(Reiki) ரெய்கி எனும் ஆன்மீக பயிற்சி ஜப்பானில் 1922ஆம் ஆண்டு மிகவோ உசுய் (Mikao Usui) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. “ரெய்” என்றால் பிரபஞ்சம் என்று பொருள். “கி” என்றால் ஆற்றல் அல்லது சக்தி என்று பொருள். ரெய்கி என்றால் பிரபஞ்ச ஆற்றல் அல்லது பிரபஞ்ச சக்தி என்று பொருள் கொள்ளலாம். பிரபஞ்ச ஆற்றலை பயன்படுத்தி மனிதர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதும் நோய்களை குணப்படுத்திக் கொள்வதும் தான் ரெய்கியின் நோக்கமாகும்.

மிகவோ உசுய் அவர்கள் ரெய்கி பயிற்சியின் மூலமாக மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், நோய்களை குணப்படுத்திக் கொள்ளவும், தேவையான வழிமுறைகளை வகுத்து தந்தார்கள். அவருக்குப்பின் இந்தக் கலை ஜப்பானிலிருந்து அமெரிக்காவுக்கு பரவி, அமெரிக்காவிலிருந்து உலகம் முழுவதும் பரவியது.

இந்த பிரபஞ்சமே மனிதர்களுக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. அதனால் மனிதர்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் பிரபஞ்சத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த உலகம் முழுவதும் பிரபஞ்சத்தின் ஆற்றல் பரவி இருப்பதால் அந்த ஆற்றலை முறையாகப் பயன்படுத்தும் போது மனிதர்கள் தங்களின் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.

மனிதர்களின் உடலையும் மனதையும் உருவாகியது இந்த பிரபஞ்ச ஆற்றல்தான், உருவாக்கியவருக்கு, உருவாகிய பொருள் பழுதானால் சரிசெய்யத் தெரியாதா?. ரெய்கியின் மூலமாக சிறிய நோய், பெரிய நோய் என்ற பாகுபாடின்றி மனிதர்களின் அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்திக் கொள்ளலாம்.

ரெய்கியின் மூலமாக தனக்கும், தன் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் சக மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும், கூட உதவி செய்யலாம். நோய் கண்டிருக்கும் மனிதர்களின் மீது ரெய்கியை செலுத்தும் பொழுது அவர்கள் தங்கள் நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியத்தை அடைவார்கள். நோய்க் கண்ட அல்லது விபத்துக்குள்ளான விலங்குகளின் மீது ரெய்கியை செலுத்தும்போது அந்த விலங்குகள் விரைவாக குணமடையும். வாடிக் கிடக்கும் தாவரங்களின் மீது அல்லது காய்க்காத மரங்களின் மீது ரெய்கியை செலுத்தும்போது அவை மீண்டும் செழிப்பாக வளர்ந்து, பூத்து, காய்த்து நிற்கும்.

ரெய்கி என்பது ஒரு புத்திசாலி சக்தியாகும். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று கட்டளையிட்டால் போதும் எப்படி செய்யவேண்டும் என்று சொல்லித்தர தேவையில்லை. மின்சாரம் வானொலியில் சேர்ந்தால் ஒலியாக மாறும், தொலைக்காட்சி பெட்டியில் கலந்தால் ஒளியாக மாறும், பல்பில் கலந்தால் வெளிச்சத்தை உண்டாக்கும். மின்சாரத்திற்கு யாரும் எதுவும் சொல்லித்தர தேவையில்லை. இருக்கும் இடத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். அதைப்போல் ரெய்கி எந்த இடத்தில் கலந்தாலும் அங்கு இருக்கும் அனைத்து வகையான குறைகளையும் சரிப்படுத்தக்கூடிய அறிவும் ஆற்றலும் ரெய்கிக்கு உண்டு.

ஒரு இல்லத்தில் அல்லது வியாபார தலத்தில் ரெய்கி சேரும் போது அந்த இடத்தில் இருக்கும் அனைத்து வகையான தீய சக்திகளையும் விரட்டி அங்கே நல்ல சக்திகள் சேர வழி வகுக்கும். ஒரு மனிதனின் உடலில் ரெய்கி சேரும் போது அவன் உடலில் இருக்கும் நோய்களையும் மனதில் இருக்கும் துன்ப துயரங்களையும் அவலங்களையும் குணப்படுத்தி அவனுக்கு வாழ்க்கையில் அனைத்தும் சுலபமாக கிடைக்க வழிவகுக்கும். ரெய்கியை கொண்டு வெகு தொலைவில் உள்ளவர்களுக்கும் நோய்களை குணப்படுத்தலாம், உதவி செய்யலாம்.

ரெய்கியில் மூன்று நிலைகள் உள்ளன. ரெய்கி என்பது ஒரு குருவிடமிருந்து தீட்சை வாங்கி செய்ய வேண்டிய பயிற்சியாகும். முறையாக பயிற்சி பெற்ற, ரெய்கியை தெளிவாக அறிந்த குருவிடம் இருந்து முறையாக தீட்சை வாங்கி பயிற்சியை தொடங்குவது சிறப்பாகும்.

ரெய்கியை பயிற்சி செய்பவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இயற்கையையும் பிரபஞ்சத்தையும் நம்ப வேண்டும். எல்லா உயிர்களிடமும் அன்பாக இருக்கவேண்டும். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், இயற்கை என அனைத்துப் படைப்புகளின் மீதும் அன்பும் கருணையும் பொழிய வேண்டும். தனக்குள் இருக்கும் பிரபஞ்சத்தின் பேராற்றல் தான் நீக்கமற அனைத்து உயிர்களின் மீதும் அனைத்து பொருள்களின் மீதும் படர்ந்திருக்கிறது என்ற தெளிவான சிந்தனை இருக்க வேண்டும்.

ரெய்கியை பயிற்சி செய்பவர்கள் தினமும் தியானம் செய்ய வேண்டும். மனதை அமைதியாகவும் அன்பாகவும் வைத்திருக்க வேண்டும். பிரபஞ்சத்துடனும் இயற்கையுடனும் உறவாக தொடர்புடன் இருக்கும்போது அவர்களின் அத்தனை கட்டளைகளையும் ரெய்கி நிறைவேற்றும்.

ரெய்கி கற்றுக்கொள்ள விரும்புவார்களும் சிகிச்சை தேவைப்படுவோரும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

Healer Raja Mohamed Kassim
Whatsapp +6019-7724555
Email: healerrmk(a)gmail.com

 கட்டணம்
 மலேசியா
 இந்தியா
 பிற நாடுகள்
 சிகிச்சைக்கு
 RM100
 Rs300
 USD25
தொலைதூர தீட்சை
 RM299
 Rs1500
 USD100
 நேரடி பயிற்சி
 RM499
-
-