கேள்வி பதில்
கேள்வி பதில்

ஆசை மற்றும் பயம் வியாபாரிகளின் மூலதனம்

ஆசை மற்றும் பயம், இவை இரண்டும் மனிதர்களின் அனைத்து நோய்களுக்கும் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கின்றன. மனிதர்களுக்கு ஆசைகாட்டி அல்லது பயத்தை உருவாக்கி எதை வேண்டுமானாலும் சாதித்துக் கொள்ளலாம்.

இன்றைய வியாபாரிகளின் மூலதனம் எது  என்று சற்று  சிந்தித்துப் பாருங்கள். நம் ஊர்களில் இருக்கும் சிறு வியாபாரிகளை விட்டுவிடுங்கள். பெரிய மற்றும் சர்வதேச வியாபாரிகள் தங்களின் வியாபாரங்களை எவ்வாறு  நடத்துகிறார்கள்? எவ்வாறு விரிவு படுத்துகிறார்கள்? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆசை மற்றும் பயம், இவற்றை வைத்துதான் வியாபாரிகள் தங்களின்  வியாபாரங்களை நடத்திவருகிறார்கள். மனிதர்களுக்கு ஆசையை உருவாக்குவது அல்லது பயத்தை உருவாக்குவதும், இவை இரண்டுமே இன்றைய காலகட்டத்தின்  கேடுகெட்ட வியாபார தந்திரமாகும்.

ஒரு பொருளை விற்பனை செய்ய  வேண்டுமா? அதற்கு  மிகச் சுலபமான வழி, அந்தப் பொருள் அதை செய்யும், இதை செய்யும் என்று மக்களின் ஆசையைத் தூண்ட வேண்டும் அவ்வளவுதான். அந்த வழி கை கொடுக்கவில்லையா?. இந்தப் பொருளை பயன்படுத்தவில்லை என்றால் அப்படி ஆகும் இப்படி ஆகும் என்று பயமுறுத்த வேண்டும். ஒரு உதாரணத்துக்காக சொல்கிறேன். நம் தொலைக்காட்சி பெட்டிகளில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களை சற்று நேரம்  எண்ணிப் பாருங்கள்.

எங்கள் பொருட்களை உட்கொள்ளுங்கள்  ஆரோக்கியமாக வாழலாம். எங்கள் பொருட்களை பயன்படுத்துங்கள் வெண்மையான சருமம் பெறலாம். எங்கள் பொருட்களை பயன்படுத்துங்கள் முடி நன்றாக வளரும். எங்கள் பொருட்களை பிள்ளைகளுக்குக் கொடுங்கள், நன்றாக வளருவார்கள், புத்திசாலியாக இருப்பார்கள் இப்படி ஏதாவது ஒரு பொய்களை சொல்லி உங்களின்  ஆசைகளைத்  தூண்டுவார்கள்.

இன்னொரு பக்கம் அதே தொலைக்காட்சி பெட்டியில், எங்கள் பொருட்களை பயன்படுத்துங்கள் இல்லை என்றால் உங்களுக்குச் சருமம் நோய்கள் உருவாகும், உங்களை கிருமிகள் தாக்கும். எங்கள் கிரிமை பயன்படுத்துங்கள் இல்லை என்றால் புற்றுநோய் உருவாகும். இப்படி ஏதாவது பொய்களை சொல்லி மக்களை பயமுறுத்துவார்கள். வியாபார கூட்டத்தினர்.

இப்போது புரிகிறதா ஏன் தமிழகம்  முழுவதும் இலவச தொலைக்காட்சி பெட்டிகள் கொடுத்தார்கள் என்று. நீங்கள் செய்திகளோ  திரைப்படங்களோ பார்ப்பதற்காக  அல்ல, அதன் இடைவேளைகளில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களை பார்ப்பதற்காகத் தான். உங்கள் மனதில் ஆசை அல்லது பயத்தை விதைக்க தொலைக்காட்சி பெட்டிகளை கருவிகளாக பயன்படுத்துகிறார்கள். இதுவும்  சர்வதேச கம்பெனிகளின் சதி தான்.

இப்போது நம் வாழ்க்கையை சற்று  ஆராய்ந்து பார்ப்போம், மதம் முதல், மருத்துவர்கள் வரையில்  அனைவரும் நமக்கு ஏதாவது ஒரு வகையில் ஆசையை அல்லது பயத்தை தூண்டிவிட்டு  தங்களின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். மனிதர்களிடம் ஆசையும் பயமும் இருக்கும் வறையில் அவர்கள், யாருக்காவது   அடிமையாகவே இறுதி வரையில் இருக்க நேரிடும்.

மருத்துவ உலகத்தில் வியாபாரம்
இன்றைய மருத்துவ உலகத்தைப் பாருங்கள், குறிப்பாக ஆங்கில மருத்துவர்கள் செய்வதை சற்று  சிந்தித்துப்  பாருங்கள். ஆங்கில மருத்துவர்களிடம் சென்றால், 80% ஆங்கில மருத்துவர்கள் இரண்டு விசயங்களைக் கண்டிப்பாக செய்வார்கள்.

நோய்களைப் பற்றிய அல்லது உங்கள் உடலின் தொந்தரவுகளைப்   பற்றிய பயத்தை முதலில் ஏற்படுத்துவார்கள். ஏதாவது ஒரு  உடலின் தொந்தரவுக்காக ஆங்கில மருத்துவரை சென்று சந்தித்தால் அவர் எல்லா சோதனைகளையும் செய்துவிட்டு, உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் வேலையைத் தொடங்குவார்.

ஆங்கில மருத்துவத்தின் பயமுறுத்தும் வேலை
அவருக்கு மருத்துவம் செய்ய தெரியவில்லை என்றால் அல்லது குணப்படுத்த முடியவில்லை என்றால் ஒன்றை முதலில் செய்வார். இந்த நோயைக் குணப்படுத்த முடியாது கண்டிப்பாக மரணமடைந்து விடுவீர்கள் என்பார்.  உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லை என்றால் உயிருக்கே ஆபத்து என்பார். உடலின் உறுப்பை வெட்டி எடுக்க வேண்டும் இல்லையேல் உயிருக்கு ஆபத்து என்பார். நான் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை தினமும் உட்கொள்ள வேண்டும், இல்லையேல் உயிர் போய்விடும் என்பார். இவ்வாறாக ஏதாவது ஒரு பொய்யை சொல்லி பயத்தை முதலில் நோயாளிகளின் மனதில் உருவாக்குவார்கள்.

இவர்கள் செய்யும் மிகவும்  கேடான செயல், மனிதனின் மரணத்துக்கு நாள் குறிப்பது தான். மனிதனின் மரணத்துக்கு நாள் குறிக்க இவர்கள் யார்?. இவர்களுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?. ஆங்கில மருத்துவர்களா மனிதர்களைப் படைத்தார்கள்?.

நோய்களை குணப்படுத்த தெரியவில்லை என்றால், உண்மையான மனிதனாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?. “ஐயா எனக்கு உங்களின் நோயை குணபடுத்த தெரியவில்லை, மற்ற மருத்துவங்களில் அல்லது மற்ற மருத்துவரிடம் முயற்சி செய்து பாருங்கள்” என்று தானே கூற வேண்டும். இதுதானே தர்மம். இதை விட்டுவிட்டு, அவர்களுக்கு  தெரியவில்லை என்ற ஒரே காரணத்துக்காக, யாராலும் குணபடுத்த முடியாது நீங்கள் கண்டிப்பாக இறந்துவிடுவீர்கள்  என்பார். “நீயாட என்னைப் படைத்தாய்? என் சாவுக்கு நாள் குறிக்க நீ யாரடா?” என்று கேள்வி கேட்க திராணியற்றவர்கள். அந்தப் பன்னாடைகள் சொல்வதை நம்பி உயிரை விட்டுவிடுகிறார்கள்.

ஆங்கில மருத்துவர்கள் ஆசைகளை  தூண்டுவார்கள்
இந்த இரசாயனத்தை உட்கொள்ளுங்கள், உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளரும், ஆரோக்கியமாக இருக்கும், புத்திசாலியாக இருக்கும் என்று ஏதாவது பொய்களை சொல்லி கர்ப்பம் தரித்த தாய்மார்களுக்கு மருந்துகளை விற்பனை செய்வார்கள்.

கர்ப்பமான தாய்மார்கள் இந்த ஊசியை போட்டுக் கொள்ள  வேண்டும், அந்த ஊசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும், புத்திசாலியாக இருக்கும் என்று ஆசையைத் தூண்டுவார்கள்.

பக்கவிளைவுகள் இல்லாத ஆங்கில மருந்துகளே இல்லை என்று எல்லா ஆங்கில மருத்துவர்களுக்கும் தெரியும், அதை தெரிந்து கொண்டே  கர்ப்பம் தரித்த தாய்மார்களுக்கு வேண்டுமென்றே சத்து மாத்திரைகள் என்ற பெயரில் இரசாயனங்களை கொடுத்து. ஆரோக்கியம் இல்லாத, நோய்வாய்பட்ட, ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கக் காரணமாக சில ஆங்கில மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு கேடுகெட்ட பணத்தாசை பிடித்தவர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.

ஆசையும் பயமும் தான் ஆங்கில மருத்துவத்தின் மூலதனம்
இன்றைய பெரும்பாலான ஆங்கில மருத்துவர்கள், குறிப்பாக பெரிய காப்ரெட் நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் இந்த பயமுறுத்து வேலைகளையும், ஆசை காட்டும் வேலைகளையும் வைத்தே வியாபாரம் நடத்துகிறார்கள்.

பல பெரிய மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு, “டார்கேட்” கொடுக்கப்படுகிறது. இத்தனை அறுவை சிகிச்சைகள்  செய்ய வேண்டும். இவ்வளவு மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும். இவ்வளவு சத்து மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என்று. அந்த "டார்கேட்டை" அடையவே ஆரோக்கியமான மனிதர்களையும் நோயாளிகளாக மாற்றுகிறார்கள் சில மருத்துவர்கள்.

ஜாக்கிரதையாக இருங்கள். எந்த ஒரு பெரிய மருத்துவமனைக்கும் செல்லாதீர்கள். நான் உட்பட யார் சொல்வதையும் அப்படியே நம்பாதீர்கள். நன்றாக சிந்தித்து, ஆராய்ந்து செயல்படுங்கள்.

பயம் மற்றும் ஆசை வேண்டாம்
நோய்களைப் பார்த்தும், உடலின் தொந்தரவுகளை பார்த்தும் பயம் கொள்ளாதீர்கள். எல்லா நோய்க்கும் ஒரு தீர்வு நிச்சயமாக இருக்கும்.

பெரிய மருத்துவமனைகளுக்கும் செல்லாதீர்கள். இலவசமாக எந்த உடல் பரிசோதனைக்கும் செல்லாதீர்கள். யார் சொல்வதையும் முழுமையாக நம்பாதீர்கள். தொலைக்காட்சி பெட்டியில் வரும் விளம்பரங்களில் காட்டப்படும் எதையும் வாங்காதீர்கள்.

சிந்தித்துச்  செயல்படுங்கள்...


« PREV
NEXT »

No comments