உட்கொள்ளக் கூடாத உணவு வகைகள் எவை?

உட்கொள்ள வேண்டிய உணவு என்றும் உட்கொள்ளக் கூடாத உணவு என்று பொதுவாக பிரிக்க முடியாது. ஒவ்வொரு மனிதனின் உடலும் தனித் தன்மையுடையதாக இருப்பதனால், உட்கொள்ளக் கூடாத உணவு வகைகள் என்பது ஒவ்வொரு தனி நபருக்கும் மாறுபடும். அவர் அவர் உடலால் எளிதில் ஜீரணிக்க முடியாத அத்தனை உணவுகளும், உட்கொள்ளக் கூடாதவைதான்.

உடலால் எளிதாக ஜீரணிக்க முடியாத உணவுகளை உட்கொண்டால் அவை வயிற்றில் வெகு நேரம் கிடந்தது அழுகி உடல் உபாதைகளையும் நோய்களையும் உண்டாக்கும்.To Top