உடலின் மொழிகள் என்பது தாகம், பசி, காய்ச்சல், வலிகள் போன்று உடல் மனிதனுடன் உரையாடும் வழிமுறைகள். உடல் தனக்கு தேவைகள் உருவாகும் போதும், தொந்தரவுகள் உருவாகும் போதும் அவற்றை உணர்த்த சில அறிகுறிகளை மனிதர்களுக்கு காட்டும். சிலர் அந்த அறிகுறிகளை புரிந்துக்கொள்ளாமல் அவற்றை நோய்கள் என்று நம்புவதனால், சிறு அறிகுறிகள் கூட நோய்களாக மாறுகின்றன.