புதியவை
latest

என்ன வாழ்க்கைடா இது?

நாலு காசு சேர்க்க - நாலு
கடல் தாண்டி வந்தேன்
சிறிது கஷ்டங்களுடனும்
நிறைய நினைவுகளுடனும்
கழிந்தன நாட்கள்

நாளைக்குத் தேவைப்படும்
எனும் எண்ணத்துடன்
இன்றைய வாழ்க்கையை
தனிமையிடம் அடகு வைத்தேன்

திருமணமான புதிதில்
உன் முகம் கூட முழுமையாக
என் மனதில் பதியும் முன்னே
அயல்நாட்டில் கால் பதித்தேன்

நமக்காக நாம் வாழ
பெறும் செல்வம் தேவையில்லை
அடுத்தவனிடம் பேர் வாங்க
வாழ்க்கையையே அடகு வைத்தேன்

ஊருக்காக ஒரு வாழ்க்கை
உறவுக்காக ஒரு வாழ்க்கை
நமக்காக ஒரு வாழ்க்கை
கனவினிலே ஒரு வாழ்க்கை
எதிர்காலம் ஒரு வாழ்க்கை
முதுமையிலும் ஒரு வாழ்க்கை

அடுத்தவன் திருப்திக்குத்தான்
நான் வாழ வேண்டுமென்றால்
எதற்காக இந்த வாழ்க்கை?
யாருக்காக இந்த வாழ்க்கை?

« PREV
NEXT »

No comments