புதியவை
latest

Placebo effect என்றால் என்ன?

சிலருக்கு நோய்கள் உருவானால், ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் நோய்கள் குணமாகிவிடும். சிலருக்கு சில குறிப்பிட்ட மருத்துவர்களை சென்று சந்தித்தாலே உடலில் தொந்தரவுகள் குறைந்துவிடும். சிலருக்கு உடலில் தொந்தரவுகள் உருவானால் மருந்து மாத்திரைகள் உட்கொண்டால் மட்டுமே அந்த தொந்தரவுகள் நீங்கும்.

சிலருக்கு சில செயல்களை செய்தாலும், சில மனிதர்களை சந்தித்தாலும், சில இடங்களுக்கு சென்றாலும், உடலில் தொந்தரவுகள் குறைந்துவிடும். ஒரு சிலருக்கு இவை எதையுமே செய்யாமலேயே மருந்து மாத்திரைகள் இல்லாமலேயே தூங்கி எழுந்தாலே அனைத்து தொந்தரவுகளும் குணமாகிவிடும்.

இதுதான் ப்லேசிபோ எபெக்ட் நம்பிக்கையினால் விளையும் விளைவுகள். இதை செய்தால் இது நடக்கும் என்று ஒருவர் மனதாலே நம்பிக்கை கொண்டுவிட்டால், அந்த குறிபிட்ட செயலை செய்யும்போது, அவர் நம்பிக்கை கொண்ட விளைவுகள் நடக்கும்.
« PREV
NEXT »

No comments