சில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்?

பெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிக மிக சாதாரண விசயம். நிற்பதை, நடப்பதை, ஓடுவதை, பேசுவதை, பார்ப்பதை, கேட்பதை, உணவு உண்பதை, போன்று பெண்கள் கர்ப்பம் தரிப்பதும் மிகவும் இயல்பாக நடக்கக் கூடிய விசயங்களில் ஒன்று. அறியாமையினாலும் வியாபார நோய்களினாலும் பெண்கள் கர்ப்பம் தரிப்பதையும் பெண்களின் கர்ப்ப காலங்களையும் ஏதோ மிகவும் ஆபத்தான ஆச்சரியமான விசயங்களில் ஒன்று என்பதை போன்ற ஒரு மாயையை உருவாக்கி விட்டார்கள் சில தரப்பினர்.

நம் முன்னோர்கள் சர்வ சாதாரணமாக பத்துப் பதினைந்து குழந்தைகளை பெற்றுக் கொண்டார்கள். முன்னோர்கள் என்று கூறியவுடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கி செல்லத் தேவையில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக கூட நம் குடும்பங்களில் பத்து குழந்தைகளை ஈன்ற தாய்மார்கள் இருந்தார்கள். குழந்தைகளை பெற்றுக் கொள்வது அவர்களுக்கு கடினமான விசயமாக இருக்கவில்லை.

ஆங்கில மருத்துவம் விரிவான பயன்பாட்டுக்கு வந்த பிறகுதான் நம் பெண்களுக்கு இந்த நிலைமை உருவானது. இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்வதையே ஒரு சாதனையைப் போல் எண்ணுகிறார்கள் சில பெண்கள். இதற்கு காரணம் கர்ப்பம் தரிக்க இயலாமலும், சுகப்பிரசவம் செய்ய இயலாமலும், ஆரோக்கியமான குழந்தைகளை ஈன்றெடுக்க இயலாமலும் பல பெண்கள் அவதிப்படுகிறார்கள். அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து பெருமை கொள்கிறார்கள்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரையில் மிக இயல்பாக நடந்து வந்த ஒரு விசயம் இப்போது திடீரென கடினமான ஒரு விசயமாக மாறியதற்கு என்ன காரணம்?

கர்ப்பம் தரிக்க இயலாமைக்கு பெரும்பாலும் ஆண்கள் காரணமாக இருக்க மாட்டார்கள். ஆணின் விந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது கர்ப்பம் தரிக்க இயலாமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம், என்று கூறுவது வெறும் வேடிக்கையான விசயம் மட்டுமே. ஒரு குழந்தை உருவாக ஒரு தரமான விந்து போதும். விந்து தரமாக இல்லையென்றால் ஆண்களுக்கு வீரியம் உருவாகாது. ஆணுக்கு வீரியம் இருக்கிறது என்றால் அவனின் விந்தால் குழந்தையை உருவாக்க முடியும் என்று அர்த்தம்.

பெரும்பாலும் குழந்தை உருவாகாமல் இருப்பதற்கு பெண்களே காரணமாக இருக்கிறார்கள். பெண்ணுறுப்பில் செலுத்தப்படும் விந்து சுயமாக நீந்திச் சென்று பெண்ணின் கருமுட்டையை அடையும் என்று பலர் நினைக்கிறார்கள். சில மருத்துவர்களும் இதைத்தான் கூறிவருகின்றனர். உண்மை என்னவென்றால் பெண்ணின் கருமுட்டை தான் ஆணின் விந்தை தன்பக்கம் கவர்ந்திழுக்கும். வெளியில் எவ்வாறு அழகான பெண்கள் ஆண்களை கவர்ந்திழுக்கிறார்களோ அதைப் போன்றே, கர்ப்பப்பையிலும் ஆரோக்கியமான கரு முட்டைகளே விந்தணுவை தன்பக்கம் கவர்ந்திழுக்கும். இரண்டும் சேர்ந்து குழந்தையாக உருவாகும்.

சிறுவயது முதலாக பெண் பிள்ளைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் அவர்கள் கர்ப்பம் தரிக்க இயலாமைக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. அடுத்ததாக அவர்களின் சிறு சிறு உடல் தொந்தரவுகளுக்கும் குழந்தை முதலாக கொடுக்கப்பட்ட மருந்துகளும் மாத்திரைகளும் அவற்றிலிருக்கும் இரசாயனங்களும் முக்கியமான காரணமாக அமைகின்றன.

சிறுவயது முதலாக பசியில்லாமல் கொடுக்கப்பட்ட உணவுகள், குழந்தைகளின் உடலில் நோய்களை உருவாக்குகின்றன. ஆண் பிள்ளைகளுக்கு வீரிய குறைபாட்டையும் பெண் பிள்ளைகளுக்கு கர்ப்பப்பையின் பலவீனத்தையும் உருவாகின்றன.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கருத்தரிக்க இயலாமல் இருப்பதற்கு இரண்டே முக்கிய காரணங்கள்தான் இருக்கின்றன. ஒன்று ஒரு குழந்தையை சுமந்து வளர்க்கும் அளவுக்கு அவர்களின் கர்ப்பப்பை ஆரோக்கியமாக இல்லை. அடுத்தது ஒரு குழந்தையை ஆரோக்கியமாக கர்ப்பப்பையில் வளர்த்து உருவாக்கும் அளவிற்கு அவர்களின் உடலில் சக்தி போதவில்லை. இவை இரண்டையும் சரி செய்தால் கர்ப்பம் தரிப்பதும் குழந்தையை ஈன்றெடுப்பது மிகவும் எளிதான காரியமாக இருக்கும்.

உடலின் ஆரோக்கியமும், சத்து உற்பத்தியும், செரிமானமும், மாதவிடாய் சுழற்சியும், முறைப்படுத்தப்பட்டால் மட்டுமே பெண்கள் எளிதாக கர்ப்பம் தரிக்க முடியும். இயற்கையாக இறைவன் கொடுத்த வழிமுறைகளை விட்டுவிட்டு செயற்கையாக கருத்தரிக்க முயல்வது முட்டாள்தனம் அன்றி வேறில்லை. கர்ப்பம் தரிக்க இயலாத பெண்களே இந்த உலகில் கிடையாது. அனைத்து பெண்களாலும் கர்ப்பம் தரிக்க முடியும். அழகான ஆரோக்கியமான நல்ல குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். இதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் பொருட்களை வாங்க கடைக்குச் சென்றால் எவ்வாறு அந்த பொருட்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து வாங்குவீர்களோ அதைப்போன்றே இயற்கையும் ஒரு குழந்தையை இந்த மண்ணில் படைக்கும் போது சிறந்த கர்ப்பப்பையையே தேர்ந்தெடுக்கும். ஆரோக்கியமான நிலத்தில் நல்ல விளைச்சல் உருவாவதைப் போன்று ஆரோக்கியமான கர்ப்பப்பையில் மட்டுமே ஆரோக்கியமான குழந்தைகள் உருவாகும்.

கர்ப்பம் தரிக்க எண்ணம் கொண்ட பெண்கள் முதலில் அனைத்து வகையான மருத்துவ முறைகளையும் தவிர்க்க வேண்டும். இதுவரையில் பயன்படுத்தி வந்த அனைத்து மருந்து மாத்திரைகளையும் நிறுத்த வேண்டும். குறிப்பாக ஆங்கில மருத்துவத்தின் பக்கமே தலைவைத்தும் படுக்கக் கூடாது.

வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளை மாற்றவேண்டும். பசித்தால் மட்டுமே உணவை பசியின் அளவுக்கு உட்கொள்ள வேண்டும். தாகம் இல்லாமல் தண்ணீர் அருந்தக்கூடாது. தேவையில்லாமல் உடற்பயிற்சி செய்யக் கூடாது. இரவில் ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கைக்கு சென்று விட வேண்டும்.

உடலின் சத்துக்களையும் சக்தியையும் மேம்படுத்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாக உட்கொள்ள வேண்டும். இரவில் வெறும் வயிற்றுடன் படுக்கைக்கு செல்ல வேண்டும்.

இவற்றை பின்பற்றினால் கர்ப்பப்பை சுத்தமாகி, பலமடைந்து இறைவனின் அருளால் கர்ப்பம் தரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இறைவனை நம்புங்கள், இயற்கையை நம்புங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்.

To Top