FALSE
HIDE

Grid

GRID_STYLE
FALSE

Hover Effects

TRUE

அண்மைய பதிவுகள்:

latest

தமிழே நமது அடையாளம்

எத்தனைக் கல்லைப் போட்டாலும் பாறையைத் தூக்கிப் போட்டாலும் பிரிந்து மீண்டும் கூடிவிடும் குளத்து நீரைப் பின்பற்று ஜாதியும் மதமும் வேற்ற...

எத்தனைக் கல்லைப் போட்டாலும்
பாறையைத் தூக்கிப் போட்டாலும்
பிரிந்து மீண்டும் கூடிவிடும்
குளத்து நீரைப் பின்பற்று

ஜாதியும் மதமும் வேற்றுமையும்
பிரிவினையல்ல அடையாளம்
எத்தனை வேற்றுமை இருந்தாலும்
தமிழே நம்பொது அடையாளம்

பிறப்பில் வேற்றுமை தோன்றிடினும்
தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டுமே
எதிரிகள் கூட்டம் கிடுகிடுத்து
தமிழர்கள் காலில் வீழட்டுமே

பிரச்சனை பற்பலயென்றாலும்
கலவரம் எத்தனை வந்தாலும்
வேற்றுமை எத்தனை இருந்தாலும்
மீண்டும் கூடிடு தமிழினமே

பிரிக்க நினைப்பவர் பலருண்டு
சேர்க்க நமது தமிழுண்டு
மொழியே நமது வேராகும்
தமிழே நமது உயிராகும்

No comments