சிறுவர்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவு கொடுக்க வேண்டும்?

சிறுவர்களுக்கு பசியில்லாமல் கொடுக்கப்படும் உணவுகளே பின்னாட்களில் அவர்களின் உடலிலும் மனதிலும் நோய்களாக வெளிப்படுகின்றன. அதனால் சிறுவ சிறுமிகளுக்கு பசி உண்டாகும் வரையில் காத்திருந்து, அவர்களுக்கு பசி உண்டான பின்பு உணவைக் கொடுக்கவும்.

ஒரு நாளைக்கு இத்தனை முறை என்றோ, கடிகார நேரத்தைக் கணக்கிட்டோ உணவு கொடுக்கக் கூடாது. நன்றாக பசி உண்டான பிறகு அவர்களின் பசியின் அளவுக்கு எளிதாக ஜீரணிக்க கூடிய உணவுகளை கொடுப்பதே குழந்தைகளுக்கு நன்மையும் ஆரோக்கியமுமாகும்.

To Top