கேள்வி பதில்
கேள்வி பதில்

வெள்ளை சர்க்கரை (சீனி) மிகவும் ஆபத்தான பொருள்

உண்மையை சொல்வதானால் வெள்ளை சர்க்கரையை (சீனியை) உணவு என்று அழைக்கக் கூடாது. காரணம் வெள்ளை சர்க்கரையில் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பல இரசாயனங்கள் கலந்துள்ளன. வெள்ளை சர்க்கரை நன்மைகளை விடவும் தீமைகளையே அதிகமாக விளைவிக்கின்றன.

Coca-Cola, Pepsi போன்ற குளிர்பானங்களை கொண்டு கழிவறைகளை சுத்தம் செய்யலாம், இரும்புகளில் உள்ள கரைகளை போக்கலாம். அவற்றில் உடைந்த பல்லை ஊறவைத்து மறுநாள் சுத்தியலால் தட்டினால் பல் தூள் தூளாக நொருங்கிவிடும். இப்படி பல வீடியோக்கள் YouTube பில் உள்ளன (தேடிப் பாருங்கள்).

கழிவறைகளிலும், இரும்புகளிலும், தரையிலும் இருக்கும் கறைகளை போக்கும் தன்மையை அந்த குளிர்பானங்களுக்கு உண்டாக்கியது, அந்த குளிர்பானங்களில் கலந்திருக்கும் வெள்ளை சீனிதான். நாம் அருந்தும் ஒவ்வொரு குளிர்பானத்திலும் 20 முதல் 70 கிராம் வரையில் வெள்ளை சீனி கலக்கப் படுகிறது. அதாவது 10 முதல் 17 டீ கரண்டிகள் அளவு சீனி.

Coca-Cola, Pepsi, Milo, Horlicks, Boost, போன்ற பானங்கள் உடலுக்கு தீங்கணவை என்று பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளி வந்துள்ளன. இவ்வாறான பானங்களை அருந்தும் போது, உடலுக்கு தற்காலிக உற்சாகம் உண்டாவது உண்மைதான். ஆனால் அந்த உற்சாகம் உண்டாவதற்கும் காரணம் அவற்றில் கலந்திருக்கும் வெள்ளை சர்க்கரையே. சர்க்கரையில் இருக்கும் சிறிதளவு நல்ல குளுகோஸ் உடலுக்கு தற்காலிக உற்சாகத்தை வழங்குகிறது. ஆனால் பெரும்பான்மையாக இருக்கும் இரசாயனங்கள் உடலுக்கு தீங்கை விளைவிக்கின்றன.

நான் சொல்வதை செய்து பாருங்கள் உங்கள் கழிவறையில், கறையாக உள்ள பகுதியை ஈரமாக்கி, அதில் ஒரு கைப்பிடி வெள்ளை சீனியை தூவி, ஊறவிட்டு, பின் தேய்த்துப் பாருங்கள். டீவி விளம்பரங்களில் வரும் கழிவறை கழுவும் மருந்துகளை விடவும் சீனி அதிக பலனை தரும்.

மனிதர்களின் உடலில் உண்டாகும் பல வகையான நோய்களுக்கு வெள்ளை சர்க்கரை முக்கிய காரணமாக இருக்கிறது. கரும்புச் சாறு பச்சை வர்ணத்தில் இருக்கும் போது அதிலிருந்து தயாராகும் சீனி மட்டும் எவ்வாறு வெள்ளையாக இருக்கிறது?. அதற்கு காரணம் சீனியில் கலந்திருக்கும் இரசாயனங்கள். பச்சையாக இருக்கும் கரும்பு சாற்றில் Sulfur Dioxide, Phosphoric Acid, Calcium Hydroxide, Polyacrylamides போன்ற பல இராசயன பொருள் கலக்கப் படுகின்றன.

சர்க்கரையை வெண்மையாக்க, கரும்பு வாடையை நீக்க, தூசுகளை பிரிக்க, ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க, அழகாக கட்டம் கட்டமாக அச்சிட, பூச்சிகள் அண்டாமல் இருக்க இப்படி பல காரணங்களுக்காக இரசாயனங்கள் கலக்கப் படுகின்றன.

இந்த இரசாயனங்கள் மனிதனின் ஆரோக்கியத்துக்கு பல வகையான தீங்குகளை உண்டாக்குகின்றன. பற்கள் கறையாவது, பற்கள் சொத்தையாவது, கண் பார்வை மங்குவது, தொண்டை வலி, தோல் நோய்கள், ஆண்மை கோளாறுகள், கர்ப்பப்பை கோளாறுகள், சிறுநீரக பாதிப்புகள், சர்க்கரை நோய், நரம்பு தளர்ச்சி, கேன்சர், இன்னும் எத்தனையோ கெடுதல்களை இந்த இரசாயனங்கள் உண்டாக்குகின்றன.

வெள்ளை சர்க்கரையை தவிர்த்திடுங்கள். வெள்ளை சர்க்கரை அதிகமாக இருக்கும் உணவு மற்றும் பானங்களை தவிர்த்திடுங்கள். வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இயற்கையாக கிடைக்கும் பனை வெள்ளை, அச்சு வெள்ளம், கருப்பட்டி, தேன் போன்றவற்றை பயன்படுத்துங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.


« PREV
NEXT »

No comments