கேள்வி பதில்
கேள்வி பதில்

திருப்பெருந்துறை ஆலயத்தின் சிறப்புக்கள்

இறைவன் - ஸ்ரீ ஆத்மநாதர்
இறைவி - ஸ்ரீ யோகாம்பாள்

கோயிலை எழுப்பியவர் - ஸ்ரீ மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் வரலாறு
மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் மாணிக்கவாசகர் பிறந்தார். மாணிக்கவாசகரின் இயற்பெயர் தெரியவில்லை அவர் பிறந்த ஊரை ஒட்டி திருவாதவூரார் என்று குறிப்பிடப்படுகிறார். திருவாசகம் இயற்றியதால் மாணிக்கவாசகர் என்ற பெயர் இறைவனால் சூட்டப்பட்டது. இவர் மதுரையை அரசாண்ட அரிமர்த்தன பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்தவர். மன்னனின் ஆணைப்படி அரபு நாட்டு குதிரைகளை கொள்முதல் செய்ய தொண்டி துறைமுகத்துக்கு புறப்பட்டார்.

திருப்பெருந்துறையை அடைந்த பொழுது அங்கு ஒரு குரு சில சீடர்களுக்கு உபதேசம் வழங்கிக் கொண்டிருப்பதை கண்டார். இவரும் அருகில் அமர்ந்து உபதேசங்களை பெற்றுக்கொண்டார். பிறகு அந்த குரு மறைந்து போகவே அவர் மனித உருவில் வந்த சிவபெருமான் என்பதை உணர்ந்து அந்த இடத்தில் சிவபெருமானுக்காக ஒரு கோயிலை எழுப்பினார்.

குதிரைகளை வாங்கக் கொடுத்த பணத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பியதை அறிந்த மன்னர் திருவாதவூராரை சிறையில் அடைத்தார். மன்னர் குதிரைகள் எங்கே என்று வினவியபொழுது குதிரை வரும் என்று வாக்களித்தார் மாணிக்கவாசகர். சிறையிடப்பட்ட மாணிக்கவாசகரை மீட்டுவர சிவபெருமான் குதிரைகளை கொண்டு வந்து மன்னரிடம் கொடுத்துவிட்டு மாணிக்கவாசகரை மீட்டுச் சென்றார்.

விடுதலையான மாணிக்கவாசகர் இறைவனை நோக்கி பல பாடல்களை பாடினார். அவை திருவாசகம் எனும் நூலானது. இறுதியில் மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் ஜோதியுடன் இரண்டறக் கலந்தார்.

திருப்பெருந்துறை ஆலயத்தில் உள்ளே கருவறை அமைந்திருக்கும் பகுதிதான் மாணிக்கவாசகர் எழுப்பிய முதல் கோயில். பிறகு வந்த மன்னர்கள் பலர் அந்த கோயிலை விரிவாக்கம் செய்தனர். அதனை சுற்றி பெரிய கோயில்களையும், சிற்பங்களையும், மதில்களையும் அமைத்தனர். திருப்பெருந்துறை எனும் ஊர் தற்போது ஆவுடையார்கோயில் என்று அழைக்கப்படுகிறது.

(இந்த வரலாற்றை மிக சுருக்கமாக எழுதி உள்ளேன் ஆர்வமுள்ளவர்கள் தேடி விரிவாக படித்துக் கொள்ளவும்).

திருப்பெருந்துறை ஆலையத்தின் சிறப்பம்சங்கள்
1. திருப்பெருந்துறை ஆலயத்தில் நந்தி, கொடிமரம், மற்றும் பலிபீடம் கிடையாது.

2. இறைவனுக்கு உருவம் கிடையாது. சம்பிரதாயத்துக்காக ஆவடை மட்டுமே அருவுருவமாக.

3. அக்கினி, சூரியன், சந்திரன், மற்றும் நட்சத்திரங்கள் தீபங்களாக ஏற்றப்படுகின்றன.

4. கோயிலின் உள்ளே எந்த திசையில் இருந்தாலும் நமது நிழல் நம் மீது விழும். மிக நுண்ணிய சிறப்பான கட்டளைகளை.

5. சாமியின் முன் நிற்கும் பொழுது பக்தர்களின் நிழல் சாமியின் மீது விழுவதைப் போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

6. சாமிக்கு காட்டப்படும் கற்பூரம் சன்னதியை விட்டு வெளியே வராது.

7. சாதத்தை படைக்கல்லில் கொட்டி சாமிக்கு நெய்வேத்தியம் செய்கிறார்கள். புழுங்கல் அரிசி, கீரை மற்றும் பாகற்காயைக் கொண்டு படையல்.

8. அம்பாளுக்கும் சிலை கிடையாது திருவடி மட்டுமே சடங்குக்காக வைத்திருக்கிறார்கள்.

9. தெற்கு திசையை நோக்கிய சிவாலயம்.

10. குருந்த மரம் தல விருட்சம்

11. தாம்பூலத்தை திருப்பித்தராத சிவாலயம்.

12. ஆண்டுக்கு ஒருமுறை இலை போட்டு பொங்கல் படையல் வைக்கப்படும்.

13. சூரிய சந்திர கிரகண காலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

14. இந்தக் கோயிலில் பக்தனுக்கே முதலிடம் வழங்கப்படும். ஆணி மார்கழி போன்ற திருவிழாக்களில் மாணிக்கவாசகரே நகர் வலம் வருகிறார்.

திருப்பெருந்துறை ஆலயத்தில் காண வேண்டிய சிறப்புகள்
1. கோயிலின் நுழைவாயிலில் அமைந்திருக்கும் குரங்கு மற்றும் உடும்பின் சிற்பங்கள். இவை பக்தி மார்க்கத்தில் இருக்கும் இரண்டு வழிபாட்டு முறைகளை குறிக்கின்றன.

2. கொடுங்கை ஆறு வகையான கம்பிகளின் உருவில் செதுக்கப்பட்ட தாழ்வாரம். இன்று புழக்கத்தில் இருக்கும் கம்பிகளின் வடிவில் அன்றே கற்களைக் கொண்டு செதுக்கி இருக்கிறார்கள்.

3. மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிலைகள். நரம்பு எலும்பு ரேகைகள் நகங்கள் காலணிகள் நகைகள் என அனைத்தும் மிக தத்ரூபமாக வடிக்கப்பட்டிருக்கின்றன.

4. மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இருந்து மூன்று வகையான உபதேசங்களை பெற்ற சிற்பங்கள். நயனம் ஸ்பரிசம் மற்றும் திருவடி தீட்சை மூலமாக.

5. பல ஜீவராசிகள் இறைவனை வழிபடுவதைப் போன்ற சிற்பங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. வண்டு, மாடு, ஆடு, குரங்கு, மற்றும் யானை.

6. சிவன் பார்வதியுடன் தம்பதிகளாக காட்சிதரும் 1008 சிவாலயங்களின் ஓவியம்.

7. மராட்டியம் கிரேக்கம் எகிப்து கேரளா என பல நாட்டு குதிரைகளின் சிற்பங்கள்.

8. ஆயிரம் கால்களைக் கொண்ட இரண்டு தூண்கள்.

9. ஆறு யானைகளை ஒரே நேரத்தில் தூக்கி செல்லும் பறவைகளின் ஓவியம்.

10. 27 நட்சத்திரங்கள் உருவங்களாக பொறிக்கப்பட்டிருக்கின்றன.

11. இலை தழைகளைக் கொண்டு வரையப்பட்ட பச்சிலை ஓவியங்கள்.

12. ஆங்கிலேயர்களால் சோதித்து பார்ப்பதற்காகச் சுடப்பட்ட கொடுங்கை.

13. சேலைகளுக்கு பயன்படுத்தப்படும் ஜரிகை வேலைப்பாடுகள்.

14. பிடிப்பில்லாமல் நிற்கும் கற்பாறைகள்.

15. சப்த சுரங்களை எழுப்பக் கூடிய தூண்கள்.

16. ராசிகளுடன் கற்சங்கிலிகள்.

17. நடன முத்திரைகள்

18. கல்வெட்டுக்கள்

19. கல் தீப தூண்கள்.

20. நவக்கிரக தூண்கள்.

21. வில்லுடன் முருகன்

22. அண்டில் பறவை

இன்னும் காண வேண்டிய எத்தனையோ சிறப்பம்சங்கள் உள்ளன.

« PREV
NEXT »

No comments