புதியவை
latest

இரத்த அழுத்தம் உடலுக்கு தீமையானதா?

உடலில் எவ்வளவு இரத்தம் இருக்க வேண்டும்?. அந்த இரத்தம் எந்த தன்மையில் இருக்க வேண்டும்?. இரத்தத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும்?. உண்ணும் உணவை எவ்வாறு இரத்தமாக மாற்ற வேண்டும்?. எந்த உறுப்புக்கு எவ்வளவு இரத்தம் தேவை?. இரத்தத்தில் எவ்வளவு சத்துப் பொருட்களை கலக்க வேண்டும். இதயம் எவ்வாறு துடிக்க வேண்டும்?. எவ்வாறு இரத்தத்தை உடல் முழுதும் செலுத்த வேண்டும்?.

இரத்தத்தில் இருக்கும் அழுக்குகளை எவ்வாறு சிறுநீரகம் சுத்திகரிக்க வேண்டும்?. சுத்திகரித்த அழுக்குகளை எவ்வாறு உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும்?. உடலானது கழிவுகளை வெளியேறும் வரையில் உடலுக்கு எந்த பாதிப்பும் உருவாக்காமல் எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?. இவ்வாறான அனைத்து அறிவும், இதற்கு மேலான பல மடங்கு அறிவும் மனித உடலுக்கு உண்டு.

எப்போது உடலையும் மனதையும் முழுமையாக அறியாத ஆங்கில மருத்துவர்களை நம்பி மக்கள் உடலையும், மனதையும், நம்பிக்கையையும் ஒப்படைத்தார்களோ, அந்த நம்பிக்கைதான் மக்களின் ஆரோக்கியத்திற்கு குழிதோண்ட தொடங்கியது.

இரத்தத்தை அதிகமாகவும் அவசரமாகவும் உடலின் உறுப்புகளுக்கு செலுத்த வேண்டிய சூழ்நிலை உடலில் ஏற்பட்டால். இருதயம் வேகமாக துடித்து இரத்தத்தை விரைவாக அந்த குறிப்பிட்ட உறுப்புக்கு அனுப்பிவைக்கும். உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இது மிகவும் முக்கியமான நன்மையான செயலாகும். இதில் என்ன தவறு இருக்கிறது?. இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது சில வேளைகளில் தலை சுற்றல் உருவாகலாம். தலை சுற்றலோ தலைவலியோ உருவானால், சாப்பிடாமல் ஓய்வெடுக்க வேண்டுமே ஒழிய இரத்த அழுத்தத்தை தடுக்க கூடாது.

ஒன்றை தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள். உடல் ஒரு போதும் தவறுகளை செய்யாது. தவறுகளை செய்வது முழுவதும் மனிதர்கள் தான். மனிதர்கள் செய்த தவறுகளுக்கு பழி உடலின் மீது கூறப் படுகிறது. ஒருவருக்கு உடலில் இரத்த அழுத்தம் உயர்கிறது என்றால், அதற்கு பல முக்கியமான காரணங்கள் இருக்கும். உதாரணமாக.

1. உடல் உழைப்பு அதிகமாக இருக்கலாம்.
2. உடல் சோர்வு அதிகமாக இருக்கலாம்.
3. உடல் உறுப்புக்களில் பாதிப்பு இருக்கலாம்.
4. உடல் உறுப்புக்கள் நோய்வாய் பட்டிருக்கலாம்.
5. குணப்படுத்த வேண்டிய பகுதிக்கு அதிக சத்துக்களை அனுப்பலாம்.
6. உடலில் நோய்களை குணப்படுத்தும் வேலைகள் நடக்கலாம்.
7. உடலில் கற்று சக்தி குறைவாக இருக்கலாம்.
8. உடலில் சத்துக்கள் குறைவாக இருக்கலாம்.

இன்னும் எத்தனையோ முக்கியமான காரணங்கள் இருக்கலாம்.

இவ்வாறு நம் உடலுக்கு நன்மைகளை மட்டுமே செய்யக் கூடிய, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உருவாகும் இரத்த அழுத்தத்தை நோய் என்றும். இதை (High BP), உயர் இரத்த அழுத்தம் என்றும் பெயரிட்டு நம்மை மேலும் மேலும் நோயாளிகளாக மாற்றுகிறார்கள். நாமும் அவர்களை நம்பி மாத்திரை மருந்துகள் என்ற பெயரில் இரசாயனங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறோம்.

நம் அன்புக்குறிய ஒருவருக்கு ஒரு ஆபத்து ஏற்பட்டால், இயல்பாக மெதுவாக நடந்து செல்வோமா? வேகமாக ஓடிச் சென்று உதவுவோமா?. இறக்கை இருந்தால் பறந்து கூட செல்வோம் அல்லவா? அதைத்தான் இருதயம் செய்கிறது. பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு விரைவாக இரத்தத்தையும் சத்துகளையும் அனுப்புகிறது. போர்கால அவசர அடிப்படையில் இந்த செயல் நடைபெறுவதால் இரத்த அழுத்தம் உயர்கிறது.

இரத்த அழுத்தத்தை நோய் என்று நம்பி அதை தடுக்க, குறைக்க இரசாயனங்களை விழுங்குபவர்கள் நன்றாக ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மேலும் மோசமான நோயாளிகளாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள். நோய் கண்ட உறுப்புகள் சரி செய்யப்படாமல் மேலும் பழுதடைகிறது. இந்த கேடு மற்ற ஆரோக்கியமான உறுப்புகளுக்கும் பரவ வாய்ப்புண்டு. இரத்த அழுத்தத்தை தடுப்பது இருதயத்தை பாதித்துவிடும், ஜாக்கிரதை.

பாதிக்கப்பட்ட உறுப்புகள் சரி செய்யப்பட்டால், அல்லது குணமானவுடன், நோய்கள் குணமானவுடன், குறைந்த சக்தி மீண்டவுடன், உயர் இரத்த அழுத்தம் சுயமாக குறையும். உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்கிய உடலுக்கு அதைக் குறைக்கும் வழி தெரியாதா? நிச்சயமாக தெரியும். கண்டிப்பாகக் குணமாகும்.

« PREV
NEXT »

No comments