கேள்வி பதில்
கேள்வி பதில்

ரெய்கி ஆற்றலுக்கு ஒரு அறிமுகம்

ரெய்கி மிகவும் புத்தி கூர்மையுடைய ஆற்றல் (சக்தி). ரெய்கிக்கு யாரும் எதுவும் கற்றுத்தரத் தேவையில்லை. மின்சாரம் எவ்வாறு தான் சேரும் பொருளுக்கு ஏற்ப தனது தன்மையை மாற்றி கொள்கிறதோ அதைப் போலவே ரெய்கியும் தான் சேரும் மனிதரோ, விலங்கோ, பொருளோ, இடமோ, அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும்.

மின்சாரம் விளக்கில் கலந்தால் வெளிச்சம் தரும், மின்விசிறியில் கலந்தால் காற்றை தரும், வானொலிகள் கலந்தால் ஓசையை தரும், தொலைக்காட்சியில் நுழைந்தால் காட்சிகளை தரும். எந்த பொருளில் நுழைகிறதோ அந்த பொருளுக்கு ஏற்ப தனது தன்மைகளை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் உடையது. அதைப் போலவே ரெய்கியும் சேரும் மனிதர்களுக்கு ஏற்பவும், பொருட்களுக்கு ஏற்பவும், தன்னை மாற்றிக் கொள்ளும்.

ரெய்கி ஒரு மனிதனின் உடலில் நுழையும் பொழுது அந்த மனிதரின் குறை நிறைகளை முதலில் சரிசெய்ய தொடங்கும். ஒரு நோயாளியின் உடலில் நுழைந்தால் அந்த நோயாளியின் நோய்களுக்கான மூலத்தை கண்டறிந்து அவற்றை சரி செய்ய தொடங்கும். ரெய்கி ஒரு பொருளிலோ, இடத்திலோ, நுழைந்தால் அந்த பொருளின் அல்லது இடத்தின் குறைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யும். தீய சக்திகள் எங்கிருந்தாலும் அவற்றை ரெய்கி வெளியேற்றிவிடும். மனிதர்கள், விலங்குகள், பொருட்கள், மற்றும் கட்டடங்களின் சக்தியை நிலைநிறுத்தவும் மேம்படுத்தவும் செய்யும்.

நம்மை அறியாமலேயே நமது தினசரி வாழ்க்கையில் ரெய்கியை பயன்படுத்தி வருகிறோம். ஒருவருக்கு தலைவலி, வயிற்று வலி, கால் வலி, மூட்டு வலி, போன்றவை உருவானால் தன்னை அறியாமலேயே தன் கரங்களால் வலிக்கும் இடத்தை அவர் தேய்த்து கொடுப்பார். அவரின் வலிகளும் குறையத் தொடங்கும்.

ஒரு குழந்தை காரணமில்லாமல் அழுது கொண்டிருந்தால் அதன் தாய் அந்தக் குழந்தையை தன் கரங்களால் தேய்த்து கொடுப்பார், தடவி கொடுப்பார். சற்றுநேரத்தில் அந்த குழந்தையும் அழுகையை நிறுத்திவிடும். விலங்குகளுக்கு காயங்கள் உண்டானால் விலங்குகள் காயம் கண்ட இடத்தில் நக்கிக் கொண்டிருக்கும் அந்த காயங்கள் விரைவில் ஆறிவிடும்.

நம் அன்புக்குரிய ஒருவர் நோய்வாய்ப் பட்டாலோ, ஏதாவது பிரச்சனையில் மாட்டி இருந்தாலோ, கவலையில் இருந்தாலோ, நாம் அவரின் கைகளைப் பற்றி ஆறுதல் கூறுவோம். அல்லது அவர்களை கட்டியணைத்து ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் கூறுவோம். உண்மையில் நாம் என்ன செய்கிறோம் என்றால் வார்த்தைகளின் அல்லது ஓசையின் மூலமாக நாம் நமது ஆற்றலை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ரெய்கி ஆற்றல் குறைவாக இருப்பதனால் அவர்களுக்கு வாழ்க்கையில் பல தொந்தரவுகள் உருவாகிறது. நம் மூலமாக அவர்களுக்கு கிடைத்த ஆற்றல் அவர்கள் பிரச்சனைகளில் இருந்து வெளிவர உதவியாக இருக்கும்.


« PREV
NEXT »

No comments