உடலின் வலிகளும், வலிகள் மறைத்து போவதும்

உடலில் வலிகள் இருக்கும் வரையில் உடலுக்கு பெரிய அளவில் ஆபத்து ஏதுமில்லை. ஆனால் உடலின் வலிகளை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகளை உட்கொண்டு, பின் வலிகள் மரத்துவிட்டால், இப்போதுதான் உண்மையான ஆபத்து தொடங்குகிறது என்று அர்த்தம். உடலின் ஏதாவது ஒரு பகுதியில் வலி உண்டானால், ஏதோ ஒரு புதிய நோய் உருவாகிக்  கொண்டிருக்கிறது என்று அர்த்தமில்லை. மாறாக வலி ஏற்படும் பகுதியில் நோய் குணப்படுத்தும் வேலை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். இந்த உண்மையை ஆராய சர்க்கரை நோயாளிகளை எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம்.

மனிதர்கள் பின்பற்றும் சில தவறான வாழ்க்கை முறைகளினால் உடலில் கெட்ட சர்க்கரைகள் உருவாகவும், தேங்கவும் தொடங்குகின்றன. உடலில் உருவாகும் கெட்ட சர்க்கரைகள் பெரும்பாலும் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். ஆனால் சர்க்கரை நோயைக் குணப்படுத்துகிறேன் என்ற பெயரில் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளும் போது; கெட்ட சர்க்கரைகள் உடலில் இருந்து வெளியேற முடியாமல் உடலின் உள்ளேயே தேங்கத் தொடங்கும்.

கெட்ட சர்க்கரைகள் எந்த உறுப்பில் அதிகமாக சேருகிறதோ, அந்த உறுப்பை பாதித்து, அதை பழுதாக்கிவிடும். இரத்தத்தில் சுழன்று கொண்டிருக்கும் கெட்ட சர்க்கரைகள், புவியீர்ப்பு விசையின் காரணமாக கால் பாதங்களில் அதிகமாக சேரும். மருந்து மாத்திரைகள்  சாப்பிட்டதால் தான் கெட்ட சர்க்கரைகள் உடலிலேயே தேங்கி கால்களில் புண்களும், வலிகளும்  உருவாகின்றன என்பதை உணராமல். வலி உண்டானவுடன் மீண்டும் மருத்துவரையே நாடி, வலியை கட்டுப்படுத்த இன்னும் அதிகமான மருந்து மாத்திரைகளை உட்கொள்ள தொடங்குவார்கள்.

இப்போது என்ன நடக்குமென்றால் உடலில் தேங்கியிருக்கும், இரசாயனங்களும், கழிவுகளும் காலில் ஒரு துளையிட்டு புண்ணாகி உடலிலிருந்து வெளியேற முயற்சி செய்யும். அந்த புண்ணையும் மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தும் போது, கால்கள் மரத்துப் போகும், பல வேளைகளில் கால் அழுகத் தொடங்கும். கால் விரல்கள் அழுகி விழுவதுக் கூட பலருக்கு தெரிவதில்லை. பல நோயாளிகளுக்கு கால்கள்  இருக்கின்றது என்ற உணர்வே இருக்காது.

வலி  உண்டான போது அச்சம் கொண்ட நோயாளிகள் வலி மறைந்து கால்கள் மரத்துப் போன பிறகு அச்சத்தை விட்டு ஏதோ நோய்கள் குணமாகி விட்டதைப் போன்று கற்பனை செய்யத் தொடங்குகிறார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு கால்கள் மரத்துப் போவதும்  உணர்ச்சிகள் இல்லாமல் போவதும் ஒரு ஆபத்தான அறிகுறியாகும். இதற்குப் பின்புதான் அவர்களுக்கு கால்கள்  அழுகத் தொடங்கும், புண்களும் பெரிதாகத் தொடங்கும்.

நான் எதற்காக இவற்றை  விவரமாக கூறிக் கொண்டிருக்கிறேன் என்றால் சர்க்கரை நோயாளிகளின் கால்களில் புண்கள் உருவாவதற்கும், கால்கள் அழுகுவதற்கும் இரசாயன மருந்து மாத்திரைகள் தான் முக்கிய காரணம். ஒருவேளை பல வருடங்களாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கு கால்களில் திடீரென புண்கள்  தோன்றினால் அல்லது வலிகள் உருவானால் அச்சம் கொண்டு அதை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகளை நாடாதீர்கள். வாழ்க்கை முறைகளையும், உணவு முறைகளையும் மாற்றுங்கள். உங்கள் உடலை நம்புங்கள்.

காலில் உண்டான புண்களின் வழியாக உடலில் சேர்ந்திருக்கும் அனைத்து இரசாயனங்களும், கழிவுகளும், கெட்ட சர்க்கரைகளும், வெளியேறிவிடும். அதன் பின்பாக உடல் சுயமாக அந்த புண்ணை ஆற்றி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்துவிடும். தாயின் கருவறையில் எந்த ஒரு முன்மாதிரி இன்றி உங்கள் உடலை உருவாக்கியது உங்களின் இயக்க சக்திதானே?. அந்த சக்திக்கு உடலில் ஒரு குறைபாடு ஏற்படும்போது அதை  சரிசெய்துகொள்ள தெரியாதா? சிந்தித்துப் பாருங்கள்.

To Top