கேள்வி பதில்
கேள்வி பதில்

மனிதர்கள் தாவர உண்ணியா? மாமிச உண்ணியா?

இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் சைவம் அல்லது அசைவம், இவை இரண்டில் ஏதோ ஒன்றை சார்ந்து இருக்கின்றன. ஒரு விலங்கினத்தில் உள்ள அத்தனை விலங்குகளும் முழுமையாக சைவ உணவுகளை உட்கொள்ளும் அல்லது அனைத்து விலங்குகளும் அசைவ உணவுகளை உட்கொள்ளும். குரங்கு, கரடி போன்ற ஒரு சில விலங்குகள் மட்டுமே இரண்டையுமே உட்கொள்ளும். அவற்றை அனைத்துண்ணி என்று அழைப்பார்கள்.

இயற்கையின் படைப்பில் மனிதர்கள் தாவர உண்ணியா? மாமிச உண்ணியா?. எந்த உணவு மனிதர்களுக்கு மிகவும் உகந்த ஆரோக்கியமான உணவாகும்?. தாவர உண்ணிகள் காய்கள், கனிகள், இலைகள், புற்கள், பட்டைகள் போன்றவற்றை உண்டு வாழ்பவை. மாமிச உண்ணிகள் விலங்குகளின் இறைச்சிகள், மீன்கள், பறவைகள் போன்ற மற்ற உயிரினங்களை உண்டு வாழ்பவை.

ஒரு உயிரினத்தின் உணவுப் பழக்கமானது அதன் உடல் அமைப்பையும், வாழும் சூழலையும் பொறுத்தே அமைகிறது. மனிதர்களின் உடலமைப்பைக் கொண்டு அவர்கள் தாவர உண்ணியா? அல்லது மாமிச உண்ணியா? என்பதை ஆராய்வோம்.

உணவை உட்கொள்ள மிக முக்கியமானவை பற்கள். மனிதர்களின் பல் வரிசை மாமிச உண்ணிகளை போன்று அமைந்துள்ளதா? தாவர உண்ணிகளை போன்று அமைந்துள்ளதா?. மனிதர்களின் பல் வரிசை ஆடு, மாடு, குதிரைகளைப் போன்ற தாவர உண்ணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் பற்களை போன்றே தட்டையாக அமைந்துள்ளது. அசைவம் உண்ணும் விலங்குகளுக்கு இருப்பதைப் போன்ற கூர்மையான பற்கள் மனிதர்களுக்கு கிடையாது.

மாமிசம் உண்ணும் விலங்குகள் வேட்டையாடுவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் கூர்மையான நகங்கள் மனிதர்களுக்கு கிடையாது. மனிதர்களின் நகங்கள் தாவர உண்ணிகளை போன்று தட்டையாகவும் கூர்மை இல்லாமலும் இருக்கின்றன.

அசைவம் உண்ணும் விலங்குகளுக்கு குடலின் நீளம் குறைவாக இருக்கும். தாவரம் உண்ணும் விலங்குகளின் குடலின் நீளம் அதிகமாக இருக்கும். மனிதர்களின் குடலின் அமைப்பும் தாவர உண்ணி விலங்குகளை போன்று நீளமாக அமைந்திருக்கிறது.

தாவரம் உண்ணும் உயிரினங்கள் தண்ணீரை வாயால் உரிந்து குடிக்கும். அசைவம் உண்ணும் உயிரினங்கள் தண்ணீரை நாவால் நக்கி குடிக்கும். மனிதர்கள் தண்ணீரை நக்கி குடிப்பதில்லை மாறாக உறிஞ்சியே குடிக்கிறார்கள்.

எந்த வகையில் ஆராய்ந்தாலும் மனிதர்களின் உடலமைப்பு பெரும்பாலும் தாவர உண்ணி விலங்குகளை ஒத்ததை போலவே அமைந்துள்ளது. மனிதர்களுக்கு அசைவம் உண்ணும் விலங்குகளின் எந்த உடலமைப்பும் இருப்பதில்லை.

மனிதர்கள் காய்கள், கனிகள், தாவரங்கள் போன்றவை இல்லாத இடங்களில் வாழ நேரிடும்போதும். பஞ்சம், கோடை, வறுமை, இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போதும். அடர்ந்த காடுகள், பாலை நிலங்கள், கடல் கறைகள் போன்ற தாவரங்கள் இல்லாத இடங்களில் வாழ நேரிடும் போதும், மாமிசங்களை நிர்பந்தத்தின் சூழலில் உண்ண தொடங்கினார்கள். நாளடைவில் மாமிசம் உண்ண பழகி கொண்டார்கள்.

மனிதர்களின் உடலானது பொறுமையாக மென்று விழுங்கினால், பெரும்பாலும் அனைத்து வகையான உணவுகளையும் சீரணிக்க கூடிய தன்மையில் இருக்கிறது. ஆனாலும் இயற்கை மனிதர்களை தாவர உண்ணியாக அதாவது சைவமாகவே படைத்திருக்கிறது. தாவரங்களில் பழங்களே இயற்கை மனிதர்களுக்கு வகுத்து தந்த உண்மையான உணவாகும்.

« PREV
NEXT »

No comments