நாம் ஒருவருக்குச் செய்த உதவிக்கு பலனை அவரிடமே எதிர்பார்க்கக் கூடாது. உதவி செய்வது மட்டுமே நமது கடமை. அதன் பலன், எப்போது, எவ்வாறு, எவரிடமிருந்து, திரும்ப வரும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் செய்த ஒவ்வொரு உதவிக்கும் நிச்சயமாக பலன் கிடைக்கும்.