இந்த உலகத்தில் உள்ள அத்தனை விசயங்களும் அழியக்கூடியவையா?

இந்த உலகத்தில் நாம் காணும் அனைத்தும் ஒன்று மற்றொன்றாக மாற்றம் பெறுமே ஒழிய எதுவுமே அழியாது.

உதாரணத்துக்கு ஒரு பழம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பழத்தை மனிதன் சாப்பிட்டதும் பழம் அழிவதில்லை மாறாக பழம் மனிதனாக மாறுகிறது. அந்த மனிதன் மரணித்து, அவன் உடலை புதைத்ததும், அது மக்கி மண்ணாகிறது. அந்த மண்ணிலிருந்து (மனிதனிலிருந்து) புற்களும் புழுக்களும் உற்பத்தியாகின்றன. புற்களை ஆடு சாப்பிடுகின்றது. புற்கள் ஆடாக மாறுகின்றன. ஆட்டை புலி சாப்பிட்டால், ஆடு புலியாக மாறுகிறது.

மேலே குறிப்பிட்ட சுழற்சியின் படி, ஒரு பழம், மனிதனாகி, மண்ணாகி, புல்லாகி, ஆடாகி, புலியாகிவிட்டது. நாளை அந்த புலியும் வேறொரு உயிராக மாறும், இவ்வாறு இந்த உலகில் உயிருள்ள மற்றும் உயிரில்லாத அதனை விசயங்களும் அழியாமல் உருமாற்றங்கள் மட்டுமே அடைகின்றன.


To Top