கேள்வி பதில்
கேள்வி பதில்

சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கு காரணம் என்ன?

சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கு காரணம் என்ன?. சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி? சிறுநீரக கற்களை எவ்வாறு குணப்படுத்துவது?.

சிறுநீரகம் என்ற உடனே அனைவர் நினைவுக்கும் வருவது தண்ணீர். தண்ணீரை மட்டுமே சிறுநீரகம் சுத்திகரிக்கிறது அல்லது தண்ணீரை சுத்திகரிப்பது தான் சிறுநீரகத்தின் வேலை என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சிறுநீரகத்தின் உண்மையான வேலை என்பது இரத்தத்தை சுத்தம் செய்வது.

நாம் அருந்தும் தண்ணீர் வாயில் இருந்து வயிற்றுக்குள் இறங்கி. வயிற்றில் ஜீரணிக்கப்பட்டு, வயிற்றிலிருந்து இரத்தத்தில் கலந்து, சிறுநீரகங்களுக்கு செல்கிறது. இரத்தத்துடன் கலந்து சிறுநீரகங்களுக்குச் செல்லும் அந்த தண்ணீரை தான் சிறுநீரகம் தூய்மைப்படுத்துகிறது. மற்றபடி நாம் அருந்தும் தண்ணீர் நேரடியாக சிறுநீரகங்களுக்கு செல்வதில்லை.

பலரும் தண்ணீரில் இருக்கும் கழிவுகள்தான் சிறுநீரகங்களில் கற்களாக சேருகின்றன என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். தண்ணீரை வடிகட்டி குடிக்க வேண்டும் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் அதில் அழுக்கு இருக்கும் கிருமிகள் இருக்கும் என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

குளத்து நீரையும் ஆற்று நீரையும் சாக்கடை நீரையும் அருந்தி வாழும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஏன் சிறுநீரகங்கள் பாதிப்பதில்லை என்று யாரும் சிந்திப்பதில்லை. சிறுநீரகங்களில் கற்களாக சேருபவை அனைத்தும் இரத்தத்திலிருந்து கிரகிக்கப்பட்ட அல்லது இரத்தத்திலிருந்து படிந்த கழிவுகளே.

நம் இரத்தத்தில் தண்ணீர் மட்டுமின்றி நாம் உண்ணும் ஒவ்வொரு உணவில் இருந்தும் பிரிக்கப்பட்ட சத்துக்களும் கலந்து இருக்கின்றன. மருந்து, மாத்திரைகள், இரசாயனங்கள், போன்றவற்றை உபயோகப்படுத்தும் போது அவையும் இரத்தத்தில் கலந்துவிடும். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், இரசாயனம் கலந்த உணவுகளையும், புட்டியில் அடைத்து, பாக்கெட்டுகளில் அடைத்து, விற்கப்படும் உணவுகளையும் உண்ணும் போதும். குளிர்பானங்களை அருந்தும் போதும். அவற்றில் இருக்கும் கழிவுகளும் இரசாயனங்களும் இரத்தத்தில் கலந்துவிடும். மது, புகையிலை, போதை பாக்குகள் போன்றவற்றை உட்கொள்ளும் போது அவையும் இரத்தத்தில் கலந்துவிடும்.

இவ்வாறு இரத்தத்தில் கலந்த பல வகையான கழிவுகளை சுத்திகரிப்பதட்காக இரத்தம் சிறுநீரகங்களுக்கு அனுப்பப்படுகிறது. சிறுநீரகங்களில் இரத்தம் சுத்திகரிக்கப்படும் போது சிறுநீரகங்களால் கூட தூய்மைப் படுத்த முடியாத அல்லது வெளியேற்ற முடியாத சில கழிவுகள் இருக்கும். அந்த சிறிய அணுக்கழிவுகள் சிறுநீரகங்களின் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும். பெரும்பாலான கழிவுகள் சில நாட்களிலேயே சிறுநீர் மூலமாக வெளியேறிவிடும். வெளியேற்ற முடியாத சிறுசிறு துகள்களாக இருந்த கழிவுகள் நாளடைவில் ஒன்று சேர்ந்து கற்களாக உருபெரும்.

உணவு முறைகளை மாற்றாமல். எத்தனை முறை மருந்து மாத்திரைகள் மூலமாகவோ. லேசர் சிகிச்சை மூலமாகவோ கற்களை வெளியேற்றினாலும். சிறுநீரகங்களில் கற்கள் மீண்டும் மீண்டும் உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன.

உணவு முறையையும் வாழ்க்கை முறையையும் சரிசெய்து. பசித்தால் மட்டும் உணவை உட்கொண்டு. வயிற்றால் எளிதாக ஜீரணிக்கக் கூடிய உணவுகளை மட்டுமே உட்கொண்டு. அதிக இனிப்பான பழங்களை உட்கொண்டு. இரவில் வெறும் வயிற்றுடன் விரைவாக உறங்கச் சென்றால். சில நாட்களிலேயே சிறுநீரகத்தின் கற்கள் உடைந்து வெளியேறிவிடும்.

புதிதாக கழிவுகளும் இரசாயனங்களும் சிறுநீரகங்களில் படியவிடாமல் பார்த்துக் கொண்டாலே ஏற்கனவே சிறுநீரகங்களில் படிந்திருக்கும் கழிவுகளை வெளியேற்றும் வேலையை உடலே கவனித்துக் கொள்ளும். அச்சப்பட தேவையில்லை.

« PREV
NEXT »

No comments