அனைத்து நோய்களுக்கும் மூல காரணம்

உடலின் கழிவுகளை வெளியேறவிடாமல் தடுப்பதே அத்தனை நோய்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறது. ஒன்றை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள், உடலிலிருந்து எந்த ஒரு நல்ல பொருளும் உடலுக்கு தேவையான பொருளும் இயல்பாக வெளியேறாது. அதனால் உடலில் இருந்து எது சுயமாக வெளியேறினாலும் தடுக்காதீர்கள். போனால் போகட்டும் என்று விட்டுவிடுங்கள்.

- காதுகளில் இருந்து வெளியேறும் நீர், அழுக்கு, சீல், சலம், கட்டி

- கண்களில் இருந்து வெளியேறும் அழுக்கு, கண்ணீர், ஊளை, கட்டி

- வாயிலிருந்து வெளியேறும் எச்சில், ஜொல்லு, வாணி, வாந்தி

- தோலின் மூலமாக வெளியேறும் புண்கள், கட்டிகள், அரிப்பு, வியர்வை, கெட்ட வாயுக்கள், சலம்

- உடலில் இருந்து வெளியேறும், ஏப்பம், தும்மல், சளி, இருமல், காய்ச்சல், உஷ்ணம், வாந்தி, வயிற்று போக்கு, மலம், சிறுநீர், வாயுக்கள், கெட்ட வாயுக்கள் இன்னும் பல.

உடலில் இருந்து வெளியேறும் அனைத்துமே உங்கள் உடலுக்கு தேவையற்ற விசயங்கள், மற்றும் உங்கள் உடலுக்கு ஒவ்வாதவை. உடலில் நோய்களையும், தொந்தரவுகளையும் உருவாக்கக் கூடியவை. அதனால் தான் உடல் இவற்றை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இதைப் புரிந்து கொண்டும். உடலில் இருந்து வெளிவரும் எந்த விசயத்தையும், எந்தக் காரணத்தை கொண்டும் தடுக்கக் கூடாது.

கழிவுகளை தடுப்பதே நோய்
மேலே குறிப்பிடப்பட்ட எதுவுமே நோய்கள் அல்ல, வெறும் உடலை சுத்தப்படுத்தும் வேலை மட்டுமே. உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளை தடுப்பதே, மனிதனின் அனைத்து தொந்தரவுகளுக்கும் நோய்களுக்கும் மூல காரணமாக இருக்கிறது.

சிறு வயதில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் கழிவு வெளியேற்றத்தை தடுக்கும் மருந்துகளே, பிள்ளைகள் பெரியவர்கள் ஆனதும் உருவாகும் அனைத்து நோய்களுக்கும் மூல காரணமாக இருக்கிறது.

நல்ல பொருட்கள் உடலில் இருந்து வெளியேறாது
எந்த நல்ல விசயமும், உடலுக்குத் தேவையான விசயமும் உடலை விட்டு வெளியில் போகாது. ஏதாவது ஒன்று உடலை விட்டு வெளியேறினால் அது உடலுக்குத் தேவையில்லை என்று அர்த்தம். உடலுக்கு சுயமாக அறிவு இருக்கிறது, அந்த அறிவு உடலுக்குத் தேவையான நல்ல விசயங்களை பாதுகாக்கும் தேவையற்றதை வெளியேற்றும்.

உடலின் கழிவுகளை வெளியேறவிடாமல் தடுப்பதே அத்தனை நோய்களுக்கும் மூல காரணமாக இருக்கிறது என்பதை நினைவில் கொண்டு. கழிவு வெளியேற்றத்தை தடுக்காதீர்கள், நோய்களை உருவாக்காதீர்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

To Top