந்த உலகில் யாருமே கிடையாது என்பதையும் புரிந்துக் கொள்ளுங்கள்.

16. இயற்கைக்கு திரும்புங்கள்.

17. உணவை ரசித்து சாப்பிடுங்கள்.

18. இரவில் விரைவாக படுக்கைக்குச் செல்லுங்கள்.

19. மன அமைதி இல்லாமல் இருந்தாலும், உடல் அசதியாக இருந்தாலும், ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

20. காரண காரியங்களின்றி எதுவுமே நடக்காது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


« PREV
NEXT »

No comments