கேள்வி பதில்
கேள்வி பதில்

ஆங்கில மொழியில் புலமை பெற எளிதான வழிமுறைகள்

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் எனது சீன ஆசிரியர் திரு தான் (Mr Tan) அவர்கள் ஆங்கில மொழியில் புலமை பெறுவதற்கான சில வழி முறைகளை கற்றுத் தந்தார்கள். அந்த வழிமுறைகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த வழிமுறைகளை எந்த மொழியில் புலமை பெறுவதற்கும் பயன்படுத்தலாம்.

முதலில் வாரம் ஒருமுறையாவது ஒரு ஆங்கில நாளிதழையும் தமிழ் நாளிதழையும் வாங்க வேண்டும். தமிழ் நாளிதழில் வெளிவந்திருக்கும் செய்தியை வாசித்து விட்டு பின்பு ஆங்கில நாளிதழில் வெளிவந்திருக்கும் அதே செய்தியை வாசிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஆங்கிலத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது எளிதாகப் புரிந்துக் கொள்ளலாம்.

அடுத்தது ஆங்கில கட்டுரைகளை வாசிக்க வேண்டும். அர்த்தம் புரியாத சொற்களை கோடிட்டு அதன் அர்த்தத்தை அகராதியில் தேடி எழுதிக் கொள்ள வேண்டும். பின்பு மீண்டும் அந்த கட்டுரையை வாசிக்க வேண்டும். இவ்வாறு வாசிக்கும் போது அதிகமான புதிய சொற்களை கற்றுக் கொள்ளலாம்.

பள்ளியில் நண்பர்களுடனும் வீட்டில் குடும்பத்தாருடனும் ஆங்கிலத்தில் பேசி பழக்க வேண்டும். தவறாக பேசினாலும் பரவாயில்லை. முதலில் பேசி பழக வேண்டும் அப்போதுதான் அச்சம் விலகும். ஆங்கிலத்தில் ஆர்வமுள்ள நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு முழுமையாக ஆங்கிலத்தில் பேசி பழகலாம்.

இது மிக முக்கியமான விஷயம். சிந்திப்பதை ஆங்கிலத்தில் மற்ற வேண்டும். சுயமாக எதை சிந்தித்தாலும். தன்னுடனே எதையாவது பேசினாலும் ஆங்கிலத்தில் பேசி பழக்க வேண்டும். ஆங்கில நாளிதழ்கள், பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களை வாசிக்க தொடங்க வேண்டும். புத்தகங்கள் சிறிதாக இருப்பது நல்லது.

இவற்றை முயற்சி செய்துபாருங்கள் எளிதாக ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம். உங்கள் பிள்ளைகளுக்கும் இவற்றை கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

« PREV
NEXT »

No comments