கேள்வி பதில்
கேள்வி பதில்

சைவ உணவு முறைகளின் சந்தேகங்களும் விளக்கங்களும்

சைவ உணவுகளை மட்டுமே உண்பவர்களின் சந்தேகங்களுக்கு சில விளக்கங்கள். 

சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்கள் பலகீனமானவர்களா?. சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு சத்துக் குறைபாடுகள் ஏற்படுமா?. அவர்களுக்கு தனியாக ஊட்டச்சத்து மாத்திரைகள் தேவைப்படுமா?. மாமிசங்களில் மட்டுமே கிடைக்கக் கூடிய சத்துக்கள் அவர்களுக்கு கிடைக்காமல் போகுமா?. இந்த கட்டுரையை வாசியுங்கள் சைவ உணவைப் பற்றிய பல ஐயங்கள் தீரும்.

சைவ உணவுகளை மட்டுமே உண்பவர்கள் பலகீனமானவர்களா?

சைவ உணவுகளை மட்டுமே உண்பவர்களை பலகீனமானவர்கள் போன்ற ஒரு பிம்பம் நம்மில் பலருக்கு உண்டு. அவ்வளவு ஏன், சைவ உணவுகளை உண்பவர்களில் சிலர் கூட தங்களை பலகீனமானவர்கள் என்று நம்பிக்கொண்டிருப்பார்கள். உண்மையை சொல்வதானால் சைவ உணவுகளை சாப்பிடுபவர்கள் அசைவம் சாப்பிடுபவர்களை விடவும் ஆரோக்கியமாகவும் பலசாலிகளாகவும் இருப்பார்கள், இருக்கவும் வேண்டும்.

சைவ உணவுகளை உண்பவர்கள் பலகீனமாக உணர்வதற்கு காரணம் அவர்களின் மனம். உளவியல் ரீதியாக அவர்கள் பலகீனப்படுத்தப் படுகிறார்கள். சமுதாய ரீதியாகவும், மத ரீதியாகவும், நம்பிக்கை ரீதியாகவும், சினிமா பத்திரிக்கைகள் போன்ற ஊடகங்கள் மூலமாகவும், சைவம் உண்பவர்கள் பலகீனப்படுத்தப் என்று நம்ப வைத்திருக்கிறார்கள். அது நம்பும் சைவம் உண்பவர்கள் பலவீனமாக உணர்கிறார்கள்.

சைவ உணவை பலகீனமாக நினைப்பவர்கள் சற்று சிந்தியுங்கள். நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகவும் பலசாலியான விலங்கு எது? யானை தானே? யானை சைவமா அசைவமா?. நிலத்தில் வாழும் விலங்குகளில் ஆற்றல் அதிகமாக உள்ள விலங்கு எது குதிரை தானே? குதிரை சைவமா அசைவமா?. மனிதர்களுடன் சேர்ந்து அதிகமாகவும், கடுமையாகவும், உழைக்கும் விளங்கு காளை மாடு? காளை மாடு சைவமா அசைவமா?. நிலத்தில் வாழும் விலங்குகளில் மிக அதிக பலசாலிகளும், உழைப்பாளிகளும் சைவ உணவுகளை உண்ணும் விலங்குகள்தான்.

சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு சத்துக் குறைபாடுகள் ஏற்படுமா?

மனிதர்களின் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டுமே முழுமையாக உள்ளன. அசைவம் உண்பவர்களுக்கு சில சத்து பற்றாகுறைகள் ஏற்படலாம் ஆனால் சைவம் மட்டுமே உண்பவர்களுக்கு சத்து பற்றாகுறைகள் நிச்சயமாக உண்டாகாது. உணவுகளை பொறுமையாக மென்று விழுங்காமல் விழுங்குபவர்களுக்கு வேண்டுமானால் சத்துகள் பத்தாமல் போகலாம். அதற்கு காரணம் உண்ணும் முறையே அன்றி சைவ உணவு அல்ல.

சைவம் சாப்பிடுபவர்களுக்கு சத்து பற்றாக்குறைகள் உண்டாகும் என கூறி முட்டை, மீன், இறைச்சி போன்ற வற்றை சாப்பிட பரிந்துரைப்பது அறியாமையே அன்றி வேறில்லை.

சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு தனியாக ஊட்டச்சத்து மாத்திரைகள் தேவைப்படுமா?

சைவம் சாப்பிடுபவர்களில் சிலர் தங்கள் உடலுக்கு சத்து பற்றாக்குறைக்கு ஏற்படும் என்று பயந்து சில சத்து மாத்திரைகளை உட்கொள்வதுண்டு. மருத்துவர்கள் கூட சில வேளைகளில் சைவம் சாப்பிடுபவர்களுக்கு சில சத்து மாத்திரைகளை பரிந்துரைப்பதுண்டு.

சைவம் உண்பவர்களுக்கு சத்து மாத்திரைகளை பரிந்துரைக்கும் மருத்துவர்கள் கூட நோயாளிகளுக்கு நோய்கள் விரைவில் குணமாக காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாக உண்ணுங்கள் என்றுதான் அறிவுரை கூறுவார்கள்.

இந்த உலகில் எந்த ஒரு மருத்துவரும் தனது நோயாளிகளுக்கு உங்கள் நோய்கள் குணமாக வேண்டும் என்றால் அதிகமாக மாமிசங்களை உண்ணுங்கள் என்று பரிந்துரைக்க மாட்டார்கள்; மாறாக மாமிசங்கள் உண்ணுவதை நிறுத்துங்கள் என்று தான் பரிந்துரைப்பார்கள். நோயாளிகள் மாமிசம் உட்கொண்டால் நோய்கள் இன்னும் அதிகரிக்கும் நோய்கள் குணமாக தாமதமாகும் என்பதால்தானே மருத்துவர்கள் அவற்றை தவிர்க்க சொல்கிறார்கள்.

இயல்பான வாழ்க்கை முறையினால் மாமிசங்களை தவிர்பவர்களுக்கு உடலில் எந்த சத்து குறைபாடும் உண்டாகாது. அதனால் அவர்களுக்கு தனியாக எந்த சத்து மாத்திரைகள் தேவையில்லை. சத்து மாத்திரைகளை பரிந்துரைப்பது வெறும் வியாபாரமே அன்றி வேறொன்றும் கிடையாது.

மாமிசங்களில் மட்டுமே கிடைக்கக் கூடிய சத்துக்கள் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு கிடைக்காமல் போகுமா?

மனிதர்களின் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களையும் அவர்கள் உட்கொள்ளும் உணவிலிருந்து, அவர்களின் உடல் தானாக உற்பத்தி செய்து கொள்கிறது.

விட்டமின் கிடைக்க இந்த உணவு, கொழுப்பு கிடைக்க இந்த உணவு, புரோட்டின் கிடைக்க இந்த உணவு, என்று எந்த உணவுக் கட்டுப்பாடும் தேவையில்லை. உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ, உங்களிடம் என்ன இருக்கிறதோ, அதை உட்கொண்டால்; உடலுக்கு என்ன தேவையோ அதை சுயமாக உடலே உற்பத்தி செய்து கொள்ளும்.

உடலுக்கு தேவைப்பட்டால் காய்கறிகளில் இருந்து கூட கொழுப்பை உற்பத்தி செய்ய உடலால் முடியும். அதனால் வியாபார வலைகளிலும் அறியாமையிலும் சிக்கி ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

நம்மை சுற்றி வாழும் விலங்கினங்களை பாருங்கள். சைவம் மட்டுமே உட்கொள்ளும் விலங்குகள் வெறும் புல்லில் இருந்தோ, இலையில் இருந்தோ, கொள்ளில் இருந்தோ, தவுட்டில் இருந்தோ, தனக்கு தேவையான அத்தனை சத்துக்களையும் உற்பத்தி செய்து கொள்ளும் போது. பழங்களிலும் காய்கறிகளில் இருந்து மனிதர்களின் உடல் அதற்கு தேவையான சத்துக்களை உற்பத்தி செய்து கொள்ள முடியாதா? சிந்தியுங்கள்!.

« PREV
NEXT »

No comments