புதியவை
latest

இந்த உலகத்தில் அனைத்து விஷயங்களும் அழியக்கூடியவையா?

இல்லை, இந்த உலகத்தில் ஒன்று மற்றொன்றாக மாற்றம் பெறுமே ஒழிய எதுவுமே அழியாது.

உதாரணத்துக்கு ஒரு பழம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பழத்தை மனிதன் சாப்பிட்டதும் பழம் அழிவதில்லை மாறாக பழம் மனிதனாக மாறிவிட்டது. மனிதன் இறந்து மக்கி மண்ணாகிறான். அந்த மண்ணிலிருந்து (மனிதனிலிருந்து) புற்களும் புழுக்களும் உற்பத்தியாகின்றன. புற்களை ஆடு சாப்பிடுகின்றது. புற்கள் ஆடாக மாறுகின்றன. ஆட்டை புலி சாப்பிட்டால், ஆடு புலியாக மாறுகிறது. புலி செத்து மண்ணாகிறது. அந்த மண்ணிலிருந்து புற்கள் முளைக்கின்றன.

இவ்வாறு இந்த உலகில் உயிருள்ள மற்றும் உயிரில்லாத அதனை விஷயங்களும் அழியாமல் உருவமாற்றங்கள் மட்டுமே அடைகின்றன.
« PREV
NEXT »

No comments