கேள்வி பதில்
கேள்வி பதில்

சித்தர்கள் கூறிய தண்ணீரை சுடவைக்கும் முறைகள்

தண்ணீரை கொதிக்க வைத்து அருந்தக்கூடாது. தண்ணீரை கொதிக்க வைத்தால் தண்ணீரில் உள்ள உயிர் சத்துக்கள் அழிந்துவிடும் மற்றும் தண்ணீரில் உள்ள சத்து பொருட்கள் அனைத்தும் கெட்டுவிடும் என்று நாங்கள் கூறும் போது. வள்ளலார் அவர்கள் தண்ணீரை கொதிக்க வைத்துதான் அருந்த வேண்டும் என்று கூறினார் என்று சிலர் சொல்வார்கள்.

தேரையர் என்ற சித்தர் கூட தன் பாடலில்;
“திண்ணமி ரண்டுள்ளே சிக்கல டக்காமல்
பெண்ணின் பாலொன்றை பெருக்காமல்-உண்ணுங்கால்
நீர்கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி யுண்பார் தம்
பேருரைக்கில் போமே பிணி” – என்று கூறுகிறார்

மலம் மற்றும் சிறுநீரை அடக்காமல். பெண் போகத்தில் அதிகமாக ஈடுபடாமல். நீரை காய்ச்சியும், மோரை அதிகமாகவும், நெய்யை உருக்கியும் உட்கொண்டால், நோய்கள் குணமாகும் என்கிறார். தண்ணீரை கொதிக்க வைப்பது நன்மை இல்லை என்றால் ஏன் வள்ளலாரும் மற்றும் சில சித்தர்களும் தண்ணீரை சூடுபடுத்தி அருந்த வேண்டும் என்கிறார்கள்?.

சித்தர் பாடல்களையும், சித்த மருத்துவ முறைகளையும் ஆராயும்போது நாம் முக்கிமான சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அந்த சித்த மருத்துவ மருந்துகளை எவ்வாறு தயாரிக்க வேண்டும்?. அந்த சித்த மருத்துவ மருந்துகளையும், மருத்துவ முறைகளையும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?. இவை இரண்டையும் புரிந்து செய்தால் மட்டுமே அந்த மருத்துவம் பயன் தரும்.

வள்ளலாரும் சித்தர்களும் தண்ணீரை காய்ச்சி பயன்படுத்த வேண்டும் என்றார்கள் என்பதை மட்டும் அறிந்துக் கொண்ட பலர், தண்ணீரை எவ்வாறு காய்ச்ச வேண்டும் என்பதை சிந்திப்பதில்லை. அவர்கள் கூறியது எந்த நீரை என்பதையும் சிந்திப்பதில்லை. காய்ச்சிய தண்ணீரை எப்போது பயன்படுத்துவது என்பதும் சிந்திப்பதில்லை.

சித்தர்கள் காலத்திலும், வள்ளலார் காலத்திலும் இப்போது நாம் பயன்படுத்தும் நவீன கேஸ் அடுப்புகள் கிடையாது. இப்போது நாம் பயன்படுத்தும் steel மற்றும் aluminium பாத்திரங்களையும் அவர்கள் பயன்படுத்தவில்லை. அதனால் அந்த பாடல்களை பார்த்து இப்போது இருக்கும் பாத்திரங்களில் தண்ணீரை காய்ச்சினால் அவை மனிதர்களுக்கு உகந்த மருந்தாகவோ, நீராகவோ இருக்காது. அதைவிட முக்கியமான விசயம் சித்தர்கள் காய்ச்ச பயன்படுத்தியது குளத்து நீர் அல்லது ஆற்று நீர். அவற்றின் தன்மைகளும் இன்று நாம் பயன்படுத்தும் நீரின் தன்மைகளும் வெகுவாக மாறுபடும்.

சித்தர்கள் கூறும் தண்ணீரை காய்ச்சும் முறைகள்
சித்தர்கள் கூறிய வழிமுறையில் தண்ணீரை காய்ச்ச வேண்டுமானால், மண் பானையில் தண்ணீரை நிரப்பி, விறகடுப்பில் அல்லது கரியடுப்பில் தான் தண்ணீரை காய்ச்ச வேண்டும்.

விறகு அல்லது கரியடுப்பில் மண் பானையை பயன்படுத்தி தண்ணீரை காய்ச்சும் போது. லேசான சூட்டில் மண் பானை மெது மெதுவாக சூடேறும். மண் பானையில் தன்மையும், விறகடுப்பின் உஷ்ணமும், தண்ணீரும் ஒன்றாக சேரும் போது மட்டுமே அந்த நீர் மருந்தாக மாறும். மிதமான சூட்டில் சுடுவதினால் தண்ணீரின் உயிரும், உயிர் சத்துக்களும் சீர் கெடாமல் இருக்கும்.

இவ்வாறு சூடுபடுத்திய தண்ணீரை சுத்தமான மண்பானையில் நிரப்பி வைத்து அருந்தலாம். இவ்வாறு தயாரான நீர் உடலுக்கு மிகவும் நன்மையானது. மற்றபடி சில்வர் பாத்திரங்களில் தண்ணீரை சுட வைத்து அருந்துவதும். கேஸ் அடுப்புகளில் அல்லது அதிக சூட்டில் தண்ணீரை சுடுவதும் ஆரோக்கியமற்ற செயலாகும்.

« PREV
NEXT »

No comments